முதல் இரவு ♥️
முதல் இரவு
நாகரீக மனிதன்
கட்டமைத்த கன்னியமான ஏற்பாடு.
இருவரை தனிமை படுத்த ஊர் கூடி உத்தரவாதம் தருகிறது.
இரு உள்ளங்கள் தனியாக பேசி கொள்ள இரண்டு குடும்பம் ஒரு மனதாக சம்மதிக்கிறது.
இரு வேறு பாலித்தனர் உடலால் இனைய திருமண நிகழ்வு அங்கீகாரம் செய்து கணவன் மனைவி என்று பெயர் சூட்டுகிறது.
தேக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அரங்கேற்ற இரு உள்ளங்கள் துடிக்கும் அற்புத இரவு.
இதுவரை கற்பனையில் சஞ்சாரித்த மானுடம் உண்மையான பள்ளி பாடம் படிக்கும் இரவு.
வெட்கத்துக்கு விடை கொடுத்து
விடியல் வரை வினோத பயணம்.
ஆடை குறைப்பு அதிகரித்து
ஆலிங்க நடனம்
உலகம் மறந்து உயிர்கள் உன்னதம் அடையும் இரவு
முதல் முறையாக மெளனம் பேசும் இரவு
ஆயிரம்காலத்து பயிரை
அறுவடை செய்யும் இரவு
மணித சங்கிலி சூத்திரத்தை உணர்தும் இரவு.
-பாலு