பா கற்குவேல் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பா கற்குவேல்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  09-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Oct-2014
பார்த்தவர்கள்:  3638
புள்ளி:  1579

என்னைப் பற்றி...

குடிசையிலிருந்து - அண்ணாந்து

அடுக்குமாடி ரசிக்கும் குழந்தையை ;

அதன் உச்சிக்கு அழைத்து சென்று ,

குடிசையின் அழகை ரசிக்க வைப்பவன் !



அடுத்த மணிநேரத்தில் ,

ஏதோ ஒரு பேருந்தில் - அழப்போகும்

குழந்தைக்கு, இப்போதே

மிட்டாய்வாங்கி வைத்துக் கொள்பவன் !



அழகு எங்கிருப்பினும் ரசிப்பவன் ,

இயற்கையின்மீது இணையில்லா

காதல் கொண்டவன் - தமிழ்மீது

தளராத அன்பு கொண்டவன் !



இருபத்துநான்கு மணிநேரத்தில்

இருபத்துநான்கு நிமிடங்களாவது

மனிதனாக வாழ முயற்சிப்பவன் - அதில்

பலமுறை தோல்வியும் கண்டவன் !



தாய்க்கு தலைமகன் - விலங்கியல்

துறையில் முதுகலை முடித்தவன் ,

மருத்துவத்துறை சார்ந்த

வணிகம் செய்து வருபவன் !

என் படைப்புகள்
பா கற்குவேல் செய்திகள்
பா கற்குவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2017 6:49 pm

வட்டிக்கு பணம் வாங்கி
புள்ளய காலேஜுக்கு அனுப்பிட்டு,
கடன அடைக்க முடியாம
" வாங்குன காச கொடுக்க வக்கில்ல
உனக்கெல்லாம் வேட்டி எதுக்குன்னு "
கொடுத்தவன் கேட்கும்போது
கண் கலங்கி நிப்பான் ..

தெய்வம்னு
தனியே இல்ல !!

#கடவுள்_தினம்

மேலும்

அருமை ! நம்மில் அனைத்துமாக இருப்பவர் அப்பா.வாழ்த்துக்கள் 09-Mar-2019 6:09 pm
பா கற்குவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2017 8:55 pm

அகண்டாகாரமாய்
விரிந்து கிடக்கும் அறிவை
காஃபி ஷாப்பின்
ஏதோ வொரு கோப்பையில்
'ம்' என்ற
ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கி விடுகிறாய்..
மீட்டெடுக்க
இன்னொரு வுலகு !!
- கற்குவேல் பா

மேலும்

பா கற்குவேல் - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2017 9:03 pm

பிறவிப்
பிணிகள் துறந்து
சித்தனாகும் எண்ணமில்லை.
மங்கி ஒளிரும்
இந்த ஸேராட்டோவின்
ஹாலஜன் விளக்கொளியில்
விட்டு விட்டு பிரகாசிக்கும்
உன் முகத்தை கண்டவாறே
ரம்மியமாக
பயணித்து விடுகிறேன்..
மறுஜென்மம்
தவிர்க்க முடியாதது !
ஏற்புடையது !!

- கற்குவேல் பா

மேலும்

நன்றி 14-Jun-2017 8:51 pm
நன்றி 14-Jun-2017 8:51 pm
நன்றி 14-Jun-2017 8:51 pm
மறு ஜென்மத்தோடு முடிச்சிட்டு கவிதையை முடித்தமை அருமை. 14-Jun-2017 5:50 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2017 9:03 pm

பிறவிப்
பிணிகள் துறந்து
சித்தனாகும் எண்ணமில்லை.
மங்கி ஒளிரும்
இந்த ஸேராட்டோவின்
ஹாலஜன் விளக்கொளியில்
விட்டு விட்டு பிரகாசிக்கும்
உன் முகத்தை கண்டவாறே
ரம்மியமாக
பயணித்து விடுகிறேன்..
மறுஜென்மம்
தவிர்க்க முடியாதது !
ஏற்புடையது !!

