கல்லறை செல்வன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கல்லறை செல்வன் |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 13-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 3894 |
புள்ளி | : 215 |
நான் வாழும்கல்லறை
அவள் ஏற்றி வைத்த தீபத்தில் தினம் தினம் எரிந்து போகும் என் காதல் நினைவும் ஒரு ஃபீனிக்ஸ் பறவை தான்... அழிவற்றவை
என் ஏமாற்றத்தில் அவளுக்கு கிடைத்தவை யெல்லாம் இன்னோர் அன்பு படுக்கையில் அரவணைப்பு, என் காதலில் கிடைக்காத ஆனந்தம் கட்டிலில் கிடைத்ததோ என்னவோ
நான் இங்கு பருவச்சாரலை துடைத்து எரிந்த காகிதம் ஆனேன்...
தூக்கி எரிந்த நீ ஆனந்த தாண்டவம் ஆடி தூய்மை ஆகின்றாய் உன் அழுக்கை சுமக்கும் நான் குப்பைத் தொட்டியாகின்றேன்... எனக்கென யாரும் இல்லை... அவளை பார்க்கத் துடித்த கண்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறது என் கண்கள் கூட எனக்காக இல்லை...
கடல் அலை கால் தொட
விரல் இடை மணல் தொட
காற்றோடு கை விரித்து
கால்நடை போட Software
சேற்றோடு கால் சொருகும்
செவ்வான கிழக்கின்கால்
செங்கதிர் தீண்டும் பனிபோலே
நானும் நாற்றோடு பேசி
காற்றோடு போக வேண்டும்
ஆற்றங்கரை மீன்பிடித்து
ஓடிவந்து நான் கொடுக்க
அம்மா கைப்பக்குவத்தில்
ஐந்தாறு மீன் அதிதாமாய்
திண்ணி ஆனந்தம் கொள்ள வேண்டும்
பள்ளம் மேடு கொள்ளும் காடு
முள்ளில் வேலி குயிலின் கூடு
மாதவிடாய் பூவில்
மதுரம் தேடும் தேனீ
ஆடும் மயிலாய் நானும் மாறி
கானகம் எங்கும் ஆட வேண்டும்...
ஏய் கண்மணி
என் கவிமணி
காலம் வரும் வரை
காதல் தவமதை
நீயும் நானும்
தினம் தினம் செய்வோம்
அழகாய் திருமணம்
ஒருமை கொளும்மனம்
நீயும் நானும் இல்லறம் செல்லும்
வாழும் வழிநூல் வள்ளுவன் சொல்லாய்
நாமும் வாழும் நாள்வரும்
அன்பே காதல் செய்வோம்
- கல்லறை செல்வன்
பாலைவனத்திலும் பூக்களுண்டு
பாவை அணைத்திடும் பணியுமுண்டு
முள்ளுடை கள்ளிக்கும் கனிகளுண்டு
கல்லுடை மனதிற்கும் காதலுண்டு
காவிரி காண மறுப்பதினால் காய்ந்தவையெல்லாம் பாலைவனம் தான்
கனகம் தேடும் காளையரில் காண்பவையெல்லாம் காமமடி
குனகம் பாரும் உலகினிலே
நானும் யாருமற்ற நரகத்திலே...
தனிமைச் சுடும் போதினிலே
கவிதை தந்த ஆதரவில்
கவலை மறந்து போகிறேனே....
பாலைவனத்திலும் பூக்களுண்டு
பாவை அணைத்திடும் பணியுமுண்டு
முள்ளுடை கள்ளிக்கும் கனிகளுண்டு
கல்லுடை மனதிற்கும் காதலுண்டு
காவிரி காண மறுப்பதினால் காய்ந்தவையெல்லாம் பாலைவனம் தான்
கனகம் தேடும் காளையரில் காண்பவையெல்லாம் காமமடி
குனகம் பாரும் உலகினிலே
நானும் யாருமற்ற நரகத்திலே...
தனிமைச் சுடும் போதினிலே
கவிதை தந்த ஆதரவில்
கவலை மறந்து போகிறேனே....
Agambavam enra sollai pirittu ezhudu
தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே
அன்றொரு நாள்
கீழ்வானில் எழுந்தவன்
தன் சுடர்விழிப் பார்வைகளால்
கொஞ்சம் சுட ஆரம்பித்த நேரம்
ஓர் ஓட்டு வீட்டின் எதிர் சாலை ஓரம்
சிறு தூரத்தில்
மழைதரும் கார்முகில்
இப்ப வருமோ? எப்ப வருமோ? என்று
வான் பார்த்த நிலம்போல்
நான் காத்திருந்தேன்.,
அவ்வழி வந்தவர்களில்
எனை அறிந்தோர்
ஏன்? இங்கே என்று
தொல்லை செய்து நகர்ந்தார்கள்
அறியாதோர்
நமக்கு ஏன்? தொல்லை என்று
எனைக் கடந்தார்கள்.,
எங்கோ? ஓர் இடத்தில்
மழை வரப் போவதை
என் தேகத்திற்கு
விசிறி வீச வந்த தென்றல்
குளிர்வழி
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது
வானம் என்ற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
எடுத்துக் கொண்டு
பூமியோடு சேர்த்து எனக்கும் சேர்த்தான்.,
இதுபோல் எனக்கு
சோலையில் இருப்பது மலர்
சேலையில் இருப்பவள் மலர்
தலையில் சூடுவது
தலைவியாக சூடுவது
மலருக்கு சிறு ப்பூ அழகு
மலருக்கு சிரிப்பு அழகு
தேன் ஈ சுற்றினால்
அது மலர்
ஆண் ஈ சுற்றினால்
அவள் மலர்
பன்னீர் சிந்துவது
கண்ணீர் சிந்துவது
கனியாவது
கன்னியாவது
இருவருக்கும் உண்டு
மணம்.
இருவரின் முகவரியும்
இதழே
இருவரின் பெயரும்
பூவை
இருவருக்குமே ஆதாரம்
கொடியிடை
இருவரும் விரும்புவது
மாலை
இருவருக்கும் சொந்தம்
அழகு
இருவரின் முகங்களும்
மலர்கிறது
கதிரவனின் வருகை
இருவரும் பிறரால்
பறிக்கப்படுபவர்கள்
நினைவுக்கும் பெரும்
வலிமை உண்டு/
நடத்தி முடி அதனைச்
செயலாய்க் கொட்டு/
கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/
முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/
சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/
மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம்
மறந்திடும் என்றும்/
சித்திரை மாதந்தனில்
சிந்தையும் குளிர்ந்ததோ !
நித்திரைப் பொழுதினில்
நித்தமும் சொப்பனமோ !
கனவில்வந்த காதலனும்
கட்டியணைக்க வாரானோ !
தீட்டியுள்ள திட்டங்களும்
தீஞ்சுவையாய் இனிக்குமோ !
ஆலிங்கனம் புரிந்திடதான்
ஆழ்மனதும் துடிக்கிறதோ !
ஆறப்போட மனமின்றி
ஆசைகளும் கூடுகிறதோ !
தவித்திடும் உன்நெஞ்சம்
தணிந்ததும் துள்ளிடுமோ !
உறக்கத்தில் வந்தவனும்
உன்னவனாய் மாறுவானோ !
பழனி குமார்
09.05.2020
இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,
பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.
பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே
உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