தேவதையே

விழிகளில் மொழிகின்றாய்
மோதல் ஆத்திரம்
உடல்மொழிகளில் பொழிகின்றாய்
காதல் சாத்திரம்
நெஞ்சத்தில் நீயோ
அட்சய பாத்திரம்
என்ன வைத்துள்ளாய்
உன்னில் சூத்திரம்
சொல்லடீ அணைக்கப்
போதும் நான் மாத்திரம்
வாழ்வும் வளமும் என்றும்
உனக்கே தோத்திரம்

அஷ்றப் அலி

எழுதியவர் : A L A ALI (15-Jul-25, 9:35 am)
Tanglish : thevathaiye
பார்வை : 114

மேலே