ராஜராஜேஸ்வரி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜராஜேஸ்வரி
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  04-May-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Mar-2014
பார்த்தவர்கள்:  1167
புள்ளி:  434

என்னைப் பற்றி...

தமிழின்பால் கொண்ட காதலால்
மகாகவி மேல் கொண்ட பற்றால்
கவியரசன் எழுத்தால் கவரப்பட்டதால்
என் கிறுக்கல்களின் ஆரம்ப முயற்சி!!!

என் படைப்புகள்
ராஜராஜேஸ்வரி செய்திகள்
ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2019 7:52 am

நாசி வழி நுழைந்து
சுவாசத்தை ஆட்கொண்டு
அதிகாலை ரசிக்க வைப்பாய்!

வலியின் ரணத்தை
மனதின் சுமையை
நொடியினில் மறக்க வைப்பாய்!

பொருளேயின்றி நட்பாய்
நாமும் பேசி சிரிக்க
யாதொரு பொருளாய் நீயே ஆனாய்!

குளிருக்கு இதமாகி
சளிப்புக்கு மருந்தாகி
களிப்புக்கு மதுவாகி
ஒரு கோப்பைக்குள்
ஒழிந்திருக்கும்
கருப்பாமிர்தம்!

மேலும்

ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2019 7:48 am

விழி வழி புகுந்து
சுவாசம் கலந்து
நெஞ்சம் தொட்டு
என்னுள் நிறைகிறாய்!

ஒவ்வொரு விடியலும்
உனக்காய் விடிய
மற்றொரு பாதியாய்
என்னுடன் இணைகிறாய்!

பொய்யாய்ப் புன்னகை
முகத்தில் கூட்டினும்
மெய்யாய் நின்னையே
காணத் தவிக்கிறேன்!

சுற்றும் பூமியாய்
கண்கள் சுழல
சற்றே நின்முகம்
கண்டதும் லயிக்கிறேன்!

ஆறாம் அறிவின்
உச்சம் தொட்டும்
அறியாக் குழவிபோல்
குழைந்திட வைக்கிறாய்!

பேசும் மொழியோ
நிரலாக்க மொழியோ
பத்தியில் பெயர
பார்வையொன்றில்
புலப்பட செய்கிறாய்!

எந்தனைக் காட்டும்
ஆடியுங் கூட
நின்னையே காட்டும்
மாயங்கள் புரிகிறாய்!

நனவில் கதைத்திட
விக்கிடும் வார்த்தைகள்
கனவில் கவியாய்ப்
பொழிந்திட செய்கிறாய்!
நிழலாய் என்

மேலும்

அருமை. 05-Oct-2019 9:31 pm
ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2019 7:48 am

விழி வழி புகுந்து
சுவாசம் கலந்து
நெஞ்சம் தொட்டு
என்னுள் நிறைகிறாய்!

ஒவ்வொரு விடியலும்
உனக்காய் விடிய
மற்றொரு பாதியாய்
என்னுடன் இணைகிறாய்!

பொய்யாய்ப் புன்னகை
முகத்தில் கூட்டினும்
மெய்யாய் நின்னையே
காணத் தவிக்கிறேன்!

சுற்றும் பூமியாய்
கண்கள் சுழல
சற்றே நின்முகம்
கண்டதும் லயிக்கிறேன்!

ஆறாம் அறிவின்
உச்சம் தொட்டும்
அறியாக் குழவிபோல்
குழைந்திட வைக்கிறாய்!

பேசும் மொழியோ
நிரலாக்க மொழியோ
பத்தியில் பெயர
பார்வையொன்றில்
புலப்பட செய்கிறாய்!

எந்தனைக் காட்டும்
ஆடியுங் கூட
நின்னையே காட்டும்
மாயங்கள் புரிகிறாய்!

நனவில் கதைத்திட
விக்கிடும் வார்த்தைகள்
கனவில் கவியாய்ப்
பொழிந்திட செய்கிறாய்!
நிழலாய் என்

மேலும்

அருமை. 05-Oct-2019 9:31 pm
ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2019 2:55 pm

🔥பொங்கும் அனலே புனிதப் பொருளே
எங்கும் ஒளிரும் செம்மைக் கனலே
ஆதி மனிதனின் முதன்மைத் தேடலே - வேதம்
ஓதி வளர்க்கும் வேள்விச் சுடரே!

