balu - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  balu
இடம்:  திருவொற்றியூர்
பிறந்த தேதி :  17-Apr-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2018
பார்த்தவர்கள்:  3231
புள்ளி:  664

என்னைப் பற்றி...

என்னை பற்றி, நான் டிப்ளமோ மின்னணு பொறியாளர். தனியார் நிறுவனம் ஒன்றில் மூன்று வருடங்கள் பணி புரிந்து, தொழில் கற்று கொண்டு, பின் சுயமாக, சென்னை திருவல்லிக்கேணியில், ஜெராக்ஸ் இயந்திரம் விற்பனை, மற்றும் அதனை பழுது பார்த்தல் தொழிலை கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். தமிழ் மீது எனக்கு ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்தே காதல் தொடங்கியது. காரணம் எனக்கு தமிழ் சொல்லி கொடுத்த ஆசிரியர் திரு. புலவர் ஆறுமுகம் அவர்கள். மிக அருமையாக தழிழ் பாடம் நடத்துவார். பின் டிப்ளமோ படிக்கும் போது ஏறகுறைய தமிழை மறந்தே விட்டேன் என்று கூட சொல்லலாம். பிறகு வேலை, அதன் பின் வியாபாரம் என்று வாழ்க்கை பயணிக்க, திரும்பவும் தமிழ் மீது அக்கறை, என்னுடைய கைபேசியால் வந்தது. பட்டிமன்றம், கவியரங்கம், விவாதமேடை இப்படி பல தமிழ் அறிஞர்களின் அபார பேச்சு என்னை கவர்ந்தது. மிகவும் ஈர்த்தது. ஞாயிறு மாலை வேளையில் தொலைக்காட்சி பார்பதை தவிர்த்து, தமிழில் எழுத தொடங்கினேன். எழுதுவதற்கான தளத்தை தேடினேன். எழுத்து.காம் என் எண்ணத்தை பூர்த்தி செய்தது. தமிழ் மிக பெரிய சமுத்திரம். நான் கற்ற தமிழ் துளி கூட இல்லை. அந்த துளியை கடலாக நினைத்து ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் இந்த தளத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும், மற்றும் கவிதையை படிக்கும் அன்பர்களுக்கும் என் கோடி நன்றிகள். என் எழுத்துகளை உலகறிய செய்த எழுத்து.காம் க்கு என் நன்றிகள். வாழ்க தமிழ். தமிழால் அனைவரும் இனைந்தோம். தமிழை காப்போம்.
-பாலு

என் படைப்புகள்
balu செய்திகள்
balu - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2020 12:06 pm

காமராஜ் 🙏

காலத்தால் அழிக்க முடியாத அபூர்வ தன்னிகரற்ற மாபெரும் மக்கள் தலைவன்

அப்பழுகற்ற மிக நேர்மையான அரசியல்வாதி

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தன்னலமற்ற தியாக தலைவன்

தமிழகம் இதுவரை கண்டிராத அதிசய முதல்வர்

இனி உன் போல் மாமனிதர் நாங்கள் பார்பபது அரிது.

மேலும்

balu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 10:47 pm

அவளின் கண் அசைவுக்கு🌹

மின்னலாக தாக்கிய அவள் பார்வை
என் இதயத்தில் அம்பாக தைக்க
தையல் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.

வானத்து தேவதை வழி தவறி வந்துவிட்டாளா
ரம்பை, ஊர்வசி, மேனகையின் வழி தோன்றலா
பூமி தன்னில் இப்படி ஒரு அழகியை காண இயலாது

வில் புருவம் கொண்டு
என் மீது கண்களால் அம்பு எய்தினாளோ
அடிபட்டது நான் அல்ல
என் இதயம்
காயத்திற்கு மருந்து
அவள் பார்வையில் ஒரு இசைவு.
- பாலு.

மேலும்

balu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 10:43 pm

காமம் 💔

தவிர்க்க முடியாத உணர்வு.
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் உணர்வு.
ஆண்,பெண் இருவருக்கும் ஏற்படும் உணர்வு.
சந்ததிகளை சமைக்கும் உணர்வு.

நாகரீக மனிதன் கட்டுப்படுத்திய உணர்வு.
உடல் நிச்சயம் விரும்பிம் உணர்வு
உள்ளம் கட்டுபடுத்தும் உணர்வு
ஆழ் மனதில் கொழுந்து விட்டு எரியும் உணர்வு
கலாச்சாரம் தடுத்து விட்ட உணர்வு
வயதுக்கு வந்தோரின் இயற்கையான உணர்வு
பண்பாடு பாங்காக அனைகட்டிய உணர்வு
காதல் களைப்பார துடிக்கும் உணர்வு.
முதல் இரவில் முத்திரை பதிக்கும் உணர்வு
மாபெரும் மனித சங்கிலியை ஏற்படுத்திய உணர்வு.

- பாலு

மேலும்

balu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 10:31 pm

கவிஞரின் காதல்🌹

உயிர் கொடுத்த அன்னை மீது இயற்கையான காதல்
உலகறிய செய்த தந்தை மீது பயம் கலந்த காதல்
கல்வி போதித்த ஆசிரியர் மதிப்பு மிகுந்த காதல்
என் உயிரை விட மேலான தமிழ் மீது அளவற்ற காதல்
என் இதயத்தை கொள்ளை அடித்த அவள் மீது அளபறிய காதல்
என்னை நிழலாக தொடரும் என் நண்பன் மீது உலகளவு காதல்
என்னை வாழ வைக்கும் இயற்கை மீது எனக்கு எல்லையற்ற காதல்.

அருனோதயம் அற்புதம்
சூரியோதயம் ஆனந்தம்
கடற்கரை காலை காட்சி
காண கிடைக்காத அழகான சுகானபுவம்

மல்லிகை பூ இட்லி
கெட்டி சட்னி
தேவாமிர்தம்

வெள்ளை தாளில்
என் சிந்தனை கவிதை ஆறாக பெறுக்கெடுத்து ஓடி
எழுத்து. காம் யில் சேருகிறது.

அறுசுவை உண

மேலும்

balu - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2020 9:23 pm

உயிரே...

பூவின் மொட்டுக்குள் இருக்கும்
தேன்துளி போல...

என் இதய கூட்டுக்குள்
எப்போதும் தித்திப்பாய் இருப்பாயடி...

நீயும் நானும்
சேர்வது ஊரார்க்கும்...

நம் உறவினருக்கும்
பிடிக்கவில்லை...

மனதாலும் உடலாலும் சேர்ந்து
வாழ்ந்தால்தான் வாழ்க்கையா...

மனதால் நினைத்து
வாழ்ந்தாலே வாழ்க்கைதான்...

உன் நினைப்பும்
எனக்கு சுகம்தான்...

உனக்கு விருப்பமென்றால்
வேறுமணம் முடித்துக்கொள்...

உன் நினைவுகளை மட்டும்
என்னிடமிருந்து...

சீதனமாக நீ
கேட்டுவிடாதே...

என் இதயம் வெடித்து
சிதறும் நாள்வரை...

உன் நினைவுகளுடன்
நான் வாழ்வேனேடி.....

மேலும்

nanri thozhare 28-Jun-2020 8:15 pm
அருமை 28-Jun-2020 6:00 pm
balu - கவியாழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2020 12:23 pm

முத்தம்,இதழ் வருடதேனீயின் ரீங்காரம்மெது மெதுவாய்.....

மேலும்

சூப்பர் 20-Jun-2020 9:31 pm
balu - கவியாழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2020 8:45 pm

அவளுக்காய்
வளர்த்த தாடி
அநியாயமாய் என்னை
ஞானியாக்கியது...

மேலும்

அருமை 20-Jun-2020 9:29 pm
balu - Hemadevi Mani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2020 9:32 am

💙“வார்த்தைகளால் காதலித்தது போதும்;
இனி ஆயுள் முழுவதும் காதலிக்க வேண்டும் உன் அருகாமையில்!”❤️என்னவனே பொறுத்துக்கொள்!

மேலும்

நன்றி தோழரே😇 08-Jun-2020 7:38 am
அருமை 07-Jun-2020 11:36 pm
balu - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2020 8:51 pm

