தமிழேதமிழே

தமிழே..தமிழே..
05 / 06 / 2025

தமிழே..தமிழே..
என் உயிர்த் தமிழே
ஊனில் கலந்த
என் உதிரம் தமிழே
அமிழ்தே அமிழ்தே
வானவர் அமிழ்தே
வானம்போல் விரிந்து
வாழ்ந்திடும் தமிழே
வாழ்க..வாழ்க .
வாழ்க நீ பல்லாண்டே

சங்கம் வளர்த்த தீந்தமிழே - என்
அங்கம் ஆளும் அருந்தமிழே
பங்கம் இல்லாது இப்பார் முழுதும்
தங்கம் என ஒளிர்ந்திடும் மாதமிழே
எத்தனை தடைகள் வந்தாலும்
எத்தனை இடர்கள் தடுத்தாலும்
அத்தனையையும் பொடியாக்கி
அகிலம் ஆண்டிடும் வளர்தமிழே


இயல் இசை நாடகம்
இயல்பாய் உன்னுள் அடக்கம் - மொழி
புயல் எத்தனை தாக்கினாலும் - உன்
வயல் வெளி பசுமை மாறாதே
கயல் விழி காதலியே - என்
ஐயன் வள்ளுவன் சோதரியே
ஐயமின்றி சொல்லிடுவேன் - உன்
சீரிளமை காத்திடுவேன் என்னுயிர்த் தமிழே

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Jun-25, 10:41 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 57

மேலே