வெ கண்ணன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வெ கண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Oct-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2013
பார்த்தவர்கள்:  1075
புள்ளி:  1080

என்னைப் பற்றி...

கவிதை, கலை, தமிழ் ஆர்வம் கொண்டவன்.
-------------------------------------------------

நல்லது
எதுவென்று தேடு
நல்லதை
மட்டுமே நாடு
நன்றிகள்
பலநூறு கூறு
நற்பண்புகள்
அதை நீ பாராட்டு..!!

எல்லை
இல்லாதது மனம்
அதில்
ஏற்ற இறக்கங்கள் ஏராளம்
ஏற்றதைப்
போற்றப் பழகு
எண்ணத்தின்
தூசுகளைத் தூற்று..!!

விளக்குபோல்
அளவாக எறிந்திடு
விடியல்போல்
சுகமாக வெகுண்டெழு
உறக்கத்தை
ஒளிகொண்டு எழுப்பிடு
சோம்பலை
சூடேற்றி முறித்திடு..!!

எரிகின்றவற்றுக்கு
எரிபொருள் தருவதை நிறுத்திடு
பொழிகின்றவற்றை
பொறுமை கொண்டு அணையிடு
எழுகின்றவற்றுக்கு
படிகள் அமைத்து கொடுத்திடு
நிறையென்றவற்றை
நிலையாய் நீயும் காத்திடு..!!

சிந்தனையை
சீர் தூக்கி வைத்திடு
சிற்பியாகி
உன்னையே நீ செதுக்கிடு
வேண்டா
நினைவுகளை அகற்றிடு
சிலையாகி
அழகாகும் உன் உள்ளமும்..!!

- உளி உன் கைகளில் (173681)

என் படைப்புகள்
வெ கண்ணன் செய்திகள்
வெ கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2016 8:41 am

அத்தனையும் மறந்துபோ
அவனது ஆட்டம் நீ அறிவாய்
அத்தனையும் மறந்துபோ
அவனது ஆளுமை நீ உணர்வாய்

எத்தனைச் சிறியவன்
அவன் எத்தனை எத்தனை பெரியவன்
கற்றுணர முடியாது
அத்தனையும் மறந்து போ
உள் உற்றுணர்ந்து அறிவாய் நீ

எத்தனை என வியக்காதே
எது எப்பொருள் என குழம்பாதே
அத்தனையும் ஒன்றேதான்
அற்பத்தின் அற்பம் அது

இங்கு வெற்றிடம் ஏதுமில்லை
நீ ஒளிந்துகொள்ள வழியில்லை
அத்தனையும் மறந்து போ
அறிவாய் நீ அப்பொருளை

உயிர் நிலை ஆட்டம் கொள்ளும்
இருள் பயம் இறுக்கித் தள்ளும்
அத்தனையும் கடந்துபோ
அதுவழி நடத்திச்செல்லும்

மெய்ப்பொருள் அதுமிதக்கும்
மேன்மைகுனம் நீ உணர்வாய்
அத்தனையும் அற்றுப்போ
அந்த ஆதிநில

மேலும்

உணர்தலின் புரிதலில் நினைவுகள் எல்லாம் மதியோடு விவாதம் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 10:19 pm
வெ கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2016 11:06 pm

ஏதுமற்ற பகல்வெளியில்
பெரும் தாகம்
நிறைந்தவனாய் நடக்கின்றேன்

திக்குத் தெரியாமல்
நடைபோடுகின்றன கால்கள்
வெயில் ஒன்றே
புலப்படுகின்றது விழிகளுக்கு

நிழலும்
என் காலடியின் கீழ்
தஞ்சம்புக தவிதவிக்கின்றது

நீரெனப் படுகின்றது நெடும் சாலை
நிதர்சனம் ஏதுமில்லை அங்கே

காணாமல் போய்விட்ட காற்றை
நாசி தேடி இழுத்து
சுவாசப் பெருமூச்சிடுகின்றது

வாகன ஒலியின்
பேரிரைச்சல்
எனை மெல்லமெல்ல
கொன்று திண்கின்றது

தேகத்தீ
எண்ணையின்றி எரிய
குடல் சுருங்கி
கருகிக்கொண்டிருக்கின்றது

வெளியோடு
வெளியாகிப் போய்விடுவேனோ
என்ற அச்சம் மனம் சூழ
பசியெனப்பட்டதை
முதன்முறை உணர்கின்றேன் நான்

