முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
இடம்:  ஓட்டமாவடி-03 இலங்கை
பிறந்த தேதி :  28-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  6301
புள்ளி:  5479

என்னைப் பற்றி...

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மண்ணின் மடியில் உயிர்களை படைத்து
விண்ணின் குடையில் நிலவை சமைத்து
எழுத்தின் ஆற்றலை எனக்குள் புதைத்த
வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்.

கருவின் அறையில் என்னை சுமந்தாள்
அன்பின் பள்ளியில் இன்றுவரை சுமக்கிறாள்
கண்ணீர் சிந்தினால் கண்களை எனக்காய்
தந்திடும் தாய் எனும் பாதம் தொடுகிறேன்.

வியர்வை சிந்தி உயிராய் வளர்த்தான்
மடியின் மீது என்னை சுமந்து அணைத்தான்
நிலவை கேட்டால் வானம் வாங்கித்தரும்
என் தந்தையின் உள்ளத்தை தொழுகிறேன்.

அழகான சோலை போல் சின்ன தங்கையும்
அதை காக்கும் வேலியாய் சில சொந்தமும்
கதை பேசும் மொழியாய் பல உறவின் ராகமும்
என்னை ஆளும் சிறையில்லாத விளங்குகள்.

துன்பம் என்றால் தோள் கொடுக்கும் நண்பனும்
இன்பம் வந்தால் அதை பகிரும் என் உள்ளமும்
கண்கள் வழியே சில காதல் எனும் கற்பனையும்
வண்ணம் எனும் சிலந்தி வலையின் துணை நான்

கடலுடன் தினம் மொழியில்லாமல் பேசுவேன்
நிழலுடன் உருவம் பார்த்து நிதர்சனம் கற்பேன்
மலர்களின் முகத்தின் மேல் பனித்துளிகளால்
பருக்கள் வைத்து ரசிக்கும் இளைஞனும் நான்

ஓடும் குதிரையின் வேகம் போல் நடப்பேன்
தவழும் ஆமையின் வேகம் போல் ஓடுவேன்
தோல்வி வந்தாலும் வெற்றி வந்தாலும் கண்கள்
கசக்காதமனம் நோகும் உள்ளமும் என்னுடையது.

எழுத்தின் மேல் காதல் கொண்ட தீவிரவாதி
கற்பனையோடு யுத்தம் செய்யும் காகிதக்காரன்
உணர்வுகளோடு வெற்றி பெரும் பேனாக்காரன்
காதலில் தோற்க ஆசைப்படும் மிதந்தாவாதி

தமிழ் என்றால் என்னுயிரெனக் கருதுகிறேன்
அதன் மடியில் இறக்கும் வரை வாழ ஆசை
சினிமா எனும் உலகில் நானும் ஒரு பாடல்
இயற்றும் வாலியாய் என்றும் வாழ்வது இலட்சியம்

கண்கள் இருப்பதற்காய் தினமும் அழுகிறேன்
உள்ளம் இருப்பதற்காய் கனவில் மிதக்கிறேன்
பேனா இருக்கிறது என்பதால் உயிரோடு பேசுகிறேன்
தமிழோடு வாழ் நாள் முடியும் வரை வாழ்ந்திடுவேன்.

குயில்கள் என் தோழர்கள் இசையின் ஆசான்கள்
மயில்கள் என் பகைவர்கள் நடனத்தின் காதலர்கள்
கிளிகள் என் கற்பனைகள் அடைக்கப்பட்ட கூண்டில்
மைனாக்கள் என் மொழிகள் தனிமை அரங்கில்.......,

சங்கமின்றி தமிழ் வாழும் இடத்தில் வாழ்ந்திடுவேன்
காலத்தால் பல போதனைகள் அறிவாய் பெற்றிடுவேன்
மரணம் என்று என்னை ஆள்கிறதோ அன்று என் விரல்
பிடித்த பேனாவின் மீசையில் மண் ஓட்டும் என்பேன்.