எரிமலையை எதிர்த்து நிற்கப்
புவியில் ஏதும் ஜீவனில்லை
காட்டுத் தீயைக் கடந்து செல்லக்
காற்றும் கூடத் துணிவதில்லை!

தொன்று தொட்ட வழக்கமென்று
உடன் கட்டை ஏற்றினார்கள்
கலங்க மற்ற உந்தனையே
கலக மூட்டக் கொளுத்தினார்கள்!

இரையைப் பாங்காய் சமைத்திடவே
அடுப்பில் அனலைக் கூட்டினார்கள்
இறையைத் தாமும் வணங்கிடவே
அகல் விளக்கில் ஏற்றினார்கள்!

வெம்மை தந்து ஜனிக்க வைப்பாய்
தணிந்து விட்டால் மறிக்க வைப்பாய்
தீண்டி விடச் சுடர் தருவாய் - எல்லை
தாண்டி விட்டால் பொசுக்கிடுவாய்!

இருள் கலைந்து

மேலும்

பெண்மையை மிஞ்சும் சக்தி இந்த உலகில் யாது 08-Aug-2019 7:54 pm
ராஜராஜேஸ்வரி - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 1:31 am

ஈன்ற தாயின் கருணையினால்
இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில்
நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே
அகந்தை யின்றி நடைபோட்டு
வான்போல் பரந்த உளத்தோடு
வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!

செருக்கை விரட்டி அன்பாலே
தெளிந்த அறிவைப் பெறவேண்டும் !
பெருமை மிக்க பண்பாட்டைப்
பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து
வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
இயன்ற உதவி செயவேண்டும் !

கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும்
புரிதல் மிக்க உறவுகளும்
கூட்டை விடுத்துப் போகையிலே
கூடத் துணை

மேலும்

மிக்க நன்றி ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி ஐயா ! அதையும் குறிப்பிடுகிறேன் ஐயா ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி !! 26-Jul-2019 7:14 pm
ராஜராஜேஸ்வரி - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2019 9:53 pm

ஆற்றுப் படுகைகளை தூர்வாரி
ஆகாயப் பன்னீரை சேமிப்போம்
அள்ளிய கசடுகளை வயல்தூவி
நன்செய் புன்செய்களை வளம் செய்வோம்

ஆவினக் கழிவுகளை மக்கும் தழைகளை
புறக்கடை உரக்குழியில் எருவாக்குவோம்
மண்புழுக்களை உறவாக்கி மண்துளைகளை பெருக்கி
பூமி எங்கும் பசுமையை நிறைவாக்குவோம்

மக்கா நெகிழிகளை தொழிற்கூடக் கழிவுகளை
மறுசுழற்சியில் மறுமலர்ச்சி செய்திடுவோம்
எக்காலம் காக்கும் பயிர்த்தொழில் முறையை
பாடத்திட்டத்தில் செயல்முறையுடன் பயின்றிடுவோம்

கரிம சேர்மமற்ற சுவாசக் காற்று
காரீயம் மாசுகளற்ற தூயநீர் ஊற்று
இரசாயனம் இல்லா இயற்கை விவசாயம்
ஈந்திடும் பூமிக்கு ஆரோக்கிய எதிர்காலம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

நல்ல படைப்புங்க. வாழ்த்துக்கள்! 25-Jul-2019 9:27 pm
சிறப்பான வரிகளுடன் பொறுப்பான கருத்துக்களுடன் நிறைவான கவிதை வாழ்த்துக்கள் 24-Jul-2019 10:42 pm
ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2019 1:26 pm

பேரன்பிற் குவமை யானாய்
தூரம் காணும் வரையரை கடந்தாய்
ஆகமப் பொருளின் முதன்மை யானாய்
தூம நிறமே நின் நிலையென்றாய்

முட்டும் முகில்கள் ஒன்றாய்க் கூடி - கை
தட்டும் ஒலியே இடியென மாறி
வெட்டும் மின்னல் பாதை போட
கொட்டும் மழையைப் புவியில் கொணர்ந்தாய்

குளிர் நிலவைக் கொண்டு
துகில் கொள்ளச் செய்தாய்
ஒளிரும் ரவியின் தயையால்
உயிர் நிலைபெறச் செய்தாய்

மூத்தோர் சொன்ன கதைகளி லெல்லாம்
மூவரும் தேவரும் வாழ்ந்த னரங்கே
மன்மத ரதியும் காதல் கொண்டு
விண்மீன் பிடித்துக் களித் தனரங்கே