- கற்குவேல் பா

மேலும்

நன்றி 14-Jun-2017 8:51 pm
நன்றி 14-Jun-2017 8:51 pm
நன்றி 14-Jun-2017 8:51 pm
மறு ஜென்மத்தோடு முடிச்சிட்டு கவிதையை முடித்தமை அருமை. 14-Jun-2017 5:50 pm
பா கற்குவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2017 9:03 pm

பிறவிப்
பிணிகள் துறந்து
சித்தனாகும் எண்ணமில்லை.
மங்கி ஒளிரும்
இந்த ஸேராட்டோவின்
ஹாலஜன் விளக்கொளியில்
விட்டு விட்டு பிரகாசிக்கும்
உன் முகத்தை கண்டவாறே
ரம்மியமாக
பயணித்து விடுகிறேன்..
மறுஜென்மம்
தவிர்க்க முடியாதது !
ஏற்புடையது !!

- கற்குவேல் பா

மேலும்

நன்றி 14-Jun-2017 8:51 pm
நன்றி 14-Jun-2017 8:51 pm
நன்றி 14-Jun-2017 8:51 pm
மறு ஜென்மத்தோடு முடிச்சிட்டு கவிதையை முடித்தமை அருமை. 14-Jun-2017 5:50 pm
பா கற்குவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2017 9:13 pm

ஓரினச்சேர்க்கைக்கும்
முத்தப்போராட்டங்களுக்கும் மட்டுமே
வளைந்து கொடுக்குமோ
உங்களது சட்டமும்
உச்சநீதிமன்றமும் ?

#த்தூ_.....

மேலும்

சரியான நியாயமான கேள்வி . த்து ---வை நீக்கவும் சட்டம் நீதியிடம் நமது கேள்வி இலக்கிய வரையறையுடன் இருத்தல் நலம் என்பது என் பரிந்துரை . அன்புடன்,கவின் சாரலன் 09-Mar-2017 5:24 pm
அருமையான கேள்வி 09-Mar-2017 9:33 am
பா கற்குவேல் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2016 7:07 pm

துருவேறிய கம்பிமுனை கிழித்த
உன் அரைக்கால் பாவாடையை - மறைத்தபடி
வீடுவரை உன்னை அழைத்துச் சென்ற ஒருவனை
நினைவிருக்கிறதா ?

#பள்ளித்தோழி

மேலும்

நன்றி நண்பர் 30-Dec-2016 11:40 am
அருமை நண்பரே 30-Dec-2016 10:28 am
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2016 1:38 pm

சீரான தரையிலும்
சிதறியே விழும் புள்ளிகள்,
புள்ளிகளை அணைக்க மறந்து
தனிவழி செல்லும் கம்பிகள்,
சாணத்தில்
சரிவர அமராத பூசணிப் பூ ;
இப்படி,
ஒழுங்கற்றே கண்களில் விழும்,
அம்மா இடும் கோலங்கள் ..

சீரில்லா தரையிலும்
சிறப்பாக விழும் புள்ளிகள்,
புள்ளிகளை
கச்சிதமாக அணைத்துச் செல்லும் கம்பிகள்,
கம்பிகளை
அழகே நிரம்பிச் செல்லும் வர்ணங்கள் ;
இப்படி,
காணாக் கண்களையும்,
தன்வசம் சுண்டி இழுக்கும்,
மனைவி இடும் கோலங்கள் ..

மனைவி இடும்
சுண்ணாம்புக் கோலங்கள்,
மறுநாள் காலைவரை அழிவதில்லை,
காற்றும் அவற்றை,
கரைக்க முயல்வதில்லை ..
இட்டபடி அழகே,
இட்ட இடத்தில இருக்கும் ;
மறுநாள் அவள் ,
வாசல

மேலும்

மாக்கோலத்தின் மகத்துவம் சொல்லும் வரிகள் 30-Dec-2016 10:32 am
நன்றி தோழர் 15-Oct-2016 12:36 pm
உண்மைதான்..தாய்மை நிறைந்த செயல்கள் கலந்தவை பறவைக்கும் தானம் செய்யப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:22 am
பா கற்குவேல் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 4:51 pm

முன்பொருநாள்
குறுநில மன்னர்கள் இருந்தனர்;
அவர்களிடத்தில்
இரத்தினங்கள், மணிகள்,
வைரங்கள், வைடூரியங்கள் இருந்தன;
ஆட்சியும், அதிகாரமும்
அவர்கள் கையிலே இருந்தது ..

பின்னொருநாள்
மக்களாட்சி என்றனர்;
இருக்கட்சி ஆட்சிமுறை அமைத்தனர்;
ஆங்கும்,
பணம் படைத்தவர்களே
மந்திரிகளாக வலம் வந்தனர் ..
இதுவும்
மன்னராட்சியா என்று கேள்வி எழுப்ப,
மக்களால், மக்களுக்காக, மக்களே என்று
பதிலுரைத்து, பல்லிளித்துச் சென்றனர் ..

