ஒரு புள்ளி வைத்தால் முற்றுப்புள்ளி என்றும்
இரு புள்ளி வைத்தால் தொடக்கப்புள்ளி என்றும்
யார் சொன்னது
நாம் தானே
முற்று புள்ளி தான் முதல் புள்ளி தொடக்கப்புள்ளிக்கு.
~ பிரபாவதி சதிஷ்குமார்
பேருந்தில் சன்னலோரம் தான் அவளின் இருக்கை...
இயற்கையை கண் இமைக்காமல் ரசித்து
மெல்லிசையோடு
சன்னலின் வெளியே தென்றலை வருடுவதும்
மழையை ரசிப்பதும்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
அவள் ரசிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் விரலோடு என் விரலை கோர்த்துக் கொண்டேன்.
அவளும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
வேண்டுமென்றே
அவள் அருகில் இருந்த என் கைபேசியை எடுக்க அவள் மடியில் விழுந்தேன்
என்ன பண்றீங்க சார்.
செல்போன் எடுக்கறன்டி.
என்ன கேட்டா
நான் எடுத்துத் தந்திருப்பனே சார்.
உனக்கு ஏன் சிரமம்.
ஹா ஹா...
என்ன ஒரு கரிசனம்...
நான் யாரையும் காதலிக்கவில்லை.
ஆனால் என் கணவரை காதலிக்கிறேன்.
என் எண்ணத்தில் கூட அவர் மட்டுமே இருக்க வேண்டும்...
அவருக்காக வாழ வேண்டும்.
அவருக்கு முன்பு இறக்க வேண்டும்.
நன்றி தோழா.. 09-May-2018 8:11 am
தூசுகள் படிந்த பார்வைகள் நிறைந்த யுகத்திற்கு காதலின் புனிதத்தை சொல்ல வரும் காவியம் போல் கதையோட்டம். அன்புக்கு எல்லை இல்லை ஆனால் வாழ்க்கைக்கு எல்லை உண்டு, காரணமே இன்றி உருவாகும் நேசம் மரணம் வரை அந்தக் காரணத்திற்காகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆயுளை கொண்டு நகர்த்தி விடுகிறது. நாம் வாழும் பூமியில் காதல் என்ற சொல்லில் காமம் என்ற வன்முறையை சுமந்து செல்லும் மாசான கண்கள் பொய்யான உதடுகள் மத்தியில் சில உண்மையான உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2018 11:41 am
தமிழர்களை தமிழில் பேசச் சொல்கிறேன்.
தமிழ் மொழியின் சிறப்பு ழ .
ழ வை சிலர் பிழையாக உச்சரிக்கிறார்கள்.
ஆம் மலையாளம் தமிழின் வழித்தோன்றல் தானே..
தமிழர்களை விட ழ வை மிகச் சரியாக உச்சரிப்பார்கள்....எம் பிள்ளைகள்...
ழ ழா ழி என்று ஒரு தாளம் அமைத்து எழுதியுள்ளேன்... 14-Mar-2018 3:22 pm
ஒளிமயம் காண வேண்டிய இருள்கள் எல்லாம் இன்னும் இருண்டு தான் கிடக்கிறது ஆனால் இருண்டு போக வேண்டியவை எல்லாம் ஒளிமயமாகத்தான் நாகரீக உலகை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 6:37 pm
சிறப்பான சிந்தனை. சுடுகாட்டின் மெளனம் இன்று வயல் எங்கும் பரவுகிறது. தெருவில் உழவனின் வாழ்வாதாரம் நிர்வாணமாக அலைவதால்.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 6:50 pm
போற்றுதற்குரிய கவிதை கற்பனை நயம்
பாராட்டுக்கள்
தொடரட்டும் காதல் வாழ்வியல் பயணம்
--------------------------------------------------------------
இரு விழிகiளிலும்
கனவுகளை விதைக்கும்
விழிகளுடன்
யுத்தம் செய்தே
இரவுகள் கழிகின்றன..
07-Dec-2017 2:58 am
நீங்கள் சொல்வது புரிகிறது...
ஆனால் உங்களுக்கு இன்னும் சரியான புரிதல் இல்லை...
இன்னும் காலங்கள் முடிந்து விடவில்லை...
இன்றோடு நிமிடம் நிற்க போகிறதா என்ன?
நம் முன்னோர்களால் தான் தமிழ்நாட்டில் மும்மொழி இல்லை...
இது ஒரு இனத்தின் உணர்வின் சொல்லாகத் தான் பார்க்க முடியுமே அன்றி இதை வேறு எப்படியும் சொல்லிடல் ஆகாது. 15-Nov-2017 7:28 pm
ஈழம் என் உயிராகும்...
என் தாய் மண்ணில் என் தாய் மகிழ்ச்சியாக வாழ்வாள்...
என் தாயை = என் தமிழை எந்த இடத்திலாவது இழிவாக நினைப்பேனா...
அது தான் இறந்தால் கூட நடக்காது...
வாழ்க தமிழ்... 15-Nov-2017 7:18 pm