பெருமரத்தினி

மேலும்

வெ கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2016 10:58 pm

நான்
எழுதிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு
வார்த்தையிலும்
என் உயிர்
புதைந்திருக்கின்றது
உன் உரு நிறைந்திருக்கின்றது..
உன் பார்வைத் தீண்டலுக்காய்
படர்ந்திருக்கும் மணல் சிற்பமென
மடிந்துகிடக்கின்றதென் காதல் கவி..
காற்றும் கடுமழையும்
சிருபாதங்களும் கால அலைகளும்
கலைத்துக்கொண்டிருக்கின்றன
அச்சிறு கவியை...
என்னுயிரும் உன் உருவும்
பெரும் மணல் பரப்பினில்
காத்துக்கிடப்பதனை
உன் மனக்கண்கள்
கானலாகவாவது கண்டிருக்குமெனில்
நெஞ்சம் நிறையும்வரை
உயிர்க்காற்றிழுத்து
கொஞ்சம் அதில் என் உரு வடித்து
சிறு கண்ணீர்த்துளி
ஒன்றினில்
வெளியெடுத்து
நெற்றித்திலகமிடு...
என் கவிதை
நிம்மதிப் பெருமூச்சிடட்டும்!

மேலும்

வெ கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 3:02 am

மானிடராய்ப் பிறவாதே
மதிகொண்ட மிருகங்களா
மானிடராய் மட்டுமிந்த
பூவுலகில் பிறவாதே

உறங்காது உழைத்திடும்
எறும்பு மக்கா
உன் உழைப்பிங்கே சுரண்டப்படும்
பிறவாதே மானிடராய்

உடையின்றி அலைந்திடும்
குரங்கு மக்கா
உன் கண்ணியம் குலைக்கப்படும்
பிறவாதே மானிடராய்

மனிதச்சாதி ஒன்றல்ல
ஆயிரம் ஆயிரம் இருக்கிங்கே
பழகுவதும் குற்றமென்பார்
பிறவாதே மானிடராய்

சுதந்திரமாய் பேசிடலாம்
என்றே நீ பேசிவிட்டால்
நாவறுக்கப் பட்டிடுவாய்
பிறவாதே மானிடராய்

பகையென்று வந்துவிட்டால்
குலையறுக்கப் படுவாய் நீ
பத்திரமாய் அங்கே இரு
பிறவாதே மானிடராய்

இம்மதமென்று
சொல்லிக்கொல்வான்
இந்நிறமென்று
சொல்லிக்கொல்வான

மேலும்

உண்மை அருமை இனிமை ..... யதார்த்த வரிகள் ...வாழ்த்துக்கள் கண்ணன் 31-Oct-2015 6:37 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Nov-2014 10:02 am

படுக்கப் பாயுமில்ல – கட்டி
உடுக்கத் துணியுமில்ல !
நடக்க வீதியில்ல – நீட்டிக்
கெடக்க வீடுமில்ல !
தடுக்க நீதியில்ல – தட்டிக்
கேக்க நாதியில்ல !
ஒடுக்கப் பட்டவங்க – ஒம்ம
காக்க யாருமில்ல !

சாமி கோயில்கட்டி – சடங்கு
நூறு செஞ்சி...
பூமி காத்தஇனம் – பொதஞ்சி
போன பின்னே...
ஆமி காரன்வந்து – ஆழ
கெடங்கு வெட்டி...
சாமி செலையெடுத்தான் – பாவி
சனமே நீங்கஎங்க ?

கத்தி கதறியழ – பாவம்
இழுத்துப் போச்சிசனி !
செத்த பொணத்தக்கூட – ஐயோ
திருப்பி கொடுக்காதினி !
அத்து அறுந்துப்போன – ஊரே
சுடுகாடு தானேயினி ?
சுத்தி சுத்திவந்தீக – எங்கடா
அந்த மகாமுனி ?

பால குடிச்ச – சின்ன
பச்ச கொழந்தகள.

