மகளிர் தினம் கவிதை 💥பெண்னே வீர நடை பழகு💪

மகளிர் தினம் கவிதை 💥

பெண்னே! வீர நடை பழகு💪

அது என்ன சம உரிமை.
பெண்களுக்கு சம உரிமை.
இன்னும் எத்தனை காலங்களுக்கு
இப்படி பேசுவீர்கள், ஏமாற்றுவீர்கள்.
ஆண் ஆதிக்க சமூகம் என்று
வெற்று பேச்சு வேறு.
எல்லாம் மாறிப்போச்சு.
காலம் எங்கள் கையில்.
எங்களை அடைக்கி வைத்த காலம் மலையேறி போச்சு.
புராண கதைகளை சொல்லி
சாஸ்திர சம்பரதாய முறைகள் சொல்லி
எங்களை இனி மேல் ஒடுக்க முடியாது, அடக்க முடியாது.
மகப்பேறு அடையும் பெண் பல மடங்கு ஆணை விட சக்தி வாய்ந்தவள்.
இது விஞ்ஞான உண்மை.
பல துறைகளில்
சாதித்து விட்டோம், இனியும் நிறைய சாதிப்போம்,
சுதந்திரமாக.
பெண் மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவள்.
உதாரணமாக நம் நாட்டு கைம்பெண்கள்.
புள்ளி விவரங்கள் இதை பறைசாற்றும்.
எங்களுக்கு யாரும் இறக்கம் காட்ட வேண்டாம்.
எங்கள் எண்ண சிறகுகளை வெட்டாதீர்கள்.
எங்கள் வளர்ச்சியை தடுக்காதீர்கள்.
கற்பு என்று ஒன்றை வைத்து கொண்டு கண்ணகி காலத்து கதையை விடாதீர்கள்.
ஆண்கள் எங்கள் விரோதிகள் அல்ல
அவர்கள் எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்கும் வரை.
எங்களால் ஆண்களை விட நிறையவே சாதிக்க முடியும்.
இது போட்டி,
பொறாமையில் கூறவில்லை.
மிக பெரிய உண்மை, நிதர்சனமும் இது தான்.
மானுடத்தின் நதி மூலம், ரிஷி மூலம் ஆராய்ந்தால் தெளிவாக புரியும்.
பெண்ணே! எழுச்சி கொள்!
என்று நான் வீர வசனம் பேசினால் அது மிக பழையது!
புதுயது!!
நீ மிகவும் வளர்ந்து விட்டாய்!
நீ எப்போதும் திரும்பி பார்க்காதே!
வீர நடை போடு!
பெண் என்ற செருக்கோடு நிமிர்ந்து நட!
வெற்றி பயணத்தை தொடர்ந்திடு!
உன்னை வெல்ல உலகில் யாரும் இல்லை!
ஒரு வேளை இன்னொரு பெண் வேண்டுமானால் உன்னை வெல்லலாம்
இது தான் எதிர்கால உண்மை. வாழ்த்துக்கள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (7-Mar-20, 8:51 pm)
சேர்த்தது : balu
பார்வை : 626

மேலே