தமிழும் நானும் ஒன்றாய் பிறந்த குழுந்தைகள்
நான் தவழும் போது அது என் மேல் நடக்கிறது.
நான் ஓடும் போது அதுவும் என்னுடன் இணைந்திருக்கும்
கைகளில் தமிழ் உயிரில் தமிழ் எல்லாம் தமிழ் எனக்கு

என் உயிருக்கு தமிழ் மீது அளப்பெரிய காதல்
என் உயிர் மீது என் தாய் தமிழுக்கு தினந்தினம் காதல்
என்னுடன் உலகின் வசைகள் எறியப்பட்டு உடைக்கப்படுகிறது
ஆனால் நான் மட்டும் காயங்களுடன் வாழ்க்கை வாழ்கிறேன்

என் படைப்புகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் செய்திகள்

தனிமையில் முளைக்கும் கவிதைகள்

தெரிந்த நினைவுகளிலிருந்தே
துவங்குகிறேன்

பள்ளி பருவத்து
ஆண்பால் பெண்பால் நண்பர்கள்

ஊரில் சேர்ந்து சுற்றிய
உறவுகள்

கல்லூரியில் கலந்து கலைந்த
பறவைகள்

பெற்றோர் உடன் பிறப்புகள்
மனைவி குழந்தைகள்
உறவுகள் ஊர்மக்கள்

நிகழ்காலத்து நட்புகள்
கடந்தகாலத்து காயங்கள்
சமுதாய நிகழ்வுகள்

அன்பு வெறுப்பு
காதல் காமம்
நட்பு துரோகம்
ஆசை நோய் துன்பம்

அனைத்துமே முடிவில்
என்னுள்
கவிதைகள் முளைக்கும்
தனிமையை மட்டுமே
விதைத்து செல்கின்றன

மேலும்

தனிமை எனும் பூங்காற்று மனதிற்குள் நுழைந்ததால் தான் வாழ்க்கை அர்த்தமானதாக மாறுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 1:40 am

அந்தமிழ்த் தாயின் அருந்தவச் செல்வன்நீ !
சந்தங்கள் கொஞ்சிடும் சாகரம்நீ ! - சுந்தரன்நீ
வந்துதித்த நாளில் மகாகவியின் ஆசியொடு
சந்ததம் வாழ்க தழைத்து .

வெண்பாப் புலிநீ ! விருத்தத்தில் வேழம்நீ !
வண்ணம் வனைவதில் மன்னன்நீ !-கண்மணிநீ !
பண்ணுடன் பாடிடும் பைந்தமிழ்ப் பாவலன்நீ !
விண்ணுமுனை வாழ்த்தும் வியந்து.

அன்பு மகனுக்கு அம்மாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

மேலும்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 23-Oct-2017 1:39 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2017 12:20 am

அந்தமிழ்த் தாயின் அருந்தவச் செல்வன்நீ !
சந்தங்கள் கொஞ்சிடும் சாகரம்நீ ! - சுந்தரன்நீ
வந்துதித்த நாளில் மகாகவியின் ஆசியொடு
சந்ததம் வாழ்க தழைத்து .

வெண்பாப் புலிநீ ! விருத்தத்தில் வேழம்நீ !
வண்ணம் வனைவதில் மன்னன்நீ !-கண்மணிநீ !
பண்ணுடன் பாடிடும் பைந்தமிழ்ப் பாவலன்நீ !
விண்ணுமுனை வாழ்த்தும் வியந்து.

அன்பு மகனுக்கு அம்மாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

மேலும்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 23-Oct-2017 1:39 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - ராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 10:54 pm

முகம் காணாமல் உள்ளம் தொட்ட பூங்காற்று நீ
உன் குரல் இன்னும் என் செவி தொடாத மெல்லிசை தமிழ் இசை
உன் முகம் காணாது உன் குரல் கேட்காது நீ அனுப்பிய
வரிகளை வாசித்தபடியே நாட்களை கடத்துகிறேன் அன்பு தோழியே !!
நாளை அதுவும் கிட்டாதோ !!!
தவறு இருந்தால் தண்டித்துவிடு ... "காற்று" என்ற உவமை வைத்ததற்காக
நீயும் மௌனமாய் இருந்தபடி திட்டாதே!!

