செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : செல்வமுத்து மன்னார்ராஜ் |
இடம் | : கோலார் தங்கவயல் |
பிறந்த தேதி | : 23-Aug-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 16023 |
புள்ளி | : 1609 |
தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுப் போக்கு...
தமிழகத்தில் நடைப்பெற்ற பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டு புதுக்கவிதைகளும் மரபு கவிதைகளும் படைத்து பல விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு பன்னீர் தெளித்த கண்ணீர்த் துளிகள் என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து இன்னொரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். படிப்பதும் எழுதுவதும் எனக்கு என் சுவாசம் போன்றது...
அலைபேசி எண்: 9972424589
என் கற்பனையில்
பிறந்த எண்ணங்கள்
வார்த்தைகளாக
தவழ்ந்து வந்து
கால் முளைத்து
கவிதையாக மலர்ந்து
நடந்து வந்தது
நளினம் கொண்ட
மங்கையை போல் ...!!
--கோவை சுபா
கோபுரக் கலசத்தின்
தானியங்களை
மலட்டு மண்ணில் விதைத்ததைப்போல
என் காதல் உன்னிடம்
சிக்கித் தவிக்கிறது...
.
உனக்காக
நான் காத்திருக்கும்போது
எவ்வளவு காலதாமதமானாலும்
எனக்குள் ஒரு வெறுப்போ வெறுமையோ வருவதேயி்ல்லை
ஏனெனில் நம் காதல் நிபந்தனைகளற்ற
உண்மையான காதல்...
முத்தம்
அன்பின் வெளிப்பாடு
முத்தம்
பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும்
முத்தம்
தனித்தன்மையானது
தவறான முத்தம்
யாரும் யாருக்கும் ஒருப்போதும்
கொடுப்பதில்லை..
நான் உன்னை நேசிக்கிறேன்
என்பதனை காட்டிலும்
நான் உன்னை சுவாசிக்கிறேன்
என்பதே மறுக்கமுடியாத உண்மை...
.
கோயிலுக்கு வந்தாள்
ஆண்டவனுக்கு
அர்ச்சனை செய்ய
அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த
ரோஜா ஓன்று அவளின் அழகை அர்ச்சனை செய்தது...
.
ஒரு விகற்பக் குறள் வெண்பா
மண்ணாளும் வேந்தர் கடவுளாம் மாந்தரும்
மண்ணில் அவர்கா ணரிது
...........
ஒவ்வொரு வெற்றியும்
தோல்விகள் எனும் அஸ்திவாரத்தின்
மீது கட்டப்பட்டுள்ளது
தோல்விகளை சந்திக்காத
வெற்றி நிலைப்பதில்லை
வியர்வை துளிகள்
கண்ணீர்த் துளிகள்
அவமானங்கள் நிராகரிப்புகள்
எனும் முட்களை கடந்தால் தான்
வெற்றியெனும் பூப்பறிக்க இயலும்
விடா முயற்ச்சியும்
விட்டுக் கொடுத்தலும்
தன்னம்பிக்கையும்
அயரா உழைப்பும்
வெற்றியின் இலட்சணங்கள்...
.
முதல் இரவு
நாகரீக மனிதன்
கட்டமைத்த கன்னியமான ஏற்பாடு.
இருவரை தனிமை படுத்த ஊர் கூடி உத்தரவாதம் தருகிறது.
இரு உள்ளங்கள் தனியாக பேசி கொள்ள இரண்டு குடும்பம் ஒரு மனதாக சம்மதிக்கிறது.
இரு வேறு பாலித்தனர் உடலால் இனைய திருமண நிகழ்வு அங்கீகாரம் செய்து கணவன் மனைவி என்று பெயர் சூட்டுகிறது.
தேக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அரங்கேற்ற இரு உள்ளங்கள் துடிக்கும் அற்புத இரவு.
இதுவரை கற்பனையில் சஞ்சாரித்த மானுடம் உண்மையான பள்ளி பாடம் படிக்கும் இரவு.
வெட்கத்துக்கு விடை கொடுத்து
விடியல் வரை வினோத பயணம்.
ஆடை குறைப்பு அதிகரித்து
ஆலிங்க நடனம்
உலகம் மறந்து உயிர்கள் உன்னதம் அடையும் இரவு
முதல் முறை
தூக்கு கயிறு தேவை இல்லை எனக்கு
அவள் துப்பட்டவே போதும் ...
ஹைக்கூ
கார் காலம்
ரூபாய் 999/- செலுத்தி
உங்கள் காரை ஓட்டி செல்லுங்கள். 🚘
- பாலு.
விண்ணை அளந்தாய் அன்று மன்னனுக்குத் தன்னைக் காட்ட
வெண்ணெய் பானையை உடைத்தாய் அன்னைக்கு கோபத்தைக் காட்ட
புன்னகை இதழில் புல்லாங்குழல் இசைத்தாய் ராதைக்கு அன்பைக் காட்ட
உன்னை எனக்குமட்டும் காட்டாமல் கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கண்ணா கவிதை வரிகளிலெல்லாம் ஓடி ஒளிகிறாய்
கண்ணா நீ எங்கே எங்கே ?