மேலும்

மிக அருமை! 15-Nov-2014 5:17 am
வலிகளைக் காட்சிப்படுத்திய இதே எழுத்துகள் வழிகளையும் காட்ச்சிப் படுத்தும் தோழா ! நன்றி கருத்திற்கு ! 13-Nov-2014 9:06 pm
உலகத்தின் காதுகளுக்கு அல்லது கண்களுக்கு ஓரளவிற்கேனும் எட்டி இருப்பதால் தானே உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தங்களால் இப்படியொரு கருத்தினை எழுத முடிந்தது சார் ? தமிழ்நாட்டின் பிச்சையோ, இந்தியாவின் எச்சிற்கை சோற்றுப் பருக்கையோ தேவையில்லை இந்த மக்களுக்கு ! இது எனது ஊரின் அவலத்தை உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் மேடை ! சொல்விற்க வேண்டிய ஏழ்மைநிலை எனக்கில்லை ! மலையக மக்கள் என்ற ஒரு பிரிவினர் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதே நான் சொல்லித் தான் இங்கு பலருக்கும் தெரியவந்தது ! அந்த மலையக மக்களின் துயரங்களைச் சொல்லி பிச்சைக் கேட்க வேண்டிய தேவையில்லை எனக்கு ! இது உரிமைகளைக் கேட்க துணிந்து நிற்கும் ஒரு படைப்பாளியின் கடமை என்பதை உணருங்கள் ! எழுத்தில் உங்களுக்கு நம்பிக்கையில்லை ! உங்களால் வாசிக்கப்பட்டது வெற்றுக் கவிதையாக இருக்கலாம் ! என்னால் எழுதப்பட்டது வெற்றுக் கவிதை அல்ல என்பதை நான் அறிவேன் ! எழுதுவதைத் தாண்டி என் கரம் நீளும் என் சமூகத்திற்காக ! அத்திவாரமிடும் நேரமென்பதால் ஆரவாரமில்லை தற்போதைக்கு ! மன்னிக்கவும் சார் ! 13-Nov-2014 9:04 pm
தொடர்ந்து ஒலித்துகொண்டு இருக்கின்ற உங்கள் ஓலக்குரல் ஓரளவிற்கேனும் உலகத்தின் காதுகளில் எட்டி இருக்கிறதா தம்பி? இந்தியாவின் நேசக்கரம் துணைக்கு வரும் என்ற பசப்பு மொழி தோற்கும் என்ற என் சொல் இன்று உண்ண்மையாகிவிட்டது. உங்கள் துயரம் சிலருக்கு தமிழ் நாட்டு அரசியல். நீங்கள் மலடிகளின் மயக்குமொழிக்கு பலியாககூடாது. சொல் விற்க இது நேரமில்லை. சுதந்திரம் யாசகத்தால் விழையாது. வெற்றுக் கவிதைகள் வேதனைக்கு மருந்தில்லை. மன்னிக்கவும். 13-Nov-2014 8:38 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Nov-2014 2:15 am

மனிதம் !
உலகத்தின் உயர்ந்தசொல்!
உயிர்களின் சிகரம் !
புனிதமான பொக்கிஷம்
ஆனால் இன்று....

உன் காமப் பார்வையிலே
கண்ணகி கூட
கர்ப்பம் தறிக்கிறாள்

பணத்தின் பார்வையிலே
அடக்கமானவள் கூட
ஆடை உரிக்கிறாள்

ஆசைப்பட்ட இடத்தில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டாய்

அங்கே
ஆபாச படங்கள் எடுத்து
ஆஸ்காருக்கு அனுப்பிவிட்டாய்

அத்துமீறல் விளையாட்டையே
தேசிய விளையாட்டாய்
மாற்றிவிட்டாய்

விபச்சார விடுதியில் மட்டுமே
ஒற்றுமையான தேசத்திற்கு
ஒத்திகை பார்க்கிறாய்

மானுடத்தைத் திருத்த
பூமித்தாய் புறப்பட்டாள்
ஆனால்
பூமித்தாய்க்குப் பிரசவவலியென்று
அணுகுண்டு போட்டு
அறுவை சிகிச்சை

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:30 pm
இறை நியதியை கூட இறுதியில் பயன் படுத்தி உள்ள விதம் உங்கள் உத்தி என்று தான் நினைக்கிறேன் 06-Jun-2015 10:59 am
புரிதலில் கருத்து பதிவது நீங்க நீங்கதான் தோழரே.. 03-Dec-2014 11:20 pm
ஐந்து மில்லிகிராம் பாஸ்பரஸ் வெப்பம் அகிலத்தையே அழித்து விடும்... இக்கவிதை ஒரு வெப்ப உமிழ்வினை... வேற்றுமை என்னவென்றால்.... இங்கு ....வெப்பம்.. வளர்ச்சிக்கான விதை.... 29-Nov-2014 6:42 am
வெ கண்ணன் - வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2014 1:45 am

