j2karthi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : j2karthi |
இடம் | : திருவொற்றியூர், சென்னை |
பிறந்த தேதி | : 09-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 230 |
புள்ளி | : 26 |
பொறியியல் மாணவன்
அன்று,
என் விழிகளை பார்த்து கொண்டே
என் விரல்களை அணைத்தவள்.
இன்று,
என் விரல்களை விரட்டி விட்டு
என் விழிகளை நணைக்கிறாள்.
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
மரத்த தான் வெட்டி வெட்டி சாய்ச்சு
மனுசந்தான் வீடொன்னு கட்டி
மழையின்றி தவிக்கின்றான் பாரில்
மடச்செயலென்று அழவில்லை யாரும்
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
வீடெல்லாம் துடைப்பத்தால் கூட்டி
அள்ளினான் குப்பை - அதை
குப்பை கூடையில் கொட்டாமல்
வீதியில் வீசினான் தூக்கித் தூக்கி
வீணரின் செயலைத் தான் பாரினில் பாரு
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
ஜிக்கா ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கா
மழை வேண்டி நடத்தினான் யாகம்
மக்காத குப்பைத் தான் தினம் உபயோகம்
நிலத்துள் நீரும் புகாமல் குதித்தோடி
காதலில் தோற்றவனுக்கு
பஞ்சு மெத்தையும் தூக்கு மேடை
காதலில் ஜெயித்தவனுக்கு
தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.
காதலில் தோற்றவனுக்கு
பஞ்சு மெத்தையும் தூக்கு மேடை
காதலில் ஜெயித்தவனுக்கு
தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.
மாற்றம் நிச்சயம் வேண்டும்
மத்திய ஆட்சியில் மட்டும் அல்ல
மக்களின் மனசாட்சியிலும்...!!!
உரிமைக்காக போராடும்
அரவாணிகள் மத்தியில்,
குடியுரிமையை வீணாக்கி
அரவாணி ஆகிவிடாதே...!!!
மாற்றம் நிச்சயம் வேண்டும்
மத்திய ஆட்சியில் மட்டும் அல்ல
மக்களின் மனசாட்சியிலும்...!!!
உரிமைக்காக போராடும்
அரவாணிகள் மத்தியில்,
குடியுரிமையை வீணாக்கி
அரவாணி ஆகிவிடாதே...!!!
என் அம்மா
என்னை அடிக்கும் பொழுது
இருந்த கோபத்தை விட,
நான் அழுதபின்
என்னை அணைக்கும் பொழுது
இருந்த பாசம் தான் பெரியது.
இதழ்களும் கண்ணங்களும்
காதல் செய்கிறதோ !
இதழ் விரித்து சிரிக்கும் பொழுது
கண்ணங்களும் விரிகிறதே !
சாலை யோரத்தில் நாங்கள்
தண்ணீரை இழந்து துடிக்கும் மீன்கள்
கண்ணீர் மட்டுமே எங்கள் சொந்தம்
எவருமில்லை எங்கள் பந்தம்
நாள்முழுக்க நிறைய உழைத்தும்
வியர்வை மட்டுமே எம்மை உண்ணும்
மேகப் பெண்ணவள் நொந்து அழுதால்
அன்றே குளியல் வெளிச்சவிடியல்
ஒதுக்கப்பட்டதே எமக்கு உரிமை
அதனாலோ அழைக்கப்பட்டோம் யாமும் ஒதுக்கப்பட்டோராய்
எம்மால் இல்லை யாருக்கும் பெருமை
என்ற நினைப்பாலே வதைக்கப்பட்டோம்
ஒருவேளை மட்டுமே வயித்துக்குசோறு
வருந்தி அழுதாலும் உதவிக்கு யாரு
எல்லோரையும் நல்லா வாழவைக்கும் ஊரு
வாழ்க்கை எங்களுக்கோ பெரும்போரு
திருமணத்திற்கு முன்பு
பயம் எனபது MMS மாதிரி
எப்போதாவது வரும்.
திருமணத்திற்கு பின்பு
பயம் என்பது SMS மாதிரி
அடிக்கடி வரும்
இதழ்களும் கண்ணங்களும்
காதல் செய்கிறதோ !
இதழ் விரித்து சிரிக்கும் பொழுது
கண்ணங்களும் விரிகிறதே !