தயவுசெய்து,
மார்க்ஸின் கல்லறையை தட்டாதீர்கள்;
அவர் தேவை இல்லை எங்களுக்கு ..
அருகே,
அமைதியாய் உறங்கும் - அந்த
குறுமீசை சர்வாதிகாரியை எழுப்புங்கள்..
எடுக்கப்பட வேண்டிய களைகள்,

மேலும்

புரிதலுக்கு நன்றி தோழரே 09-Aug-2016 1:48 pm
கண்டிப்பாங்க..மாற்றம் என்ற பெயரில் மக்களின் ஏமாற்றம் தான் மீதம் 09-Aug-2016 9:03 am
பா கற்குவேல் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2016 10:45 am

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள்.

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! 

  1. கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் .
  2. கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.
  3. உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.
  4. உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.
  5. கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் .
  6. உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.
  7. உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு .
  8. இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
  9. இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று.
  10. அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்  

மேலும்

உண்மை இது 01-Aug-2016 10:18 am
அவர்கள் தந்திரக் காரர்கள்... அவர்கள் வாழும் நிலமே தந்திரத்தால் வென்றது தானே.. 31-May-2016 9:11 pm
உலகத்தில் கார்ட்டூன் எனும் சிறுவர் திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இஸ்ரேல் ஆனால் அங்கே அவைகளை பார்வையிட தடைகள் உண்டு உலகத்தை கெடுத்து தான் முன்னேற நினைக்கும் சுயநல நோக்கம் கொண்ட கருமி 31-May-2016 7:21 pm
உலக வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கிய மலர்கள் நன்றி 30-May-2016 8:53 pm
வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Apr-2016 1:09 pm

பூமி..

எலேய் சின்ராசு
எவ்வளவு அழகா இருந்தேன்டா
பச்சை பசேல்ன்னு கெடந்தேன்டா
மூலிகைத்தாவரம் பல தந்தேன்டா..

செதுக்கிய சிற்பமும்
வரைந்த ஓவியமும்
பொக்கிஷமா வச்சிருந்தேன்டா
எல்லாத்தையும் அழிச்சிட்டீங்களேடா..

வனங்களை அழிச்சி
பல உயிர்களை கொன்னு
அடுக்கு மாடிங்க கட்டுறேன்னு
அஸ்திவாரத்தையே அழிச்சிட்டீங்களேடா..

நான் வறண்டுட்டேன்டா
பூவெல்லாம் கருகிடுச்சுடா
ஜோரா வளர்த்த மரம்
சுக்கு சுக்கா கெடக்குதுடா
பத்து மரம் நட்டாலும்
வெட்டுன ஒத்த மரத்துக்கு ஈடாகுமாடா...

சொர்க்க பூமியா இருந்தேனே
என்னையே அழவச்சிட்டீங்களேடா
நான் அழுது குலுங்கையிலே
கடலம்மா பொங்குறாடா
ஒன் உசுர எடுக்குறாடா...

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 28-Apr-2016 2:12 pm
கருத்தில் மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி தோழமையே... 28-Apr-2016 2:12 pm
இப்புவியில் வாழப் போகும் கடைசி மனிதனாவது உணர்ந்தால் சரி ! அருமை தோழமையே .. 26-Apr-2016 12:22 pm
அருமை, அருமை இயற்கையின் அழிவையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் அழகாக எடுத்து சொன்னீர்கள் மிக மிக நன்றி வாழ்த்துக்கள், புனித வேளாங்கண்ணி 25-Apr-2016 10:55 pm
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன் அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Apr-2016 6:00 pm

தமிழ்   ஒரு   பூக்காடு பாவலர்  கருமலைத்தமிழாழன் 
 முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே            
---மூவாமல்    கன்னியென   இலங்கு   கின்றாய்
தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில்            
---திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே
எத்திக்கும்   புழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் !            
---எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும்
வித்தாக    முளைத்துநின்றாய் !  மூவேந்   தர்தம்            
---வளர்ப்பினிலே    பூக்காடாய்   செழித்து   நின்றாய் ! 