மேலும்

அறியாமல் வாழ்க்கை ஒரு உள்ளத்திடம் யாசித்து வாழ்வதை தான் காதல் என்கிறார்கள். காரணமே இல்லாமல் தொடங்கும் சில எண்ணங்கள் காரணத்தோடு முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 1:38 am

முகம் காணாமல் உள்ளம் தொட்ட பூங்காற்று நீ
உன் குரல் இன்னும் என் செவி தொடாத மெல்லிசை தமிழ் இசை
உன் முகம் காணாது உன் குரல் கேட்காது நீ அனுப்பிய
வரிகளை வாசித்தபடியே நாட்களை கடத்துகிறேன் அன்பு தோழியே !!
நாளை அதுவும் கிட்டாதோ !!!
தவறு இருந்தால் தண்டித்துவிடு ... "காற்று" என்ற உவமை வைத்ததற்காக
நீயும் மௌனமாய் இருந்தபடி திட்டாதே!!

மேலும்

அறியாமல் வாழ்க்கை ஒரு உள்ளத்திடம் யாசித்து வாழ்வதை தான் காதல் என்கிறார்கள். காரணமே இல்லாமல் தொடங்கும் சில எண்ணங்கள் காரணத்தோடு முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 1:38 am

நீயின்றி
நான் நானாகயில்லை.....!

தூங்காத விழிகளை
வதைக்கும்
வராத உனது வருகைக்கான
எதிர்பார்ப்புகள் ....!

மனதில் ஏக்கங்களை
தாங்கிக்கொள்ள முடியாது
புலம்புகிறேன்
உனது கால்தடத்திடம்...!

பொய்யாகவே
நம்ப மறுக்கிறது
உனது வெறுப்புகளை
மனம்,....!

ஒவ்வொரு காலை
முகம்கழுதலின்போதும்
உனது நினைவுகளை போல்
சிதறிய நீர்துளிகளை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்....!

நூலகம் செல்லாத
புத்தக வாசிப்பாக
எனது அறைக்குள்
உனது நினைவுகளை
படித்துக்கொண்டிருக்கிறேன்.....!

உனது முதற் தொடுகையில்
என்னை மறந்திருந்தேன்....!

கைகளின்
வற்றிபோகாத
உனது அன்பின்
ஈரம்....
ஒவ்வொரு தொடுத

மேலும்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - இனியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 9:39 pm

மஞ்சள் தேச்ச முகம்
மதி ஔியில் கானயில
மனம் பல சொல்லுதடி
மதி ஏனோ கொல்லுதடி...

கஞ்சாடை பார்வையில
நீ கொஞ்சி பேசயில
மனம் சில்லாய் போனதடி
மதி ஏனோ கொல்லுதடி...

கள்ளச் சிரிப்பினிளே
நான் சிதைய உதட்டோர
கருத்த மச்சம் எனை உலுக்க
மனம் ஏதேதோ சொல்லுதடி
மதி ஏனோ கொல்லுதடி...

காதோரம் கம்மல் சினுங்க
கழுத்தோரம் பவளம் மினுக்க
இடுப்போரம் ஒட்டிய ஒட்டியாணம்
என் நெஞ்சை கொள்ளுதடி
மனம் பல சொல்லுதடி
மதி ஏனோ கொல்லுதடி...

இப்படி மனதிற்கும் மதிக்கும்
இடையில் நான் வாட
மனம் திறக்கா நிலையில்
நீ இருப்பதேன் என்னவளே ?

மேலும்

அவள் மெளனம் காக்கும் வரை உள்ளங்கள் காரணங்கள் சொல்வதை நிறுத்தாது. அவள் ஓசை கேட்ட பின் கவிதைகளும் கண்கள் துயிலாது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 1:35 am

மஞ்சள் தேச்ச முகம்
மதி ஔியில் கானயில
மனம் பல சொல்லுதடி
மதி ஏனோ கொல்லுதடி...

கஞ்சாடை பார்வையில
நீ கொஞ்சி பேசயில
மனம் சில்லாய் போனதடி
மதி ஏனோ கொல்லுதடி...

கள்ளச் சிரிப்பினிளே
நான் சிதைய உதட்டோர
கருத்த மச்சம் எனை உலுக்க
மனம் ஏதேதோ சொல்லுதடி
மதி ஏனோ கொல்லுதடி...

