கனகரத்தினம் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கனகரத்தினம் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 29-Jun-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 4440 |
புள்ளி | : 2624 |
வந்தாரை வாழ்விக்கும் தமிழுன் நான்
தினம் தன்னை நொந்து பிறரை வாழ்விக்கும் ஆன்மா
பொறுத்தாரே பூமியாள்வாரெனு. பழமொழிக்கு உறவு
பிறரை ஏற்றி ஏற்றி பள்ள.திலிருக்கும்
இனத்தின் குடிமகன்
தமிலெங்கள் பேச்சு!
தமிலெங்கள் மூச்சு!
தமிழை நாங்கள் சாய்த்து
தமிழலென்பதற்கு நானே சாட்சி!
ஓர் முகமாய் ஒளிதந்தே
ஞாலமெலாம் காக்கும் ஞாயிறே!
பண்முக ஒளிவாங்கி ஏற்றுகிறேன்
மண்பயனுறவே ஓர் கவி!
உலகம் உய்ய ஒளிதரும் ஆதவன்
ஒருவர்க்காய் மறையாது!
கார்மேக ஊர்வலம் வரும் மேகம்
ஒருவர்க்கென்று மழை பொழியாது!
அறியா மானிடா! அறிந்திடு நீயும்!
அகந்தை அழித்தால் ஒளிபெறும் நலவாழ்வு!!
நீரின்றி யமையாது உலகு
வான்புகழ் வள்ளுவன் வாக்கு!!
குருதிகள் யாவர்க்கும் சிவப்பே
அறிந்திட்டால் நாடாகும் சிறப்பு!
அன்பு தான் உலகு அதை நம்பு!
வீம்பினால் பின் வெம்பி பயனில்லை தம்பி!!
பிரிவினை வாதத்தை முன்னிருத்தி
மனிதத்தின் வாழ்வை பின்னிருத்தி
சாதித்திடல் கண்டு நகைக்கிறாள் பெண்ணொருத்தி!!
மேட்டிலு
உழவுக்கு உழை வைக்கலாமா!!
************************************
மனிதன் வாழ மண்ணில் பிறக்கிறான் !
பிழைப்புக்காக மண்ணை உழுவுறான்!
உழுதவன் இன்று அழுது புலம்புறான்!
புலம்பல் சத்தம் கேட்டே புலருது பொழுது!
பொழுதுபோக்கும் உலகம் வேறு!
வேறுபிழைப்பறியா உழவன் நிலை பாரு !!
பாரு போற்ற வாழ்ந்த பாட்டன் யாரு?
யாருமில்லா அநாதையா நின்னாரு!!
நின்ன மனிதன் நிலைக்குலைந்து விழுந்தாரு!
விழுந்த விதையா வானம் பார்த்தே கிடந்தாரு!
கிடந்து கிடந்து சுருங்கி நொந்தாரு!
நொந்தவனை திரும்பி பார்க்க நாதியில்லை?!!
நாதியத்த மனிதனையும் தேர்தலப்ப தேடும் உலகமே!
உலகம் உருண்டையுனு ஒத்துக்கிறேன்!
ஒத்துபோக உலகம் கூட
வயிற்றில் வரிக்கோடு!
வாழ்க்கை வறுமையோடு!
வியர்வை உடம்போடு!
கஷ்டத்தில் உழைப்பாளி!!
வறுமை துணியை வாயிலடைத்து
சுயநலமாய் செழிக்கும் முதலாளிகள் !
ஊமையாய் ஓடுதிங்கு வறுமைவாழ்வு!
குருதிச்சிந்தி ஊனமாய் உழைப்பாளர்கள்!!
நீரூற்றாய் உழைப்பாளர் நினைக்க!
கண்ணீர் ஊற்றாகி உதிரத்தை உறிஞ்சி குடிக்க!
வியர்வை வழிய நிலத்தில் சரிந்தால்
பணியிடை நீக்கமாம் பாரீர்!!
