பாதை மாறாதே என் தோழா

நீ பார்க்கும் உலகை விட்டுவிட்டு
உனைப் பார்க்கும் உலகைத் தேடு
கிட்டப் பார்வை எட்டப் பார்வை நோயில்லாப் போதினிலும் உன் பார்வை உந்தன் இலக்கை மறைந்தது ஏனோ?
கண்பார்வை கனவுப்பாதை பார்க்காவிடில் நம்பார்வை ஆசையெனும் குறுவட்டப் பாதைக்குள்ளே பேரோட்டம் ஓடுமடா, அமைதியான வாழ்வுதன்னை அசையாமல் தேடாதே! ஓய்வுகாலம் வந்தாலும் அமைதி உன்னை நாடாதே! ஓடும் வாழ்க்கை உன்னோடு நடைபயிற்சி கொள்ளாது! உன் வாழ்க்கை உன் கையில், நீ
ஓடுவதையும் ஒதுங்குவதையும்
உன் தேடலே நிச்சயிக்கும். நானென்னசொல்வது நீயென்ன வாழ்வது
உன்வாழ்க்கை உன்கையில்
பாதை மட்டும் மாறாதே! என் தோழா மற்றவை உன்னைவிட்டு போகாதே!!!
- அருள்

எழுதியவர் : கோ அருள்செல்வன் (4-Dec-24, 12:26 am)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 54

மேலே