தமிழ் புத்தாண்டு

கரடு முரடான தன்மை, சாலைகளில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான்;
கசடு அழுக்கான தன்மை, தண்ணீரில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான்;
கவனமுடன் செயல்பட்டால், சாலைகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுகம்தான்.
தெளிந்த மனதுடன் செயல்பட்டால் தண்ணீர் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுத்தம்தான்.
சென்ற ஆண்டில் விடப்பட்டவை "விசுவாவசு" ஆண்டில் வசமாகட்டும்.

தமிழ் புத்தாண்டு (௨௦௨௫) வாழ்த்துக்களுடன்,
ஆனைக்குளம், சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (30-Apr-25, 3:48 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 37

மேலே