புத்தனும் காந்தியும் பிறந்தும்!
அரசிடம் கொள்கையிருந்தும்! கொள்கைகள் பறக்குது காற்றில்!
கரன்சியை முடக்குது முதலாளி நாட்டில்!!
முதலாளி வர்க்கமே
மண்ணோடு மண்ணாக
உழைப்பவர் முளைப்பதெப்போ!
பாடுபடுபவன் பாட்டாளி அத
தேனிருக்கும் பூக்களையே
தேடிவரும் வண்டு - மதுத்
தீஞ்சுவையை உண்டு - புதுத்
தென்றலினைக் கண்டு - அது
தெம்மாங்குப் பாட்டிசைக்கச்
சிலிர்க்கும்மலர்ச் செண்டு ....!!
வானிலவும் மேலிருந்து
வாடிக்கையாய் நோக்கும் - பல
வண்ணமலர்ப் பூக்கும் - நல்
வாசமதும் தூக்கும் - அது
வளையவரும் வேளையிலே
வருத்தமெல்லாம் போக்கும் ...!!!
செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...
புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!
கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!
அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!
வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!
விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!
ஓரடிய எடுத்து முன்னா
செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...
புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!
கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!
அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!
வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!
விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!
ஓரடிய எடுத்து முன்னா
எல்லாம் இருந்தும் ஏழையானேன்
இல்லால் இருந்தும் ஏக்கமானேன்
நல்லால் பலர் நட்பாய் இருந்தும்
நடைபிணமானேன் நிம்மதியற்று
நம்பிக்கை தரும் என் தாயில்லாமல்...
உள்ளன்புடன் உடன்பிறந்தோர் இருந்தும்
கள்ளமில்லா பிள்ளைகளிருந்தும்
சுயநலமில்லா தாய்க்கிடாய்
தரணியில் இல்லை கடவுள்கூட...
அன்பொழுகும் அரவணைப்பும்
தற்பெருமை கொள்ளா அவளுழைப்பும்
தன்வயிறை தனலாக்கி உணவளிக்கும்
அவள் குணம் போல் அவனியில் ஏதுமில்லை! எவருமில்லை!
விரலிலிட்ட மை காயவில்லை!
விதையிட்ட நெல் விளையவில்லை!
முளையூட்ட பாலும் ஊரவில்லை!
ஊரப்போட்ட மதுவை ஊத்தி கொடுக்குது அரசாங்கம்!!
தலையிட யாருமில்லை!
தத்தளிக்கும் தமிழினந்தான்
தொன்மை தொட்ட மூத்தகுடி!
கேடுகெட்ட அரசாலே ஊத்திகுடி!!
நம்ம சனம் நம்பி! நம்பி !!
நாட்டாற்றில் நிக்கோம் பாரு!!
வந்தவனை அரியணை ஏற்றி
வீடு வாசலின்றி நிற்பது யாரு?!!
உலகத்தில் எங்கேனும் ஓருயிர் போனால்
உள்ளம் குமுறி அழுபவன் தமிழன்!
தமிழினமே அழிந்தும் கூட தமிழனுக்காக
கண்ணீர் வடிக்காத கல்நெஞ்சுகாரன்!!
மற்றவர்க்கு ஊழியம் செய்து! செய்து
ஒட்டுதுணியின்றி ஓட்டாண்டியானது யாரு?
இத்துனைக்கும் காரணமென்ன?
ஒற்றுமையில்ல
விரலிலிட்ட மை காயவில்லை!
விதையிட்ட நெல் விளையவில்லை!
முளையூட்ட பாலும் ஊரவில்லை!
ஊரப்போட்ட மதுவை ஊத்தி கொடுக்குது அரசாங்கம்!!
தலையிட யாருமில்லை!
தத்தளிக்கும் தமிழினந்தான்
தொன்மை தொட்ட மூத்தகுடி!
கேடுகெட்ட அரசாலே ஊத்திகுடி!!
நம்ம சனம் நம்பி! நம்பி !!
நாட்டாற்றில் நிக்கோம் பாரு!!
வந்தவனை அரியணை ஏற்றி
வீடு வாசலின்றி நிற்பது யாரு?!!
உலகத்தில் எங்கேனும் ஓருயிர் போனால்
உள்ளம் குமுறி அழுபவன் தமிழன்!
தமிழினமே அழிந்தும் கூட தமிழனுக்காக
கண்ணீர் வடிக்காத கல்நெஞ்சுகாரன்!!
மற்றவர்க்கு ஊழியம் செய்து! செய்து
ஒட்டுதுணியின்றி ஓட்டாண்டியானது யாரு?
இத்துனைக்கும் காரணமென்ன?
ஒற்றுமையில்ல
வானின் வசந்தம் அடைமழை!
வாழ்வின் வசந்தம் கொடைமழை!
ஏழைகில்லை இடிமழை!
ஏற்றிட வரும் தேர்(தல்)!!
ஒருநாள் மழைக்கு பூக்கும் காளான்!
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பார்க்கும் பூஞ்சை!
புதிதாய் கட்சிகொடி முளைக்கும்
புதுபுது காட்சிகள் நடக்கும்!
புதிதாய் ஆட்சியை அமைக்க
புன்முறுவலுடன் ஏழை கால்பிடிக்கும்!!
காந்தியின் சிரிப்பு கரன்சியில் தெரியும்!
சாந்தியில்லா மனமும் வாந்தியில் மிதக்கும்!!
திருவிழா நாளும் தெருவினில் வர
தெருவெல்லாம் இரவில் புன்னகை பூக்கும்!
விடியலில் விடியாது ஏழைபூ பூக்கும்!!
புனிதா நீ!
பனிகுடமுடைத்தாய் இன்று!
ஈர்ப்பு விசையானாய் அன்று!
இரும்பு மனதையும் கவர்ந்தாய் நன்று!!
வசந்தங்களின் வருடல் நீ!
சொந்தங்களின் தழுவல் நீ!
சந்தகவி இயற்றும் புலமி நீ!
எந்தன் கவியின் கருவும் நீயே!!
வாழிய நீ நீடுழி
வாழ்த்துக்கள் பெருகும் பேரொலி
வான்புகழ் பெற்றிட வாழ்த்துகிறேன்
வள்ளுவன் பெயரை நினைவுறுத்துகிறேன்!!
காற்றுக்குள் தென்றலாகி
காலத்தின் வசந்தமாகி
குடும்பத்தில் குதுகலமாகி
குழந்தை செல்வத்தின் தாயாகி
நட்பின் நலினமாகி
நம்பிக்கை சிறகை விரித்து
வசந்த. வானில் பறந்திரு!!
பந்தமாக எனையும் நினைத்திடு!!
(குறிப்பு:இன்று பிறந்தநாள் காணும் தோழி புனிதாவேளாங்கன
விழுந்தும் எழுவேன்
எழுந்து பின் விழுவேன்
என்பெயர் மழை!!
இதயதுடிப்பாய் என்றுமிருப்பேன்
இதயமில்லாது எவரையும் கொல்வேன்
என்பெயர் அலை!!
நீரில்லாது நீந்திடுவேன்
நீரின்றி வாழ்ந்திடுவேன்
என்பெயர் விண்மீன்!!
காலின்றி ஓடிடுவேன்-பிறர்
காலை இடறிடுவேன்
என்பெயர் பணம்!!
நீதிக்கு ஏங்கிடுவேன்
நாதியற்ற சாதிக்குள் தீய்ந்திடுவேன்
என்பெயர் மனம்!!
பாதிக்கு பாதி நானே
பீதியூட்டும் தீதும் நானே!!
சேய்க்கு தாயாகும் என்பெயர் கடல்!!