 எழுத்திற்கும்    சொல்லிற்கும்   நெறிவ   குத்தே           
---எழுதுகின்ற   உலகத்து   மொழிக   ளுக்குள்
எழுத்திற்குள்   அடங்காத   உணர்வை;  காதல்            
---எழுப்புகின்ற   மெய்ப்பாட்டை   இல்ல   றத்தை
தழுவுகின்ற   கூடலினை   ஊடல்   தன்னை           
 ---தாய்செவிலி   பாங்கிபாங்கன்    வாயில்   கூற்றை
வழுவாத   மறத்தைவாழ்வின்     பொருளைக்   கூறும்            
---வண்தமிழோ   இலக்கணத்துப்   பூக்கா   டென்பேன் ! 

 நிலம்ஐந்தாய்   பகுத்ததனைத்   திணைக   ளாக்கி           
 ---நிகழ்கின்ற   நிகழ்வுகளைத்   துறைக   ளாக்கிப்
 புலப்பண்பைக்    கருஉரியாய்   அகத்தில்   வைத்தும்           
 ---புகழ்வீரம்   புறமாக்கிப்   பத்துப்   பாட்டாய்
நிலவிடும்எட்   டுத்தொகையாய்    அறமு   ரைக்கும்            
---கீழ்க்கணக்காய்க்    காப்பியமாய்    தொன்னூற்   றாறாய்ப்
பலப்பலவாய்   வாழ்வியலை   எதிரொ   லிக்கும்           
 ---பசுந்தமிழோ    இலக்கியத்துப்   பூக்கா   டென்பேன் !       

 நங்கையிடம்   தூதாக   நடக்க   வைத்து           
 ---நரிதன்னைப்   பரியாக்கி   சாம்பல்   தன்னை
மங்கையாக   உயிர்ப்பித்து   முதலை   உண்ட           
---மதலையினை   உமிழவித்துப்    பாய்சு   ருட்டி
 இங்குனக்கோ    இடமின்றேல்   எனக்கு    மில்லை           
 ---என்றாழ்வார்   பின்செல்ல   வைத்துப்   பாட்டால்
 எங்குமுள்ள    இறைவனையே   ஆட்டி   வைத்த           
---எழிற்றமிழோ    பக்திமணப்    பூக்கா   டென்பேன் ! 

 கீர்தனைகள்    எனப்புரியா    மொழியில்   பாடக்          
  ---கீழ்மேலாய்த்   தலையாட்டும்    மாடாய்   ஆனோம்
சீர்த்தகுரல்   கைக்கிளையும்   துத்தம்   தாரம்           
 ---விளரியொடு   உழைஇளியும்    ஏழாய்   நின்று
ஆர்த்தசுரம்   பன்னிரண்டு   பாலைக்   குள்ளே           
 ---அரும்பண்கள்    நூறோடு   மூன்றில்    தேனைச்
சேர்த்தளிக்கும்    துளைநரம்பு    கருவி   கொண்ட           
 ---செந்தமிழோ    இசைநிறைந்த    பூக்கா   டென்பேன் ! 

 போர்க்களத்தில்    அறம்பார்த்தும்   விழுப்புண்   மார்பைப்           
 ---பொருதுபெறப்   போட்டியிட்டும்   பிறர்இல்   நோக்கா
பேர்ஆண்மைக்    காளையரைக்   களவில்   பார்த்தும்           
 ---பெருங்காளை   அடக்கிவரக்   கற்பில்   சேர்ந்தும்
பார்சுற்றிக்    கடல்கடந்து    பொருளை    ஈட்டிப்           
 ---பகிர்ந்தளித்தும்   சாதியற்ற   சமத்து   வத்தில்
 ஊர்இணைந்தும்    வாழ்ந்திருந்த   சங்க   கால           
 ---ஒண்தமிழோ   வாழ்வியலின்   பூக்கா   டென்பேன் !             

 அன்றில்போல்    அன்பிணைந்த   காதற்   பண்பை           
 ---அழகான   இல்லறத்தை    மக்கட்   பேற்றை
துன்பத்தை    இன்முகமாய்    ஏற்கும்   நெஞ்சை            
---துவளாமல்   வினையாற்றும்   பக்கு   வத்தை
 நன்மைதரும்    மக்களாட்சி    மாண்பை    செங்கோல்            
---நடத்துகின்ற    அமைச்சர்தம்   மதியைச்   சொல்லும்
 சின்னவடி   முப்பாலால்   செழித்தி   ருக்கும்            
---சீர்தமிழோ    குறள்மணக்கும்   பூக்கா   டென்பேன் ! 

