பண்பாடு

பண்பாடு

மரகொத்தி பறவைகளின்
மாநாட்டிலே கூட பண்பாடு
பற்றி தான் பேச்சு.
சுவர் பல்லிகள் கூட
பண்பாடு பற்றி
சுழன்று, சுழன்று
பேசுகின்றன.
விடுபட்ட வால்களை பற்றி
அவை கவலை பட்டதே
இல்லை.
பல்லி விழுவது பற்றி
பலன் சொல்லும்
இவர்களுக்கு தான்
பெரும் கவலை.
தான் கிழே விழுந்தால்
சமாதி கிட்டுமா
இது பல்லிகளின்
கவலை.
எது பண்பாடு.
தவறு செய்தால்
வருத்தம் தெரிவிப்பது
பண்பாடு.
தெரிந்து தானே
தவறே செய்கிறார்கள்.
வருந்துகிறோம்
என்ற தமிழ் வார்த்தை
ஒரு காயடிக்கப்பட்ட
காமதேனு.
இது பிழை திருத்தும்
பகுதியில் பிழைப்பு
நடத்திக்கொண்டிருக்கிறது.

ஏசு நாதரே! ஏசு நாதரே!
நீர் அன்று பூமையை
தைக்க வாணம் எரிந்த
வண்ண ஊசியாய்
சிலுவையில்
வதைக்கப்பட்ட போது
பிதாவே! இவர்கள்
அறியாமல் செய்கிறார்கள்.
இவர்கள் பாவங்களை
மன்னியுங்கள் என்று சொன்னீர்.
அறியாமல் செய்கிறார்கள்
என்று யார் சொன்னது?
அறியாமல் ஒருவரும்
ஆற்றுவது இல்லை.
தெரிந்தே செய்கிறார்கள்.
ஏசு நாதரே!
உங்கள் மரணம் கூட
தற்கொலை என்று
இவர்கள் பிராது
கொடுத்துவிடுவார்கள்.
பிதாவே! இவர்கள்
தெரிந்தே செய்கிறார்கள்.
வருந்துவது பண்பாடு.
யார் வருந்துகிறார்கள்.
சொற்கள் இந்நாட்டில்
அழுக்காகிவிட்டன.
வேறு கைகளை
விலைக்கு வாங்கிகொண்டாலொழிய
சிக்கெடுப்பது
மிகவும் சிரமமாகிவிடும்.

வியர்கிற சூரியனுக்கு
விசிறிவிடுகிற கவிஞர்கள்
இவர்கள் அல்ல.
குளிர் நிலவுக்கு குடை
பிடிக்கிற கவிஞர்கள்.
பூதகிகளுக்கு
பல் விலக்க
பனை மரங்களை
பிடுங்கி வருகிற
சிந்துபாத் கிழவர்கள்.
வந்தே மாதிர
வாயில்லா பூச்சிகளை
வாணலியில்
வறுத்து எடுகிற
ஆன்மாவை இழந்த
பிண சொற்கள்.
எங்கே இருக்கிறது
பண்பாடு.
பண்பாடும் இல்லை
ஒரு புண்ணாக்கும்
இல்லை.
- பாலு.

எழுதியவர் : பாலு (29-Jan-22, 7:22 pm)
சேர்த்தது : balu
Tanglish : panpadu
பார்வை : 66

மேலே