தீப்சந்தினி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  தீப்சந்தினி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  16-Dec-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jan-2014
பார்த்தவர்கள்:  800
புள்ளி:  163

என்னைப் பற்றி...

தமிழ் என்றால் எனக்கு உயிர்.rnhttp://deepchanthini.blogspot.com/rn

என் படைப்புகள்
தீப்சந்தினி செய்திகள்
தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2019 3:44 pm

நீ நிச்சயம்
மீண்டும் தேடுவாய்
என்னும் நம்பிக்கையே
தொலைய வைக்கிறது
என்னை💕

மேலும்

தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2019 2:52 pm

இனி காதல் சொல்லாதே
காதல் என்றொன்றே உலகில் இல்லை என்றாள்,
ஒவ்வோர் முறையும்
ஒவ்வோர் அர்த்தம் தருவாள்
எல்லாம் நாடகம்,
ஈர்ப்பின் விளைவு,
நீர்த்துப்போகும் சுவாரஸ்யம்,
உடல் தேடல்.

பின்பொருநாள்
நீ சொன்னது சரிதான்
காதல் என்றொன்றே உலகில் இல்லை என்றேன்

திரும்புமென்னை நிறுத்திச் சொன்னாள்
ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்
யாருக்குத்தெரியும்?

மறுத்துக்கொண்டே இருப்பவள் கூட
புறக்கணிப்பை எதிர்கொள்ள பரிதவிக்கிறாள்,
அவளுக்கு யாராலாவது காதலிக்கப்பட வேண்டும்
எனக்கு யாரையாவது
காதலித்துக்கொண்டிருக்க வேண்டும்.

மேலும்

தீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2019 2:17 pm

இப்போது நீ உடனிருந்திருக்கலாம்
என்றெண்ண வைக்கும்
திக்கற்ற ஒரு பொழுதை,
எதிர்கொள்ளாமலே
கழிந்திட வேண்டும்
மீத காலங்கள்

மேலும்

தீப்சந்தினி - shivani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2019 2:49 pm

உன்னிடம் மயங்குகிறேன் - Part 10
யார் குற்றம் ?
ரங்கநாதனுக்கு மனசில் வலி இன்னும் ஆறவில்லை. சுந்தரி தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள் என்று நினைத்து மனம் நொந்தான். நெடுநேரம் சிந்தித்தான். மனவழுத்தத்திலிருந்து விடுபடவேண்டுமானால் தற்கொலைதான் வழி என்று முடிவெடுத்தான். ஒரு ஆண் ஒரு ஆணை அவமானப் படுத்தினால் அல்லது அலட்சியப் படுத்தினால் மனசு சீக்கிரம் சமாதானமாகி விடுகிறது. அதையே ஒரு பெண் செய்தால் மன உளைச்சல் தாங்க முடிவதில்லை. அந்தப் பெண்ணை பார்த்துக் கேட்டு விடமென்றோ அல்லது மானம் போச்சு என்று உயிர் விடவோ மனசு துடிக்கிறது. மனசு பலவீனமாயிருப்பவர்கள் தற்கொலைதான் சிறந்த வழி என்று கண்மூடித்தனமாய

மேலும்

இப்பொழுதெல்லாம் நட்பு என்றால் வெறும் செலஃபீ எடுப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எல்லாரும் தத்தம் மனங்களில் நினைக்கிறார்கள். அதனால், தான் யாரையும் கடித்துக் கொள்ள முடிவதில்லை. 17-Sep-2019 9:13 am
தீப்சந்தினி - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Sep-2019 9:05 am

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?

மேலும்

சமூகத்தின் பார்வைக்கும் பேச்சுக்கும் தெரியாது! ஒரு ஆணோ? அல்லது பெண்ணோ? ஏற்கொள்ளும் வலிகள். இருவரின் மனம் ஏற்றுக் கொண்டால், கள்ளத்தனமற்ற செயல் சரியானது! இப்படியொரு தருணத்தில் கற்பு, சமூகம், ஆண் பெண் வித்யாசம் வேண்டியதில்லை! 19-Sep-2019 10:54 am
ஆணாக இருந்தாலும் ,பெண்ணாக இருந்தாலும்,தவறான செயல் தான் ... கற்பு எனபது இருவருக்கும் ஒன்று தான் . இதில் ஆண் வேறு, பெண் வேறு என்று பிரித்துள்ள பார்க்க கூடாது .. 17-Sep-2019 8:22 pm
தீப்சந்தினி - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2019 10:52 am