 வானத்தில்   ஊர்தியினைப்   பறக்க   விட்டு            
---வளியடக்கிக்    கடல்நீரில்    கலத்தை   விட்டு
 ஞானத்தால்    அணுப்பிளந்து   பூமிக்    கோளோ            
---ஞாயிற்றைச்   சுற்றுகின்ற    செய்தி    சொல்லி
வானளாவ    நிற்கின்ற    கோபு   ரங்கள்           
---வழியடைத்து    நீர்தேக்கும்    அணைகள்   என்றே
நானிலமும்    வியக்கின்ற   அறிவைப்   பெற்ற          
--நற்றமிழோ   அறிவியலின்   பூக்கா   டென்பேன் !  

நெருப்பாக   இருந்தவளோ   நெருப்புக்   குள்ளே           
 ---நிதம்வெந்து   மாயும்மன்   றல்கை   யூட்டை
ஒருகுலமாய்    வாழ்ந்தவரைப்   பகைமை   யாக்கி            
---ஒற்றுமையைச்    சிதைத்திட்ட   சாதிப்   பேயை
 உருக்குலைக்கும்    மூடத்தை   ஏற்றத்   தாழ்வை            
---உழல்கின்ற   பெண்ணடிமை   ஆண   வத்தைக்
கருவறுக்கும்   பாரதியார்   பாவேந்   தர்தம்            
---கனல்தமிழோ   புரட்சியூட்டும்    பூக்கா   டென்பேன் !             

 கொடிபடரத்    தேரீந்தும்   காட்டிற்    குள்ளே           
 ----கோலமயில்   குளிர்போக்கப்   போர்வை   தந்தும்
துடித்திட்ட   பறவைக்குச்   சதைய    ரிந்தும்            
---துலக்கிட்டார்    கருணையொன்றே   துணையா   மென்று
 வடித்திட்ட   யாதும்ஊர்    கேளிர்   என்னும்            
---வகையான   கருத்தாலே    உலகைச்    சேர்க்கும்
விடியலுக்கோ    அன்பென்னும்   விளக்கைக்   காட்டும்          
  ---வியன்தமிழோ   மனிதநேயப்    பூக்கா   டென்பேன் !  

முத்தமிழோ   அறிவியலின்   மொழியாய்    ஓங்கி            
---முன்னேறிக்    கணிப்பொறியில்   இடம்பி   டித்தே
 எத்திசையில்   இருப்போரும்   அறியும்   வண்ணம்           
 ---ஏற்றவகைக்   குறியீட்டில்   எழுத்த    மைத்து
வித்தாக    மென்பொருளும்    சொல்தொ   குப்பும்            
---விசைப்பலகை    எனப்பொதுவாய்   ஆக்கி   ஞாலம்
மொத்தமுமே    ஒருநொடியில்    படிக்க   மாறு            
---முகிழ்ந்ததமிழ்   இணையத்துப்   பூக்கா   டென்பேன் !  

ஆட்சிமொழி   தமிழ்என்னும்     பூவைச்   சேர்த்தே            
---அங்காடிப்    பெயரெல்லாம்   தமிழ்ப்பூ   வாக்கி
மாட்சிதரும்   மழலையர்தம்    பள்ளி   யெல்லாம்            
---மணக்கின்ற    தமிழ்ப்பூவை    மலரச்   செய்து
காட்சிதரும்    பொறியியலை   மருத்து   வத்தைக்            
---கவின்கொஞ்சும்    தமிழ்ப்பூவின்    தோட்ட   மாக்கி
நாட்டிலெல்லா    துறைகளிலும்   பதியம்   வைத்து            
---நற்றமிழின்    பூக்காட்டை   வளர்போம்   நன்றாய் !

மேலும்

இனிதாய் எண்சீரில் எழிலான தமிழுக்கு ஏற்றம் கொடுத்த கவிஞரின் கரங்களுக்கு காணிக்கையாக்குவோம் முத்தங்களாய் 16-Apr-2016 2:19 pm
இதுபோன்ற கவிதைகள்தான் கவிதை எழுத பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது, நன்றி அய்யா 16-Apr-2016 12:35 pm
தமிழ் வரலாற்றை எண் சீர்களில் சுருங்க சொன்ன அழகு அருமை ஐயா .. வாழ்க தமிழ் வளர்க நற் கவிதைகள் 15-Apr-2016 6:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (321)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி
முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.

இவர் பின்தொடர்பவர்கள் (322)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
திருமால் செல்வன்

திருமால் செல்வன்

சாத்தான்குளம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (323)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே