வாழ்த்துகள் புனிதா

புனிதா நீ!
பனிகுடமுடைத்தாய் இன்று!
ஈர்ப்பு விசையானாய் அன்று!
இரும்பு மனதையும் கவர்ந்தாய் நன்று!!

வசந்தங்களின் வருடல் நீ!
சொந்தங்களின் தழுவல் நீ!
சந்தகவி இயற்றும் புலமி நீ!
எந்தன் கவியின் கருவும் நீயே!!

வாழிய நீ நீடுழி
வாழ்த்துக்கள் பெருகும் பேரொலி
வான்புகழ் பெற்றிட வாழ்த்துகிறேன்
வள்ளுவன் பெயரை நினைவுறுத்துகிறேன்!!

காற்றுக்குள் தென்றலாகி
காலத்தின் வசந்தமாகி
குடும்பத்தில் குதுகலமாகி
குழந்தை செல்வத்தின் தாயாகி

நட்பின் நலினமாகி
நம்பிக்கை சிறகை விரித்து
வசந்த. வானில் பறந்திரு!!
பந்தமாக எனையும் நினைத்திடு!!

(குறிப்பு:இன்று பிறந்தநாள் காணும் தோழி புனிதாவேளாங்கன்னிக்கு வாழ்த்து கவிதை)

எழுதியவர் : கனகரத்தினம் (17-Jun-15, 10:47 am)
பார்வை : 269

மேலே