வரி பிடுங்கி
கணக்கெடுத்து
தனக்கென்பதை
வைத்துக்கொண்டு
சில நோட்டுகளை
மூட்டை கட்டி
பாத்திரம் பார்த்து
தூக்கி எரிந்து
காசுகளை
எண்ணித் தயங்கி
கூட்டத்தினுள்
வாரி இறைத்து
யாசகம் கிடைத்தது
இத்தனைதான்
என்று அள்ளிக்கொடுத்தவர்
வாயில் இலவச அரிசி இட்டு
மாறி மாறி மாற்றமின்றி
அரசியல் செய்யும் அரசாங்கம்!

மேலும்

மிக்க நன்றி. 12-Nov-2014 8:38 am
நெத்தியடி தோழரே... அருமை... 11-Nov-2014 8:36 am
வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) manimee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Nov-2014 8:50 am

மௌனமாய் இருக்கிறது வானம்

வறண்டு கிடக்கும்
பூமியை பார்த்தும்
மிகவும் மௌனமாய்
இருக்கிறது அந்த வானம்

ஒதுங்கிப் போகிறது வெண்மேகம்

மேகத்தின் நிழலும் விழாது
தவித்துக் கிடக்கின்றது செம்மண்

இருள் மறைத்தாலும்
வெப்பம் பூமியின் வெக்கையை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றது

மௌனம் காற்றை
அடிக்கடி சூறையாடுகின்றது

வேர்கள்
நீர்த்தேடுதல் அர்த்தமற்றதென்று
நிறுத்திக்கொண்டது;
உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைகள் அதனை
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றது

சருகுகளின் சங்கீத நாடி
வெப்பத்தினால் ஒடிக்கப்பட்டு
துகள்களாக நொறுக்கப்படுகின்றது

ஓலமிடவும் சக்தியின்றி
நரிகள் பொந்துகளில் சாகின்றன

மேலும்

எழுத்தாய்ப் பெய்துவிட்டீர் எழிலாய் உணர்வுமழை வாழ்க வளமுடன் 08-Nov-2014 12:50 am
மிக்க நன்றி :) 08-Nov-2014 12:22 am
மிக்க நன்றி :) 08-Nov-2014 12:22 am
மிக்க நன்றி :) 08-Nov-2014 12:22 am
வெ கண்ணன் - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 8:14 am

உணவுகளில்
கலப்படம்
உயிர்க்கொல்லி

எண்ணங்களில்
கலப்படம்
உறவுக்கொல்லி

நம் சக்த்தியை
காப்போம்
கலப்படங்களிளிருந்து நம்மை காத்து

மேலும்

நன்றி 26-Apr-2014 1:39 pm
கலப்படங்களிலிருந்து நம்மை காப்பது அரிது அம்மா...... 26-Apr-2014 1:10 pm
வெ கண்ணன் - வெ கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2014 7:20 am

எத்தனையோ
கனவுகளை
நான் தொலைததுண்டு..!!

தொலைந்த இடம்
வெகு தொலைவுதான்..!!

தொலைத்தது
வெறும்
கனவுகள் என்பதால்
பலவற்றை
என்னால்
அந்த காலத்தின்
பின் சென்று
வெட்டி எடுத்து
வர முடிகின்றது..!!

அந்த
ஏக்கங்கள்
என்னுள் இன்னும்
அதே வண்ணத்தில்
இருப்பது
நம்பமுடியாத உண்மை..!!

என் சரித்திரத்தில்
நான்
எழுத முடியாத
அத்யாயங்கள்
அந்த பல
நிறைவு பெறாத கனவுகள்..!!

காலம் கடந்தபின்
திரும்பிப் பார்த்ததில்
பல கனவுகள்
வெறும் கனவுகளாகவே
கிடப்பது தெரிகின்றது..!!

கடந்து வந்த
பாதைகளின் ஓரத்தில்
அதன் பூக்கள்
கேட்பாரற்று
மலர்ந்தபடியே
உறைந்து கிடக்கின்றன..

மேலும்

மிக்க நன்றி..!! 22-Apr-2014 8:17 am
படைப்பு அருமை.... 21-Apr-2014 1:25 pm
மிக்க நன்றி ஐயா..!! தங்கள் கருத்தும் உண்மைதான். சில கனவுகள் இன்றும் நனவாகிட சாத்தியம் இருக்கின்றது. நம்பிக்கையுடம் அதனை சுமந்து தேவையான முயற்சி செய்தால் நிச்சயம் அந்த கனவுகள் மெய்ப்படும். 21-Apr-2014 9:16 am
மிக்க நன்றி ஐயா..!! தங்கள் கருதும் உண்மைதான். சில கனவுகள் இன்றும் நனவாகிட சாத்தியம் இருக்கின்றது. நம்பிக்கையுடம் அதனை சுமந்து தேவையான முயற்சி செய்தால் நிச்சயம் அந்த கனவுகள் மெய்ப்படும். 21-Apr-2014 9:15 am
வெ கண்ணன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2014 8:26 am

நமது எழுத்து.காம் எவ்வாறு பிரபலமடைந்துள்ளது , எப்படி பார்வையாளர்கள் வருகிறார்கள் என்ற ஒரு தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

1) இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோரில் 81.5 % சதவீதம் பேர் எழுத்து.காம் என்ற இந்த இணையதளத்தை பார்த்துள்ளனர்.

2) இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் பட்டியலில் எழுத்து.காம் 20,126 வது இடத்தை பெற்றுள்ளது. (தமிழக அளவில் இதை கணிக்கிட முடியாது.)
உலக அளவில் 1, 71, 600 வது இடத்தை பெற்றுள்ளது.
**** தமிழ் மொழிக்கான இலக்கிய தளம் என்ற நோக்கில் இந்த இடங்களை பெற (...)

மேலும்

தகவலுக்கு மிக்க நன்றி தோழரே! 19-Mar-2014 9:54 pm
நானும் "எழுத்து.காம்" ல் இருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன்!!!!! அய்யா 19-Mar-2014 7:26 pm
நீங்கள் தட்டுவீர்கள் என்றால் அதற்கு என் தோள்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா. விரைவில் நல்ல படைப்பு எழுதி உங்களிடம் பாராட்டு வாங்க முயற்சிக்கிறேன். அதிலும் மரபுக்கவிதை எழுதி பாராட்டு வாங்கவே ஆசைப்படுகிறேன். மிக்க நன்றி ஐயா! 19-Mar-2014 5:00 pm
அதை எழுத்து நிர்வாக குழு தான் ஆராய முடியும் ஐயா.! எனக்கு தெரிந்த வரை... முதலிடம் கவிதைக்கு 2வது நகைச்சுவைக்கு 3 வது கதைக்கு 4 வது கட்டுரைக்கு பார்வையாளர்கள் வருகின்றனர். இதில் பிரபல உறுப்பினர்களின் படைப்பு என்றால் அனைத்து பகுதிக்கும் குறிப்பிட்ட பார்வைகள் கிடைக்கிறது. நன்றி ஐயா..! 19-Mar-2014 4:58 pm
வெ கண்ணன் - விவேக்பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2014 12:49 pm

மனதை அடக்கும்
குணத்தைக் கொண்ட
மனிதனை இன்னும் ஏன்
படைக்கவில்லை பிரம்மன் ?
*
போகின்ற வாழ்வை
இழுத்துக் கட்ட
கயிறின்று திரிப்போம்
கவிதையிலே !
*
காகிதப் பூக்களில்
மையின் தேனை
உறிஞ்சிச் செய்ததுதான்
கவிதைப் பண்டம் !
*
பாவத்தின் பலனை
சாவதற்கு முன்பே
சொல்லிடும் தூதன்
தானே முதுமை !
*
உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்ந்தது
குழந்தையின் காலடிச் செருப்பு !

விவேக்பாரதி

மேலும்

மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் 09-Mar-2014 9:38 am
நன்றிகள் தோழமையே கருத்திற்கும் வருகைக்கும் 09-Mar-2014 9:37 am
உன் சிந்தனை திறனை கண்டு அசந்துவிட்டேன். அருமை தம்பி 08-Mar-2014 5:47 pm
அருமையான படைப்பு.... வாழ்த்துக்கள்... 08-Mar-2014 4:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (84)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
myimamdeen

myimamdeen

இலங்கை
user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (84)

சிவா

சிவா

Malaysia
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (85)

நிலா

நிலா

சென்னை
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
மேலே