காஞ்சனாவின் தவிப்பு

இன்று எப்படியும் சேகரிடம் பேசி விடவேண்டும் என்றூ நினைப்பாள் காஞ்சனா. இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம் வந்து அவளை தடுத்து விடுகிறது. அவளும்தான் என்ன செய்வாள்? மனதில் சலனங்கள் இல்லாதவரை பெண்ணும் ஆணும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காஞ்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பது இயல்புதானே. இது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே மாதிரிதான். அப்படி பார்க்கும்போதுதான் அவளின் மனதில் சேகர் வந்து நிற்கின்றான்.சேகர் அவளை பொருத்தவரை கம்பீரமானவன், நிதானமானவன், அவளின் மனதில

மேலும்

கஸ்டமர் கேர் வேலை பார்ப்போர் பலரின் உண்மை நிலை இதுவே. 17-Sep-2019 8:57 am
தீப்சந்தினி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2019 10:10 am

அர்ச்சனா ஒரு அழகு தேவதையாக பள்ளிக்குள் நுழைந்தாள்.

ஆலய மணி ஓசையின்

இசையாய்

ஈடில்லா அவளது அழகு

உலகமே தன்னைப் பார்க்க வேண்டுமென

ஊர் சுற்ற மனக்கணக்கை தொடங்கினாளே,அவளது கள்ளம் களங்கமில்லா குணம் ,கொள்ளை அழகு

எல்லோரையும் கொள்ளைக் கொண்டதே

ஏணி வைத்தாலும் எட்டாத அழகைக் கொண்டவள்

ஐயமின்றி

ஓரக்கண்ணால் பார்க்காத ஆணில்லையே

ஓவியம் போல் இருப்பாள்

ஒளவாறே ஒரு அழகு தேவதை பூமிக்கு வந்துவிட்டாள்.என் நண்பன் கூறினான் :நமக்கும் வாய்த்து இருக்கிறதே நம் அணியில் ,ஓட்டை உடைசலாய்

நமக்கு மட்டும் ஏன் இந்த அழகு மங்கை போல் ஒருத்தி அமையவில்லை. எல்லாம் கடவுளின் செயல்.

என்ன கொடுமை. உண்மைதானே ?

நல்ல கலகலப

மேலும்

மிக்க நன்றி தோழி .. விரைவில் அடுத்த பாகம் 17-Sep-2019 9:00 am
சண்டாளன் கூப்பிட்டான் வேலை இருக்கு என் ரூமுக்கு வா என்று ......... இந்த இடத்தில தொடரும் போட்டது அடுத்த பாகத்திற்கான ஆர்வத்தை தூண்டுகிறது. 17-Sep-2019 8:53 am
தீப்சந்தினி - மலர்1991 - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2019 1:29 am

தொங்கிய தலையுடன் சோகமாக புதுமாப்பிள்ளை தனியாக பெற்றேரைப் பார்க்க வருகிறார்.

ஏன்டா மகனே தனியா வர்ற. வள்ளியைக் கூட்டீட்டா வரல.

அவ வள்ளி இல்லம்மா. கள்ளி. கள்ளிச்செடி. எதையாவது சொல்லி குத்திக் காட்டிட்டே இருக்கிறா. நான் மறுவீடு போன அன்னிக்கே என்னைய பண்ட பாத்திரங்களக் கழுவ வச்சாடா. மாமனார் மைத்துனர்கள் யாருமே அதக் கண்டுக்கில. என்ன சமைக்கவும் சொல்லிட்டா.

நீ தான் எனக்கு சமைக்கக் கத்துக் குடுக்கலயே..
நான் சமைச்சத சாப்பிட்டுட்டு திட்டிட்டே மொத்த ஆரம்பிச்சுட்டா. மரியாதைக் குறைவா 'வாடா, போடா, அவனே, இவனே'ன்னு என்னைத் திட்டினா.

"உன்னை எப்பிடிடா வளத்தாங்க. சமைக்கத்தெரியாத கம்மனாட்டி"ன்னு த

மேலும்

பெண்களின் உண்மை நிலையை ஆண் மூலம் சொல்லி இருப்பது நன்றாகத் தான் இருக்கிறது. 17-Sep-2019 8:51 am
தீப்சந்தினி - முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2014 5:45 pm

" டிக்கெட்.. டிக்கெட்.."

கண்டக்டரின் குரல் எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது திரும்பிப் பார்த்தேன், சம்பத்! என் வகுப்பு தோழன்.!

" டேய் , சம்பத் .. நல்லாயிருக்கியா..?"

"கதிரு, நீ நல்ல இருக்கியா ? எவ்வளவு வருசம் ஆச்சுடா உன்னை பார்த்து.. "

மேலும் பேச வேண்டியிருந்தது.

" இரு.. எல்லோருக்கும் டிக்கெட் குடுத்துட்டு வந்துடுறேன்.." என்று நகர்ந்தவன் பத்து நிமிடத்தில் மொத்த பேருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். வண்டி கருங்கல்பட்டி கடந்தது.

