கண்ணீர்
கண்ணீர்
துன்பங்கள் உலுக்கி எடுக்கையில்
நாசி தொட்டு கன்னம் வருடும்
நேயம் மிக்க தோழன்..!
மகிழ்ச்சியை பறை சாற்றி
விழி விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
உடைந்து போகும்
கண நேர முத்துக்கள்..!
துன்பங்களின் போதெல்லாம்
கொதித்து வரிக்கோடிட்டும்
இன்பங்கள் போதெல்லாம்
குளிர்ச்சியுடன் சிதறியும்
நிலை மாறும் பச்சோந்தி......!
சிரிப்பிற்கும் அழுகைக்கும்
அரிதாரம் பூசும் வேடதாரி..!
ஆறாத மனக் காயங்களை
ஆற்றுப்படுத்தும்
அற்புத களிம்பு ..!
அவமானச் சின்னமென்று
ஆண் விழிகளில் சிந்த மறுக்கும்
அதிசய அருவி...!
கோழையானவர்களை
மறைவிடம் கூட்டிச்சென்று
குமுற வைக்கும்
சூழ்நிலைக் கைதி..!
பெண்கள் என்றால் கண்கள் தழுவும்
ஆண்கள் என்றால் கொஞ்சம் நழுவும்
எல்லோர்க்குமாய்
துன்பம் கரைக்கும்
துக்க நிவாரணி..!
#சொ.சாந்தி