காதோரம் கம்மல் சினுங்க
கழுத்தோரம் பவளம் மினுக்க
இடுப்போரம் ஒட்டிய ஒட்டியாணம்
என் நெஞ்சை கொள்ளுதடி
மனம் பல சொல்லுதடி
மதி ஏனோ கொல்லுதடி...

இப்படி மனதிற்கும் மதிக்கும்
இடையில் நான் வாட
மனம் திறக்கா நிலையில்
நீ இருப்பதேன் என்னவளே ?

மேலும்

அவள் மெளனம் காக்கும் வரை உள்ளங்கள் காரணங்கள் சொல்வதை நிறுத்தாது. அவள் ஓசை கேட்ட பின் கவிதைகளும் கண்கள் துயிலாது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 1:35 am

தேவதை போல் என்னவள்
ஓவியங்கள் வரைகிறேன்
கவிஞனாக நினைக்கிறேன்
அருவிகளில் நீந்துகிறேன்
பூக்களில் தீக்குளிக்கிறேன்
ஈசல்களாய் கனவுகள் தினம்
மனதினுள் மரணிக்கின்றன
கண்ணீரில் சொற்களில்
டையரிகள் வாசிக்கிறேன்
என்னவளின் காலடியில்
சந்திரனை புதைக்கிறேன்
அதிசயப் புன்னகையில்
நிம்மதியை யாசிக்கிறேன்
பூங்காற்றின் அங்காடியில்
சுவாசங்கள் வாங்குகிறேன்
சாம்பல் நிற பறவைகளிடம்
சிறகுகளை களவாடுகிறேன்
இமைகளின் ஆயுத எழுத்து
முத்தங்களின் ஆய்வு கூடம்
காதலின் பூகம்பத்தில்
ஊமையும் பேசுகிறான்;
முடவனும் நடக்கிறான்
அர்ஜுனா பானு பேகம்
இரவினை நேசித்தாள்
கரச் சேதக் கருவறையில்
தாஜ்மஹா

மேலும்

மிகவும் அழகான கவி...இன்னும் எழுதுங்கள்..வாழ்த்துகள்! 22-Oct-2017 9:05 am
அழகு 21-Oct-2017 8:43 pm
அருமையான பதிவு . தாஜ்மஹாலைப் பற்றிய தேவையற்ற விமர்சனங்கள் கருத்துக்கள் எங்கள் தேசத்தில் ஒரு சில பகுதியில் சிலரால் பரப்புகின்ற இந்நிலையில் அவசியமான அழகாக எழுதி உலர் . எனக்கு உண்மையில் இன்றுதான் மும்தாஜ் அவர்களின் வேறு பெயர் தெரியும் நன்றி 21-Oct-2017 3:20 pm
பூங்காற்றின் அங்காடியில் சுவாசங்கள் வாங்குகிறேன்..... இமைகளின் ஆயுத எழுத்து முத்தங்களின் ஆய்வுகூடம்... அருமை அண்ணா 20-Oct-2017 7:11 pm

தீபாவளி சிறுகதை


'யாத்ரா.., யாத்ரா நீ எங்கே இருக்காய்? என்னே விட்டுட்டு எங்கேயும் போய்ட்டியா’? பாசத்தின் பணிவான குரல்கள் அவளது செவிப்பறையினுள் பூங்காற்றாய் நுழைந்தது.

'யாத்வி நான் உன்னே விட்டு எப்பயாவது விலகிப் போயிருக்கனா’? மரணம் வரை உன் நிழலாக நானும் பயணம் செய்து கொண்டிருப்பேன். அவளது மென்மையான வார்த்தைகள் யாத்வியின் இதயத்தில் சாசனமாய் பதிந்தது.

'யாத்ரா நிழல் என்றால் என்ன?' புதிரான வாழ்க்கையில் புரியாத வினாக்களை புதிதாக போடுகிறாள் யாத்வி.

சிறு நிமிடங்கள் மெளனத்தில் சிறைப்பட்ட அவளது இதழ்களை எங்கிருந்தோ வந்த ஞானம் விடுதலை செய்தது. "உள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆற

மேலும்

அருமை 21-Oct-2017 8:42 pm
ள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆறடி நீளமான மனிதனின் வாழ்க்கை கர்ப்பமெனும் இருட்டறையில் தொடங்கி கல்லறையெனும் இருட்டறையில் முடிகின்றது நிதர்சனமான வரிகள் அழகான சொற்கள் . யாத்ரா , யாத்வி கதாபாத்திரங்கள் அல்ல கற்பனை அல்ல வாழ்வின் தத்துவத்தை அன்பின் பரிணாமத்தை பாசத்தின் உருவத்தை நம் கண்முன் காட்டிடும் இதயங்கள் . உயிரோவியங்கள் . உங்கள் எழுத்துத் திறனை கையாளும் விதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . உங்கள் மூலம் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது வாழ்த்துக்கள் 21-Oct-2017 3:33 pm
நெஞ்சம் நெகிழும் மென்மையான கதை,வாழ்த்துக்கள் sarfn 19-Oct-2017 8:45 pm
அருமையான தமிழ் நடை. கருத்தும் அருமை. கவியோடு கதைகளையும் பின்ன வாழ்த்துகிறேன். 19-Oct-2017 11:57 am

"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு;   இடியும் மின்னலும்  போல்  வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது" 


"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது; 
மனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும் 
வன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த நாளைய உதயத்தில்"

"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்"

"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் கரை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

மேலும்

தீமைகள் தீபங்களில் எரிந்து சாம்பலானால் நலமே! உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 7:16 pm
ஆபிரிக்க தேசமும் ஒரு கைபிடி உணவின்றி கல்லறையாகுது....... பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியிது.. மனதை உருக்குது.... தீங்குகள் யாவும் தீபத்திரு விளக்கில் எரியட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்... 18-Oct-2017 7:05 pm
ஏற்றுக்கொள்கிறேன் உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 1:10 pm
உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 0094756795952 18-Oct-2017 1:09 pm

கருவறை வீட்டுக்குள்
வாடகையின்றி
அணுவாய் முளைத்தேன்
நரம்பின் கூட்டுக்குள்
மூச்சுப் பூக்களை
பசிக்காய் வெட்டினேன்
இதயத்தின் ஆழியில்
குருதி மீன்களை
பிடித்து நகைத்தேன்
உலகத்தின் காற்று
நாசியின் வழியில்
புனிதமாய் புரிந்தது
திங்கள் தோறும்
நிலவைப் போல
தொப்புள் வளரும்
ஒளியின் ஆளுகை
இரவைப் போல
என்றும் செல்வம்
அவளது இன்பம்
சதையின் மனதை
துடிக்க வைக்கும்
அவளது ஆசைகள்
பாடல் போல
காதில் கேட்கும்
அவளது கனவுகள்
மூங்கில் போல
அழுது புலம்பும்
அவளது தேகத்தில்
வலிகள் நாளும்
நதிகளாய் பாயும்
நாட்கள் நெருங்க
சோர்வில் அவள்
வாடிப் போனாள்
வயிறின் பாகம்
பி

மேலும்

அவளுக்கு நிகர் அவளே...அருமையான கவிதை...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 22-Oct-2017 9:04 am
அழகான ஒரு கவிதை . அம்மா அவள்தான் இந்த உலகை நமக்கு அறிமுகப்படுத்திய பிரம்மா. 18-Oct-2017 3:37 pm
இசைப் பாடலாக உள்ளது. அருமை. 17-Oct-2017 1:26 pm
ஆயிரம் உறவுகளில், எதையும் எதிர்ப்பார்க்காது.. என்றும் அன்பை மட்டும் எதிர்ப்பார்த்து; தன் அன்பு அனைத்தையும், அள்ளிக்கொட்டும் அழகியவள் நம் தாயவள்.... இறைவனும் தாய்க்கு அடிமை!!!!! 17-Oct-2017 10:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1824)

user photo

யோகபாலாஜி க

அலங்காநல்லூர்
கோபிரியன்

கோபிரியன்

சென்னை
வாகை மணி

வாகை மணி

பிச்சகவுண்டனூர்
IswaryaRajagopal

IswaryaRajagopal

Kanyakumari
user photo

anu

coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (1829)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Kavisathish

Kavisathish

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (1856)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே