ப சண்முகவேல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ப சண்முகவேல் |
இடம் | : தருமபுரி, காமலாபுரம் |
பிறந்த தேதி | : 09-Mar-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 1899 |
புள்ளி | : 217 |
புதுமையை நோக்கி .....
உழைப்பில்லையெனில் ஊதியமில்லை
உழவனியில்லையெனில் உணவில்லை
உணர்வில்லையெனில் உடலில்லை
காமம் இல்லையெனில் காதலில்லை
காசு இல்லையெனில் ஏதுமில்லை
காற்றில்லையெனில் கண்டத்தில்
நாமே இல்லை
விதை வீழ்ந்த இடமெல்லாம்
மரமாவது இல்லை
மரம் ஆன இடமெல்லாம்
விதையாகும்
விதை வீழ்ந்த இடமெல்லாம்
மரமாவது இல்லை
மரம் ஆன இடமெல்லாம்
விதையாகும்
அலையோடு விளையாடினாய்.. ரசித்தேன்
மழையோடு விளையாடினாய்.. மகிழ்ந்தேன்
காற்றோடு விளையாடினாய்.. குளிர்ந்தேன்
நிலவோடு விளையாடினாய்.. மலைத்தேன்
இப்போது காதலோடு விளையாடிவிட்டாயா?
அழுவதைத்தவிர நான் வேறென்ன செய்ய?
அவள் நிழல்கூட
வண்ணம் பூசிக்கொண்டதாய்
உணர்ந்தேன் அவளின்
அழகில் மயங்கிய நான்...
என் வாலிபம்
மழலையானது
அவளிடம் என் காதலை
சொன்னபோது...
உறக்கத்தை இரவல்
வாங்கினேன்
அவள் நினைவுகள்
அதை களவாடிக்கொண்டது...
புதிதாய் மீண்டும் பிறந்தேன்
அவள் என் காதலை
ஏற்றுக்கொண்டபோது...
இன்னும் நூறு வருடம்
ஆயுள் நீட்டிப்பு கேட்டேன்
இறைவனிடம்
அவள் கரம்பற்றி நான் நடந்தபோது...
என் வார்த்தைகளிலும்
புதுக்கவிதை ஒட்டிக்கொண்டது
அவளோடு பேசும் தருணங்களில்...
உலகம் என் உள்ளங்கையில்
அடங்கிவிட்டது
அவள் என் தோள் சாய்ந்தபோது...
.
நானோ காதலைச் சொல்லி பல நாளாச்சு
நீயோ ஆமாவும் சொல்லவில்லை
இல்லையும் சொல்லவில்லை
இப்படி ஆறப்போட்டுவிட்டாயே!
தவிக்குமென்னை மறைமுகமாக ரசிக்கிறாயா!
இல்லை வேறோர் இதயத்தில் வசிக்கிறாயா!
ஏதாகிலும் யோசிக்காமல் ஒரு பதில் சொல்லு
இதுவே எனது யாசிப்பு
மரங்களை காப்போம்
சர்வம் நெகிழி மயமானது
சவப்பெட்டிகளாவது
மரப்பொருளாய் இருக்கட்டுமே
மண்ணில் கரைந்து
மண்ணோடு மண்ணாவதற்கு...
இது ஒரு பொன்மாலைப் பொழுது...!!
அந்தி வானம் சந்தனத்தை
அள்ளிப் பூசும்போது
அந்த அழகை கண்டு நிற்க
கொள்ளை போகும் மனது..!!
புல்லினங்கள் சுற்றியலைந்து
கூடு சேரும் நேரம் - அவை
கூடி கொஞ்சும் பாட்டைக் கேட்க
நெஞ்சில் தீரும் பாரம்...!!
வெம்மைதன்னை விரட்டித் தென்றல்
வீசி இன்பம் சேர்க்கும்
வெள்ளி நிலவு இருண்ட வானில்
எட்டிக் கொஞ்சம் பார்க்கும்..!!
கொடியினிலே ஜாதி மல்லி
பூப்பெய்திதானே மணக்கும்
அந்தவாசம் நாசிதொட்டு
சிந்தைதனை மயக்கும்..!!
நாள் முழுதும் உழைத்தவரும்
களைத்திருக்கும் தருணம்
அந்தி மாலை ஓய்வு தந்து
உழைக்கும் வர்க்கம் வருடும்..!!
பாவலர்க்கு கவிதை தரும்
வேல்விழிகளை கண்டவுடன்
வேசமிட்டேனோடி
கதைகளுக்கு ஏற்ற கதாபாத்திரமாக
காரணமின்றியும் நடிக்கிறேன்
உன்னைக் கண்டவுடன்
காதல் கூத்தாடி நான் ....
அரசன் :
வணக்கம் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்
அரசபைக்கு அரசன் நானே வந்துவிட்டேன் இந்த அமைச்சரை இன்னமும் காணோம்
போன் பான்னுவோம்
எந்தப் பெண்களிடம் உல்லாசமா இருக்கிறறோ
Where are you
மறு முனையில் அமைச்சர்
Who are you
அரசன் :
மன்னன் பேசுகிறேன்
அமைச்சர்:
மண்ணெண்ணெய்யா இருந்தால் என்ன விளக்கெண்ணெய் இருந்தால் என்ன
வையுங்கள் போனை
அரசன்:
அமைச்சரே நான் அரசன் பேசுகிறேன்
அமைச்சர்:
16 ரூபாய் பளபளப்பு துவைத்தல் கிளுகிளுப்பு
அரசன் :
அமைச்சரே உன்னை வேறு வழியில் தான் அழைக்க வேண்டும்
அமைச்சரே அமைச்சரே மன்னன் அந்தப்புரத்தில் இல்லவே இல்லை
அமைச்சர் :
மன்னன் அந்தப்புரத்தில் இ
அரசன் :
வணக்கம் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்
அரசபைக்கு அரசன் நானே வந்துவிட்டேன் இந்த அமைச்சரை இன்னமும் காணோம்
போன் பான்னுவோம்
எந்தப் பெண்களிடம் உல்லாசமா இருக்கிறறோ
Where are you
மறு முனையில் அமைச்சர்
Who are you
அரசன் :
மன்னன் பேசுகிறேன்
அமைச்சர்:
மண்ணெண்ணெய்யா இருந்தால் என்ன விளக்கெண்ணெய் இருந்தால் என்ன
வையுங்கள் போனை
அரசன்:
அமைச்சரே நான் அரசன் பேசுகிறேன்
அமைச்சர்:
16 ரூபாய் பளபளப்பு துவைத்தல் கிளுகிளுப்பு
அரசன் :
அமைச்சரே உன்னை வேறு வழியில் தான் அழைக்க வேண்டும்
அமைச்சரே அமைச்சரே மன்னன் அந்தப்புரத்தில் இல்லவே இல்லை
அமைச்சர் :
மன்னன் அந்தப்புரத்தில் இ
நாம் விரும்பியது
நாம் எதிர்பார்த்தது
நமக்கு வேண்டியது
எதுவும் கிடைத்ததுமில்லை
கிடைத்தாலும் நிலைத்ததுமில்லை
உழைத்தாலும் உடன் வருவதுமில்லை
உறுதியாக எதுவும் இல்லை
இந்த உலகில் .....