மகளிர் தினம் கவிதை 💥

பெண்னே! வீர நடை பழகு💪

அது என்ன சம உரிமை.
பெண்களுக்கு சம உரிமை.
இன்னும் எத்தனை காலங்களுக்கு
இப்படி பேசுவீர்கள், ஏமாற்றுவீர்கள்.
ஆண் ஆதிக்க சமூகம் என்று
வெற்று பேச்சு வேறு.
எல்லாம் மாறிப்போச்சு.
காலம் எங்கள் கையில்.
எங்களை அடைக்கி வைத்த காலம் மலையேறி போச்சு.
புராண கதைகளை சொல்லி
சாஸ்திர சம்பரதாய முறைகள் சொல்லி
எங்களை இனி மேல் ஒடுக்க முடியாது, அடக்க முடியாது.
மகப்பேறு அடையும் பெண் பல மடங்கு ஆணை விட சக்தி வாய்ந்தவள்.
இது விஞ்ஞான உண்மை.
பல துறைகளில்
சாதித்து விட்டோம், இனியும் நிறைய சாதிப்போம்,
சுதந்திரமாக.
பெண் மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவள்

மேலும்

balu - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2020 8:16 pm

என் காதலி. 🌹

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
காதல் வந்தது
அது ராமாயணம்.
அவளும் நோக்கினாள்
நானும் நோக்கினேன்
எங்கள் காதல் பிறந்தது.

பிறை நிலா
அவள் புருவம்.
வண்ண மீண்கள்
அவள் கண்கள்.
என் நெஞ்சை தைக்கும்
அம்பு
அவள் பார்வை.
காந்த விழியாளின்
கண்ணம்
இரண்டும் சந்தன கிண்ணம்.
அவள் இதழ்கள் கொவ்வை பழம்.
கொடியிடையாளின் நடை அழகோ
மான்களின் ஒட்டம்.

அவளை தாவணியில்
பார்க்க வேண்டுமே
காண
கண்கள் கோடி வேண்டும்
ரசிப்பதற்கு
அதுவும் அந்த மஞ்சள் நிற
தாவணியில்
அற்புதம்.
அவளே இனி
தரணியில் ஒரே அழகி.

ரதிக்கும் மன்மதனுக்கும் கடுமையான
சண்டையாம்.
இவள் அழகில்
மயங்கி மன்ம

மேலும்

balu - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2020 9:24 pm

இரவு💕

நிலவே நீ
நீல வான நீச்சல் குளத்தில் நீந்தியது போதும்.
எழில் நிலவே
எழுந்து வா
மிகவும் குளிர் இருந்தால்
அந்த வென் மேகத்தை
எடுத்து போர்த்தி கொள்.

ரொம்பவே சிரிக்கும்
நட்சத்திர கூட்டமே
என்னவள் சரிப்புக்கு
நீங்கள் எம்மாத்திரம்.

கண்களால் கவிதை சொல்லும்
இளம் பாவையே வா
உன் சிங்கார
சிரிப்பை
கொஞ்சம்
அவிழ்த்து விடு
அந்த நட்சத்திர கூட்டம்
அவ்வியம் அடையும்.

என் அழகிய இளவரசியே
அந்த நிலவிடம்
நேரடியாக கேட்கவா
நீ அழகியா
அல்லது வென்னிலவா என்று.

எங்கே அந்த நிலவை
காணவில்லை
உன் எழில் வடிவத்தை
கண்டு நாணி
கரு மேகத்திடையே மறைந்து கொண்டது.

என் எதிரில் நிற்கும்

மேலும்

balu - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2019 3:19 pm

மழையில் நினைந்த புறாக்கள். 🌧

மழையில் நினைத்த இரண்டு புறாக்கள்.
தஞ்சம் அடைந்தது ஓர் அறையில்.
இரண்டும் குளிரில் நடுங்கியது.
மழை விட்டபாடில்லை.
இரண்டும் வெளியே செல்ல வாய்ப்பில்லை.
ஆடை முழுவதும் நினைந்த புறாக்கள்.
வேறு ஆடைகளுக்கு எங்கு செல்லும்.
ஆண் புறாவின் கண்கள் பெண் புறாவின் கழுத்துக்கு கீழே ஒரு நொடி சென்றாலும், சின்னதாக துளிர்விட்ட
காமத்தை விழுங்கி
கண்ணியத்தை இயல்பாக கடைபிடித்தது.
பயம் ஒரு பக்கம்,
வெட்கம் ஒரு பக்கம்,
எப்படியோ ஆடையின் ஈரத்தை உலர்த்தியது பெண் புறா.
நன்றி என்றது பெண் புறா.
எதற்கு என்றது ஆண் புறா.
எதற்காக திரும்பி திசை மாறி நின்றீர்களோ அதற்காக.
ஏன் பதில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
user photo

செல்வா

விர்ஜினியா, அமெரிக்கா
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா

பிரபலமான எண்ணங்கள்

மேலே