சிந்தை மொத்தம் சிரசில் செலுத்தி
விண்கல மின்றி விண்ணில் பறந்தோம்
விந்தை தானே கோலே யின்றி
கோள்களின் தூரம் சரியாய்க் கணித்தோம்

சிறகை விரித்த

மேலும்

ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2019 1:26 pm

பேரன்பிற் குவமை யானாய்
தூரம் காணும் வரையரை கடந்தாய்
ஆகமப் பொருளின் முதன்மை யானாய்
தூம நிறமே நின் நிலையென்றாய்

முட்டும் முகில்கள் ஒன்றாய்க் கூடி - கை
தட்டும் ஒலியே இடியென மாறி
வெட்டும் மின்னல் பாதை போட
கொட்டும் மழையைப் புவியில் கொணர்ந்தாய்

குளிர் நிலவைக் கொண்டு
துகில் கொள்ளச் செய்தாய்
ஒளிரும் ரவியின் தயையால்
உயிர் நிலைபெறச் செய்தாய்

மூத்தோர் சொன்ன கதைகளி லெல்லாம்
மூவரும் தேவரும் வாழ்ந்த னரங்கே
மன்மத ரதியும் காதல் கொண்டு
விண்மீன் பிடித்துக் களித் தனரங்கே

சிந்தை மொத்தம் சிரசில் செலுத்தி
விண்கல மின்றி விண்ணில் பறந்தோம்
விந்தை தானே கோலே யின்றி
கோள்களின் தூரம் சரியாய்க் கணித்தோம்

சிறகை விரித்த

மேலும்

ராஜராஜேஸ்வரி - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2017 3:30 pm

திரண்டது தமிழ் வீரம்
இதுகண்டு
நிச்சயம்
இந்திய
அரசு.....மிரளும்.....!!

தடைகளை நீ
உடைத்து....உன்
தார்மீகக் கடமையை
மண்ணுக்காக
ஒருமித்து
நின்றுவிடு.....!

காளைகளோடு காலாகாலம்
வாழ்ந்த நாம்
கோழைகள் அல்ல.....
உலகம் போற்றும்
உத்தம வீரர்கள்.....!

பேசுவோம் பேசுவோம்
என்று
பேசவேண்டிய
இடம் செல்லாமல்.....
ஒலிவாங்கி தேடும்
உதவாக்கரை
அரசியல் தவளைகள்
கத்துகிறது.....கவலைதான்.....!

திரண்ட
படை.....இன்னும்
திரண்டுகொண்டே
இருக்கட்டும்.....மிரட்டும்
காவல்
மிரட்டிக்கொண்டே
இருக்கட்டும்.....நீ
கொண்ட எண்ணம்
நிறைவேறும்வரை.....!

மின் துண்டித்து
மிரட்டிய
நம்ம அரச....கும்பிடு

மேலும்

மிக்க மகிழ்ச்சி. நன்றி 22-Jan-2017 3:12 am
அருமைங்க! 20-Jan-2017 8:44 am
மிக்க மகிழ்ச்சி திக்கெட்டும் தெரியட்டும் இந்த எழுச்சி.....!! நன்றி. 19-Jan-2017 2:13 pm
அருமை அருமை எழுச்சி மிக்க வரிகள் ,வாழ்த்துக்கள் தம்பு 19-Jan-2017 12:27 pm
ராஜராஜேஸ்வரி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2017 6:22 pm

தமிழன் என்றாலே சிங்கமடா
தரணியில் என்றும் தலைவனடா
வணக்கம் கூறிடும் பண்புள்ளவன்டா
வஞ்சமிலா நெஞ்சம் கொண்டவன்டா !

தன்மானம் மிக்க இனமடா
சுயமரியாதை உள்ள குலமடா
இரக்கக் குணத்தில் இமயமடா
ஈகைப் பண்பில் உயர்ந்தவனடா !

தொன்மை வாய்ந்த மக்களடா
தொண்டுகள் புரிவதில் சிகரமடா
உதவிடும் உள்ளத்தில் தங்கமடா
வலிவைக் காட்டுவதில் வல்லவன்டா !

அடிமை வாழ்வை அகற்றுபவன்டா
அந்நியர் ஆதிக்கத்தை ஒழிப்பபவன்டா
நட்பைப் போற்றுவதில் கர்ணனடா
உரிமையைக் காப்பதில் புலிகளடா !

