பொறியியலில் வென்ற அறிவியல்
உன் ஆக்சிஜன் பிரிந்ததால்,
உலக மக்களின் விழிகளில் அமில மழை....
உன் புத்தியீர்ப்பு விசையிடம்,
புவியீர்ப்பு விசையும் தோற்றுவிடும்.....
ஒரு ஏழையின் மூளை,
ஏவுகணையாகி விண்ணைத் தொட்டது.....
நீ அனுப்பிய அறிவியல் பறவைகளெல்லாம்,
அக்னிச் சிறகுகளை விரித்து,
வானில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றது....
ஆய்வுக் கூடங்களே உன் படுக்கையறை,
அறிவியலே உன் ஆசை மனைவி,
அவளை தலை முதல் கால் வரை,
ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி நீ....
உன் முதலிரவு மட்டுமல்ல,
முழு இரவும் இவளோடு தான்....
அறிவியலில் எத்தனையோ,
மூலக்கூறுகள் இருக்கலாம் - ஆனால்
அறிவியலின் மூலக்கூறு நீ....
கோவிலின் கருவறையை விட புனிதமானது,
உனது அறிவுரைகள்.....
உனது எழுச்சித் தீபங்களால்,
இருள்களெல்லாம் மூழ்கிப்போனது....
இயந்திரக்கோளாறை சரி செய்யும் உனக்கு
இதயக்கோளறு.....
நீ ஆங்கிலேயனையும் ஆட்டிப்படைத்த
தமிழ் வரலாறு......
இயற்பியல் முடித்த பொறியியல் நீ.....!
பொறியியலில் வென்ற அறிவியல் நீ.....!
தாவரவியலை வளர்க்கச் சொன்ன புவியியல் நீ.....!
வேதியியலைக் கொண்டு உயிரியலை அழிக்காதவர் நீ......