"என்னடா சம்பத்... பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே பழைய பஸ் டிக்கெட் எல்லாம் பொறுக்கி வச்சுகிட்டுச் சுத்துவ .. இப்ப கண்

மேலும்

:) 16-Feb-2014 12:49 pm
நன்றி ஶ்ரீ 16-Feb-2014 12:48 pm
நிறந்தத உணமை அழகு :) 16-Feb-2014 10:49 am
மிக்க நன்றி 15-Feb-2014 9:30 pm
தீப்சந்தினி - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2014 1:42 pm

ராஜா, ராதா தம்பதியர் சென்னையில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு 2மகள்கள், வசதியான குடும்பம் இருவருமே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.......


அலுவலகம் முடிந்ததும் வீட்டில் தனது செல்ல மகள்களுடன் நேரத்தைக்கழித்து சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.


மூத்த மகள் ஷிவானி! இவள் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.

போதுமான அளவு அறிவும், அழகும் பேச்சும் கொண்டிருந்தாள்!!!

ஷிவானி யாரிடமும் அதிகமாக பழகமாட்டாள்;தன்னிடம்
வந்து பேசுபவரிடம் மட்டும் பேசிவிட்டு அதோடு நிறுத்தி விடுவாள்.


இயல்பான பண்புடையவள் ஷிவானி.

இரண்டாவது மகள்தான் ரிஷானி!

ரிஷானியோ! ஷிவான

மேலும்

இப்போதுதான் தொடக்கி உள்ளேன் .. அருமை முடிவு .. பெயரே மிக அருமை தோழி .. 05-Apr-2014 1:44 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே! 01-Mar-2014 12:59 pm
மிக்க நன்றித்தோழி! 01-Mar-2014 12:59 pm
நல்ல தொடக்கம் விதியின் விளையாட்டு தொடர்கிறேன் தோழி! 01-Mar-2014 9:14 am
தீப்சந்தினி - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2014 11:06 pm

கரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11

அத்தியாயம் 11

கமாலாவின்வீட்டில்எல்லோரும்மருத்துவ மனையில்தான்இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப் படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும்அவளைக்கொடுமைப்படுத்தியது
ஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி
அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்த

மேலும்

பெண் மன ஆதங்கங்களை உடைத்து உண்மையாக்கிடும் பாரதி வரிகள்.. கதையினுள் ஆர்வத்தைக் கூட்டுகின்றது.. அருமை ஐயா..!! 04-Mar-2014 10:59 pm
விரைவில் தங்கையே!நன்றி! 22-Feb-2014 5:25 pm
அருமை ! புதுமைப் பெண்ணாக எப்படி கமலா தன்னை மாற்றிக் கொள்வாள் என்பதை அறிய ஆவல் என்னுள் எழுகிறது ...!! 22-Feb-2014 5:15 pm
ஆஹா என்னா ஒரு எழுத்து நாட்டியம்.. அருமை தந்தையே.. !ரசித்தேன்..வியந்தேன் 17-Feb-2014 2:15 pm
தீப்சந்தினி - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2014 10:15 am

அன்புள்ள அம்மாவுக்கு,
நான் இங்க நல்லா இருக்கேன். நீங்களும் நல்லா இருப்பீங்கனு நம்பறேன்.உடம்ப நல்லா பாத்துக்றீங்களா?.அப்பாவுக்கு முட்டி வலி எப்படி இருக்கு.அர்ச்சனா ஒழுங்கா காலேஜ் போய்ட்டு வராளா?. நஸ்ரியாவுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்.வருத்தமாதான் இருக்கு. என்ன பண்றது?. போன தடவ நான் வந்தப்போ நட்ட ரோஜா செடி எல்லாம் எப்படி இருக்கு.போய் சொல்லுங்க அதுங்க கிட்ட இன்னும் ஒரு மாசத்துல நான் அங்க இருப்பேன்னு.
கடிதம் எழுதறதே அரிதாகிவிட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு கடிதம்.ஆனா அம்மா, நினைவுகளுடனே வாழற எங்களுக்கு தான் தெரியும்,கடிதங்களோட அருமை.வீட்ட பத்தி ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த கடிதங்கள் தா

மேலும்

arumai! 09-Apr-2014 4:21 pm
சிறந்த படைப்பு.... 15-Mar-2014 4:01 am
நன்றி..எங்க போனீங்க ரொம்ப நாள் ஆச்சு பார்த்து.. 26-Feb-2014 4:00 pm
நன்றி தோழமையே.... 26-Feb-2014 3:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (129)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா சேகர்

நா சேகர்

சென்னை
user photo

பட்டாபிராமன்

புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (139)

சிவா

சிவா

Malaysia
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (129)

மேலே