நந்தினி

உன் கையை என் கை மீது வைத்து
sorry கேட்கும்பொழுது, ஒவ்வொரு
வார்த்தையையும் என் உள்ளிருந்து
கேட்பேன் அது உனக்கும் தெரியும்.

எனக்கு எதாவது ஆகும்பொழுது,
நீ துடித்துப்போவதை பார்த்து
கடவுளே இப்படியே இருந்து
விடக் கூடாதா!
என்றெல்லாம் தோன்றும் .

நீ கொடுத்த முதல் முத்தம்,
முதல் தழுவல்
மீண்டும் எப்பொழுது!

யார் என் கண்ணை பொத்தினாலும்
நீயாக இருக்க வேண்டும் என்றே எண்ணுவேன்..
உன்னை அழவைத்த நாட்கள்
நெஞ்சில் வலியாய்...

எப்பொழுதெல்லாம் மயக்கம்
வருகிறதோ! அப்பொழுதெல்லாம்
உன் தோளை தேடுவேன்..

உன்னோடு நடந்த பாதை,
உன்னோடு சென்ற சைக்கிள் பயணம்,
ஏன் முடிந்தனவோ? என்று மனதில் தோன்றுகிறது.

உன்னை உன் வீட்டிற்கே திடிரென்று வந்து
சந்தித்த நாட்கள்,மாலை வயல்வெளி...
என்னிடம் மட்டுமன்றி அனைவரிடமும்
வெளிப்படையாக இருப்பாய் நீ...
உன் சந்தோஷம் துக்கம் எதையும்மறைத்ததில்லை என்னிடம்..
உன் வீட்டில் உன் அம்மா,அப்பா,அக்கா,அண்ணன்
யாரையும் மறக்கவில்லை...
உன் அக்காவின் திருமணம்
அதில் புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளாமல்
எனக்காக காத்திருந்த நிமிடங்கள்...
நாம் இருவரும் ஒன்றாக சென்ற கடைவீதிகள்,
கோவில் வழிபாடு,கண்ணாமூச்சி ஆட்டம்,
என் வீட்டிற்கு நீ வந்த நொடிகள்,
உன் முதல் கோபம்,நீ உன்னைநினைத்தாயோ
இல்லையோ என்னைப் பற்றி
தான் உன் சிந்தனை எல்லாம்..

நான் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நீ தாங்கிக்கொள்ளமாட்டாய்...
நான் ஏதாவது முட்டாள்தனமாக
செய்தால் உடனே உன் கோபம்
தலைக்கு ஏறும்.

உன் மடியில் தூங்கிய நிமிடம்,
நீ வெற்றி பெற்ற நாட்கள்..
உன் வெற்றியே என் வெற்றி!.
உன்னைப் பற்றி நினைக்கும்
பொழுதெல்லாம் நெஞ்சடைக்கிறது
தாங்கி பிடிக்க நீ வருவாயா!

மூச்சே விட முடியாமல் போனாலும்
ஒரு நாளைக்கு ஒரு தடவை ஏனும்
உன்னை நினைக்காமல் இருக்கபோவதில்லை...
நான் இறக்கும் பொழுதும் உன் கையை
பிடித்துக் கொண்டு தான் இறக்க
ஆசை படுகிறேன்.

நான் உனக்கு வாக்களிக்கிறேன் ,
நான் உன்னை மறக்க போவதில்லை
உன்னை பற்றி நினைத்தால்
சொல்லிக்கொள்வது I Miss You...

என் தலையணை நனைந்தது
உன் நினைப்பில்.
நான் உன்னை நினைக்காத
நாளே இல்லை நந்தினி
நீ என்ன விட்டு போயிட்டனு
யார் சொன்னா?
Daily-யும் உங்கிட்ட பேசிட்டு தான் இருக்கன்...

இப்ப இருக்கிற மாதிரி இந்த
அன்பு எப்பவும் அப்படியே இருக்கும் நந்தினி
அப்படியில்லனா அது உண்மையான
Friendship-ஏ இல்லையே!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Jun-15, 6:20 am)
Tanglish : nanthini
பார்வை : 674

மேலே