என்னவளுக்காக

உலகினில்
இனிய மொழி
யாதென கேட்டால்
என்னவள் பேசும்
வார்த்தைகள் என்பேன்....!

தொன்னூற்றொன்பது
வகை மலர்களில்
அழகிய மலர்
யாதென கேட்டால்
என்னவளின் அழகிய விழிகள் என்பேன்....!

பால் தெளிதேன் முக்கனி இவைகளில்
இல்லாத சுவை
எதில் என கேட்டால்
என்னவள் பேசும் நயத்தில் என்பேன்.....!

என்னவளின் பூவிதழை
சுவைத்துப் பார்த்து
கசந்தது
தேன் என்பேன்...!

நிறங்கள்
ஏழு உள்ளது
என்னவளின் நிறத்தை
சேர்த்தால் எட்டு என்பேன்.....!

உலகில் மிகமிக மென்மை யாதென்றால்
என்னவளின் கன்னங்கள் என்பேன்...!

என்னவளின் புன்னகை
முகம் பார்த்து
பொன் நகையும்
மண் என்பேன்...!

என்னவளின்
அழகைப் போல் வேறொருவளைப் படைக்காதிருக்க
பிரம்மனிடம் மனு கொடுப்பேன்...!

என்னவளே
உன் அழகுக்கு ஈடு
ஏதுமில்லை இம்மண்ணில்...!

✍🏿 *பாவரசு செல்வமுத்து மன்னார்ராஜ்*

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Apr-25, 5:50 pm)
Tanglish : ennavalukkaga
பார்வை : 56

மேலே