உலகமே போற்றிடும் தமிழன்டா
உள்ளத்தால் இணையும் இதயமடா !


பழனி குமார்

மேலும்

சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. 30-Jan-2017 8:48 pm
வீரியமான வரிகள்.., 30-Jan-2017 7:28 pm
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு ! 20-Jan-2017 8:33 am
மிகச்சரி, மிகச்சிறப்பு, தற்போதைய செய்தி ' ஏறு தழுவலுக்கு ' தனி சட்டம் அமைக்க தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளதாம், அப்படி தனி சட்டம் இயற்றினால் அதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாதாம், , எனவே தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றி யாருக்கும் பாதிப்பில்லாத ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்ய வேண்டும் - மு.ரா. 19-Jan-2017 7:29 pm
ராஜராஜேஸ்வரி - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2017 6:22 pm

தமிழன் என்றாலே சிங்கமடா
தரணியில் என்றும் தலைவனடா
வணக்கம் கூறிடும் பண்புள்ளவன்டா
வஞ்சமிலா நெஞ்சம் கொண்டவன்டா !

தன்மானம் மிக்க இனமடா
சுயமரியாதை உள்ள குலமடா
இரக்கக் குணத்தில் இமயமடா
ஈகைப் பண்பில் உயர்ந்தவனடா !

தொன்மை வாய்ந்த மக்களடா
தொண்டுகள் புரிவதில் சிகரமடா
உதவிடும் உள்ளத்தில் தங்கமடா
வலிவைக் காட்டுவதில் வல்லவன்டா !

அடிமை வாழ்வை அகற்றுபவன்டா
அந்நியர் ஆதிக்கத்தை ஒழிப்பபவன்டா
நட்பைப் போற்றுவதில் கர்ணனடா
உரிமையைக் காப்பதில் புலிகளடா !

உலகமே போற்றிடும் தமிழன்டா
உள்ளத்தால் இணையும் இதயமடா !


பழனி குமார்

மேலும்

சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. 30-Jan-2017 8:48 pm
வீரியமான வரிகள்.., 30-Jan-2017 7:28 pm
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு ! 20-Jan-2017 8:33 am
மிகச்சரி, மிகச்சிறப்பு, தற்போதைய செய்தி ' ஏறு தழுவலுக்கு ' தனி சட்டம் அமைக்க தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளதாம், அப்படி தனி சட்டம் இயற்றினால் அதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாதாம், , எனவே தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றி யாருக்கும் பாதிப்பில்லாத ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்ய வேண்டும் - மு.ரா. 19-Jan-2017 7:29 pm
ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2015 9:27 pm

மூவாண்டு கடந்த பின்னும்
முத்து பற்கள் கண்டபோதும்
முதன் முதல் பார்த்த அந்த
முகம் மட்டும் நினைவிலடி!

தத்தி நடை பயின்று
எட்டி வைத்த பாதமன்றோ
சுத்தி சுழன்று வரும்
சுட்டி செய்யும் காலுமன்றோ!

கிள்ளை மொழியில் பேசிடுவாய்
செல்ல குறும்பும் செய்திடுவாய்
மெலிதாய் சினந்திட சிறு பொழுதும்
எளிதாய் சிரிப்பினில் வென்றிடுவாய்!

நுண்ணிய கேள்விகள் விளித்திடுவாய்
எண்ணிய யாவும் புரிந்திடுவாய்
விண்ணில் மீனாய் மிதந்திடுவாய்
வண்ண சிறகை விரித்திடுவாய்!

வஞ்சம் வெகுளி ஏதுமில்லை
நெஞ்சம் மொத்தம் அன்பின் அலை
பொய்மை கயமை அறிந்ததில்லை
வாய்மை மட்டும் உந்தன் நிலை!

தாயாய் நீயே சில நேரம்
என்னை மட

மேலும்

மிக்க நன்றிங்க! 12-Dec-2015 2:19 pm
மிக்க நன்றிங்க! 12-Dec-2015 2:16 pm
மிக்க நன்றிங்க! 12-Dec-2015 2:16 pm
அடி தூள்... அட்டகாசம்.... 08-Dec-2015 1:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (75)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
sivakami arunan

sivakami arunan

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (75)

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (77)

jothi

jothi

Madurai
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே