கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன் |
இடம் | : ஒசூர், தமிழ்நாடு, இந்தியா |
பிறந்த தேதி | : 16-Jul-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 2425 |
புள்ளி | : 331 |
பாவலர் கருமலைத்தமிழாழன் பற்றிய விவரம்
01. இயற்பெயர் : கி.நரேந்திரன்
02. புனைபெயர் : கருமலைத்தமிழாழன்
03. சொந்த ஊர் : கிருட்டிணகிரி (கருமலை)
04. பெற்றோர் : மு.கிருட்டிணன் - இராசம்மாள்
05. பிறந்தநாள் : 16.07.1951
06. கல்வித்தகுதி : புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்.,
07. முகவரி : 2/16/6,ஆர்.கே.இல்லம்,
முதல்தெரு,புதியவசந்தநகர்,
ஒசூர் - 635 109, கிருட்டிணகிரி மாவட்டம்.
KARUMALAI THAMIZHAZHAN
2/16/6.R.K. ILLAM, NEW VASANTHA NAGAR.
HOSUR- 635 109 . TAMIL NADU, INDIA.
E.Mail: karumalaithamizh@gmail.com
.Wepsite: www.karumalaithamizhazhan.com
http:// karumalai2015blogspot.in
08. பணி : 25ஆண்டுகள்தமிழாசிரியர்,
10ஆண்டுகள்மேல்நிலைப்பள்ளித்
தலைமையாசிரியர்
09. தொலைப்பேசி : 04344 - 245350, 09443458550
10. முதற்கவிதை வெளிவந்த ஏடு :
பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களால்
நிறுவப்பட்ட குயில் ஏடு 1969
11. கவிதைகள் வெளிவந்த ஏடுகள்:
01. குயில் 02. காஞ்சி
03. முரசொலி 04. கண்ணதாசன்
05. முல்லைச்சரம் 06. புன்னகை
07. காவியப்பாவை 08. தெசிணியின் கவிதை
09. தமிழரசு 10. அமுதசுரபி
11. தென்மொழி 12. தெளிதமிழ்
13. நற்றமிழ் 14. வெல்லும் தூயதமிழ்
15. ஓம்சக்தி 16. செந்தமிழ்ச் செல்வி ( 1 )
17. கணையாழி 18. இனிய உதயம்
19. கவிக்குயில் 20. காக்கைச்சிறகினிலே
21. எழுகதிர் 22. இலக்கியச்சோலை
23. ராணி 24. தேமதுரத் தமிழோசை
25. தினத்தந்தி 26. தமிழ் இலெமுரியா
27. தினகரன் 28. தினமணி
29. தினமலர் 30. மாலைமுரசு
31. மாலைமலர் 32. முரசொலி
-போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன.
12. வெளிவந்த கவிதை நூல்கள்:
01. நெஞ்சின் நிழல்கள் (1976)
02. மலர்விழி (காவியம் (1978)
03. காவியத்தலைவன் (1978)
04. காற்றை மணந்த கவிதைகள் (1995)
05. நீர்க்கால்கள் (1998)
06. ஒப்பனைப்பூக்கள் (1998)
07. மண்ணும் மரபும் (1999)
08. தமிழவேள் தமிழ்ப்பாவை (1999)
09. வீணை மத்தளமாகிறது (2000)
10. மரபின் வேர்கள் (2002)
11. புதிய குறுந்தொகை (2003)
12. வேரின் விழுதுகள் (2004)
13. களம் வெல்லும் கலைஞர் (2005)
14. சுவடுகள் (2008)
15. உன்முகமாய் இரு (2010)
16. அருள்மிகுமரகதாம்பிகை
சந்திரசூடேசுவரர் பாமாலை (1997)
17. கல்லெழுத்து (2014 )
18. செப்பேடு (2016)
19. அகமுகம் (2017 )
20. கால்முளைத்த கனவுகள் ( 2018 )
( 2 )
21 )பசிவயிற்றுப் பாச்சோறு (2019)
22) கதவைத் திற காற்று வரட்டும் ( 2020 )
13.உரைநடை மற்றும் ஆய்வு நூல்கள் :
23. புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு (1998)
24. பண்பில் வாடை (2001)
25 திருக்குறள் (உரை) (2000)
26.ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர
சூடேசுவரர் திருக்கோயில் தலவரலாறு (2001)
14. சிறப்பு : 01. தமிழ்நாடு பாடநூல்களில் செய்யுட்
பகுதியில் கவிதை பாடமாக சேர்க்கப்பட்டது.
02. (அ) வீணை மத்தளமாகிறது
(ஆ) வேரின் விழுதுகள்
(இ) காற்றை மணந்த கவிதைகள்
- ஆகிய நூல்கள் எம்ஃபில் பட்டத்திற்காக ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு,ஆய்வுபட்டம் வழங்கப்பட்டுள்ளது.
15. பெற்ற விருதுகள் :
01. சென்னை பாவேந்தர் பாசறையால் 2002ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது அளிக்கப்பட்டது.
02. ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும் 'துளி' இதழும் இணைந்து 2003ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து ஒட்டக்கூத்தர் விருது அளித்தன.
03. சென்னை கவிதை உறவு அமைப்பு 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து கவிதைச்செல்வர் விருது அளித்தது.
04. தமிழறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூற்றாண்டு விழா குழுவினரால் 2010இல் இலக்குவனார் விருது அளிக்கப்பட்டது.
05. உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும், தஞ்சை தாய் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய எழுத்தாளர் மாநாட்டில் 2011இல் குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.
06. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாரால் 2010ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டது. (3)
07. உரத்தசிந்தனை திங்களிதழ் சிறந்த வெண்பாக்கள் எழுதியமைக்காக 2012ஆம் ஆண்டு வெண்பாவேந்தர் விருது அளித்தது. ( 3 )
08. டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை சார்பில் 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைக் கருவூலம் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
09. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் 2012ஆம் ஆண்டில் பாவேந்தர் நெறி செம்மல் விருது வழங்கியது.
10. தங்கவயல் டாக்டர் பேரா.வ.பெருமாள் அறக்கட்டளையால் 2005இல் தமிழ் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது.
11. கரூர் திரு.வி.க.மன்றம் சார்பில் 1992இல் இலக்கியச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
12. சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளையின் இலக்கியக்குழு 2003இல் மரபுப்பா பாவலர் விருது அளித்து சிறப்பித்தது.
13. அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் சிறந்த இலக்கியப்பணிக்காக 2005ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்தது.
14. சேலம் “சங்கொலி” இதழ் ஆசிரியர் சோலை இருசனாரின் மணிவிழா குழுவினரால் “தேன்மழைக்கவிஞர்” விருது வழங்கப்பட்டது.
15. 2008-2009ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருட்டிணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
16. 2014ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக மணலூர் பேட்டை தமிழ்ச்சங்கம் தேர்ந்தெடுத்து பைந்தமிழ்ச்செல்வர் விருதும், பொற்கிழியும் வழங்கியது.
17. பெங்களூர்த் தமிழ்ச்சங்கமும் சென்னை இலக்கியச் சோலை அமைப்பும் இணைந்து கவிதைப்பணிக்காக 16-08-2015 அன்று பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் நடந்த இலக்கியவிழாவில் தமிழ்த்தோன்றல் விருது அளித்து சிறப்பு செய்தன.
18. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 81 ஆம் பிறந்த நாளை ஒட்டி எழுத்து இணையதளத்தில் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைத்ததற்காக 18-10-2015 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழன்பன் விருது வழங்கப்பட்டது.
19. வேலூர் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றமும், தமிழர் உலகம் இலக்கியத் திங்களிதழும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்காக 24-10-2015 அன்று வேலூரில் நடைபெற்ற விழாவில் தமிழன்னை விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. (4)
20. இலங்கை கல்குளம் தடாகம் கலை இலக்கிய வட்டம் உலக அளவில் மார்ச்சு 2015 இல் ஈழம் என்ற தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்காக கவியருவி விருது 28-02-2016 அன்று இலங்கை மட்டகளப்பு ஒட்டமாவடியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்து.
21. இலக்கியச்சோலை திங்களிதழ் நடத்திய கட்டளைக் கலித்துறை கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்காக 2015 ஆம் ஆண்டின் சிறந்த கட்டளைக் கலித்துறை கவிஞர் விருது வழங்கி சிறப்பு செய்தது.
22 .சென்னை சோலைப்பதிப்பகம் சிறந்த கவிதைகளைப் படைத்ததற்காக 13-9-2015 அன்று சென்னையில் நடந்த விழாவில் கவித்திலகம் விருது வழங்கி சிறப்பு செய்தது.
23. முகநூலில் சிறப்பான முறையில் சமூக விழிப்புணர்வு கவிதைகளை எழுதியமைக்காக காஞ்சி முத்தமிழ்ச் சங்கம் 26-7-2015 அன்று காஞ்சிபுரத்தில் நடத்திய விழாவில் முகநூல் வேந்தர் விருது வழங்கி சிறப்பு செய்தது.
24. மாமதுரைக் கவிஞர் பேரவை தமிழில் புறமொழி கலக்கலாமா என்ற தலைப்பில் நடத்திய் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்காக 6 – 12 -2015 இல் விழா நடத்தி கவிபாரதி விருதளித்துச் சிறப்பு செய்தது.
25. கோவை தமிழிலக்கியப் பாசறை 2015 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகத் தேர்ந்தெடுத்து 26-1-2016 அன்று கோவையில் நடத்திய விழாவில் விருத்தக் கவிதை வித்தகர் விருதளித்துச் சிறப்பு செய்தது.
26. சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிலா முற்றம் முகநூல் குழுமம் முகநூலில் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைத்ததற்காக சிறந்த மரபுக் கவிஞராகத் தேர்ந்தெடுத்து 25-9-2016 அன்று தமிழ்நாடு கும்பகோணத்தில் நடத்திய விழாவில் மரபு கவிதை வித்தகர் விருதளித்துச் சிறப்பு செய்தது.
27) தமிழ்ப் பட்டறை முகநூல் குழு சிறந்த கவிதைகளைப் படைத்ததற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதினை 22-1-2017 அன்று சென்னையில் நடைப்பெற்ற முதலாண்டு விழாவில் வழங்கி சிறப்பு செய்தது.
28) தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் தேர்ந்தெடுத்து அறிவிக்கும் சிறந்த கவிஞருக்கு, விருதும், உருபா பத்தாயிரம் பொற்கிழியும் பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் வழங்குகிறது. 2016 ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து 29-1-2017 அன்று திருவண்ணாமலையில் நடத்திய விழாவில் மரபுப்பா காவலர் விருதையும் பொற்கிழியையும் வழங்கி சிறப்பு செய்தது.
( 5 )
29) கவியுலகப் பூஞ்சோலை முகநூல் குழு அமைப்பு 2016 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகத் தேர்ந்தெடுத்து 1-6-2017 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களால் கவி இமயம் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
30) சென்னை திசைகள் கலை இலக்கிய மன்றம் 2016 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகத் தேர்ந்தெடுத்து 8-6-2017 அன்று சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் விசயராகவன் அவர்களால் கவி மன்னவர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
31) தமிழக அரசு 2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பு செய்தது.
32) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2017 ஆம் ஆண்டிற்கான சிந்தனைச் சிகரம் விருது வழங்கி சிறப்பு செய்தது.
33) திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் 22-7-2017 அன்று கிருட்டினகிரியில் நடத்திய பாரதித்தமிழ் ஆய்வு மாநாட்டில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பாசுகரன் அவர்களால் மரபுக் கவிதைக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டிப் பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
34)சென்னை எழுத்தாணி தமிழ்கலை இலக்கியச் சங்கம் 2017 ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து 23 – 07 – 2017 அன்று சென்னை திருநின்றவூரில் நடத்திய விழாவில் எழுத்தாணி எனும் விருது வழங்கி சிறப்பு செய்தது.
35) புதுச்சேரி மக்கள் கலைக் கழகம், தமிழ் இலக்கியப் பணியில் நீண்டகாலமாக ஈடுபட்டு அரும்பணியாற்றி சாதனை புரிந்தமையைப் பாராட்டி 25-11-2017 அன்று புதுச்சேரியில் நடந்த விழாவில் புதுவை அரசின் பொதுப்பணி அமைச்சர் திரு. ஆ, நமச்சிவாயம் அவர்களால் இலக்கியப் பேரொளி விருது வழங்கி சிறப்பு செய்தது.
36)சென்னையில் இயங்கும் கவியுலகப் பூஞ்சோலை அமைப்பு 01-05-2018 அன்று சென்னையில் நடத்திய கவிச்சாரல் விழாவில் நீண்ட காலக் கவிதைப் பணியைப் பாராட்டிக் கவிப்பேரருவி விருது வழங்கி சிறப்பு செய்தது.
37)மதுரையில் இயங்கும் மதுரை சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா 20-05-2018 அன்று மதுரையில் நடத்திய முதலாண்டு விழாவில் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துக் கவிச்சாகரம் விருது வழங்கி சிறப்பு செய்தது.
(6)
38)கோவையில் இயங்கும் எண்ணங்களின் களஞ்சியம் இறைத் தமிழ் மன்றம் 16-09-2018 அன்று நடத்திய மூன்றாம் ஆண்டு விழாவில் இலக்கியப் பணியைப் பாராட்டி செந்தமிழ் முத்து விருது வழங்கி சிறப்பு செய்தது.
39)ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 28-10-2018 அன்று நடத்திய 29 ஆம் ஆண்டு விழாவில் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கி சிறப்பு செய்தது.
40)குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம் அவர்களைத் தலைவராகக் கொண்டு இராஜபாளையத்தில் இயங்கிவரும் மணிமேகலை மன்றம் 23-12-2018 அன்று நடத்திய மன்றத்தின் 60 ஆம் ஆண்டு மணிவிழாவில் சிறந்த கவிதை நூல்களைப் படைத்ததற்காகக் கவிச்சிகரம் விருது வழங்கி சிறப்பு செய்தது.
41) தமிழ்ப் படைப்பாளர் சங்கம் 01-06-2019 அன்று சென்னையில் நடத்திய ஐம்பெரும் விழாவில் படைப்பாற்றலைப் பாராட்டி மதிப்புறு படைப்பாளர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.
42)கம்போடியா அரசும் அங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து 23-9-2019 இல் நடத்திய உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில், கவிதைப் பணியைப் பாராட்டி அந்நாட்டின் உயர்ந்த விருதான ஏழாம் செயவர்தன் விருதினை அளித்து சிறப்பு செய்தது.
16. நூல்கள் பெற்ற பரிசுகள் :
01. பாரதஸ்டேட் வங்கி 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வீணை மத்தளமாகிறது நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
02. பாரத ஸ்டேட் வங்கி 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக மரபின் வேர்கள் நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
03. சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.
04. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது.
05. கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக கல் லெழுத்து நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
06. கரூர் திருவள்ளுவர் கழகம் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகக் கல்லெழுத்து நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது. (7)
07.புதுவையில் இயங்கி வரும் பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றம் மரபுப் பா நூற் பரிசு திட்டம் மூலம் 2014 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலாகக் கல்லெழுத்து நூலை தேர்ந்தெடுத்து 20-10-2017 அன்று புதுவையில் நடந்த விழாவில் விருதும் பொறிகிழியும் வழங்கி சிறப்பு செய்தது.
08. கம்பம் பாரதி இலக்கியப் பேரவை 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த மரபுக் கவிதை நூலாகச் செப்பேடு நூலைத் தேர்ந்தெடுத்து 15-8-2016 அன்று கம்பத்தில் நடைபெற்ற விழாவில் பொற்கிழியும் விருதும் வழங்கி சிறப்பு செய்தது.
09. சென்னை கவிமுகில் அறக்கட்டளை 2016 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலாக செப்பேடு நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் உரூபா ஐந்தாயிரமும் வழங்கி சிறப்பு செய்தது.
10. சென்னை உரத்த சிந்தனை அமைப்பு 2016 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலாக செப்பேடு நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் உரூபா மூவாயிரமும் வழங்கி சிறப்பு செய்தது.
11. சென்னை உரத்த சிந்தனை அமைப்பு 2017 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலாக அகமுகம் நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் உரூபா மூவாயிரமும் வழங்கி சிறப்பு செய்தது.
12.சென்னை மின்னல் கலைக்கூடம் மற்றும் பொதிகை மின்னல் இதழும் இணைந்து 2017 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலாக அகமுகம் நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் உரூபா மூவாயிரமும் வழங்கி சிறப்பு செய்தது.
13. . சென்னை உரத்த சிந்தனை அமைப்பு 2018 ஆம் ஆண்டின் சிறந்த மரபுக் கவிதை நூலாக கால்முளைத்த கனவுகள் நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் உரூபா மூவாயிரமும் வழங்கி சிறப்பு செய்தது.
14. மலேசியா நாட்டு ஈப்போவில் 9,10 – 11 - 2019 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற
2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாட்டை ஒட்டி உலக அளவில் நடத்தப்பட்ட மரபுக் கவிதை நூல் போட்டியில் செப்பேடு நூல் முதல் பரிசு பெற்றது. மலேசியா தொகை 1500 ரிங்கட் மற்றும் சான்றிதழும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
15) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களில் பசிவயிற்றுப் பாச்சோறு நூலைச் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்துச் சிகரம் காலாண்டிதழ் முதல் பரிசை வழங்கிச் சிறப்பு செய்தது. (8)
16) அகில இந்திய தமிழ்ச்சங்கமும் நிலா இலக்கியத் திங்களிதழும் இணைந்து நடத்திய 2018,2019 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த கவிதை நூல்கள் போட்டியில் கால் முளைத்த கனவுகள் நூலுக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
17. கவிதைப்போட்டிகளில் பெற்ற பரிசுகள் :
01. மதுரை காந்தி நிறுவனம் கஸ்தூரிபாய் காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி “வருமோ புதிய உலகு” என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
02. பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப்பேரவை “புதிய சமுதாயம் படைப்போம்” தல
உவகை
பாவலர் கருமலைத்தமிழாழன்
ஆசைகளால் நெஞ்சத்தை ஆள விட்டால்
அவலந்தான் பெருகியிங்கே அமைதி போகும்
காசைமட்டும் கணக்கினிலே வரவு வைத்தால்
கடுகடுப்பே முகமாகி நட்பு போகும்
ஓசையுடன் இழிசொற்கள் நாவில் வந்தால்
ஓடிவந்து சினமமர்ந்தே இனிமை போகும்
மாசுடைய பிழைசெயல்கள் செய்து வந்தால்
மற்றவர்கள் மதிக்கின்ற மதிப்போ போகும் !
புறங்கூறும் தீப்பழக்கம் நம்மைச் சாய்க்கும்
பொறாமையெனும் தீயெண்ணம் நம்மை வீழ்த்தும்
அறங்களினைப் புறந்தள்ளின் அழிவைச் சேர்க்கும்
அன்புதனைக் கைவிட்டால் பகைமை கூட்டும்
உறவுகளின் துணையிழந்தால் வலிம
நோயின்றி வாழ்வோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
காலையிலும் மாலையிலும் கைகள் வீசிக்
கால்நீட்டி நடக்கின்ற நடைப யிற்சி
சோலையுள்ள பக்கமாக தினமும் செய்து
சுத்தமான காற்றிழுத்து மூக்கில் விட்டுக்
காலையிளம் கதிரொளிதான் விழியுள் வீழக்
கண்சுழற்றும் பயிற்சியொடு உடற்ப யிற்சி
மேலையுடல் வியர்வைவர நாளும் செய்தால்
மேனியெல்லாம் மெலிந்திருக்கம் நோய்க ளின்றி !
தண்ணீரில் தலைமுழுகத் தினம்கு ளித்துத்
தக்கபடி சுற்றுபுறம் தூய்மை காத்துத்
தண்ணீரைத் சுடவைத்துக் குடிக்க வேண்டும்
தம்வயிறு பசித்தப்பின் உண்ண வேண்டும்
மண்விளையும் பசும்காய்கள் கீரை யோடு
மறக்காமல
இனமொழியைக் காத்திடுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
மூவேந்தர் ஆட்சிசெய்த தமிழ நாட்டை
முச்சங்கம் தமிழ்வளர்த்த தமிழ நாட்டைப்
பாவேந்திக் கணியன்பூங் குன்றன் போன்றோர்
பாரறிய உயர்த்திட்ட தமிழ நாட்டைப்
பூவேந்தி அழைக்காமல் மெட்ராஸ் என்றே
புனைந்துபெயர் மாற்றியதை மீண்டும் நன்றாய்
நாவேந்தித் தமிழ்நாடாய் அழைப்ப தற்கே
நல்லாணை பேரறிஞர் அண்ணா தந்தார்!
பிறமொழியின் ஆதிக்கம் தமிழர் தம்மைப்
பிளவுசெய்து பண்பாட்டைக் குலையச் செய்து
நறவுதமிழ் தமிங்கிலமாய்க் கலப்பு செய்து
நாகரிகம் ஒழுக்கத்தைப் புதிதாய் மாற்றி
உறவுதந்த அருந்தாயை மம்மி யாக்கி
உறவுகளை
இளைஞனே எழுந்து வா
பாவலர் கருமலைத்தமிழாழன்
புதியஓட்டம் குருதியிலே புகுத்திச் செல்வோம்
புதுமைகளைக் கண்டளிக்க விரைந்து செல்வோம்
விதியென்றே அமர்ந்திருந்தால் வந்தி டாது
வினைகளாற்ற வாய்ப்புகளோ அழைத்தி டாது !
குதித்துவரும் அருவிதடை தகர்த்துக் கொண்டு
குன்றின்கீழ் ஆறாகப் பாய்தல் போல
பதித்திடுவோம் புதியபாதை வெற்றி தன்னை
பறித்திடுவோம் இளைஞனேநீ எழுந்து வாவா !
மூடத்தைப் பழமையினை மூலை வைப்போம்
முன்னேறப் பகுத்தறிவில் காலை வைத்தே
வேடத்தைக் கலைத்திடுவோம் சாதி என்னும்
வேண்டாத சட்டையினைக் கழற்றி வைப்போம் !
மாடத்தில் ஏற்றிவைக்கு
ஜல்லிக்கட்டை வென்றெடுக்க வாரீர்
பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழினத்தின் அடையாளம் ஜல்லிக் கட்டு
தமிழ்ப்பண்பின் குறியீடு ஜல்லிக் கட்டு
தமிழர்தம் தொன்மைகுடி ஆயர் தம்மின்
தழைத்தகுல விளையாட்டு ஜல்லிக் கட்டு
தமிழ்நிலத்து முல்லைநில மக்கள் தம்மின்
தன்மான விளையாட்டு ஜல்லிக் கட்டு
நிமிர்ந்தந்த விளையாட்டை நடத்து தற்கே
நிறைதோளின் தமிழாநீ ஒன்று சேர்வாய் !
சிந்துவெளி நாகரீகம் உலகின் மூத்த
சிறப்பான தமிழர்தம் நாக ரீகம்
சிந்துவெளி அகழ்வுதனில் கிடைத்த காசில்
சித்திரமாய் உள்ளதிந்த எருதுச் சின்னம்
முந்தியுன்றன் பாட்டன்முப் பாட்ட னெல்
சுதந்திரம் காக்க உறுதி ஏற்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா
----சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார்
தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத்
----தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார் !
தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா
----தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார்
ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா
----ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் !
வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா
----வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார்
அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா
----அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார் !
பளபளக்க ஆட்ச
இலவசம் என்னும் வசியம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
இலவசங்கள் மக்கள்தமை வசியம் செய்தே
-----இயல்பான வாழ்க்கையினை முடக்கிற் றின்று
இலவசங்கள் உழைக்கவேண்டும் என்று நெஞ்சுள்
-----இருந்திட்ட ஆர்வத்தைக் குலைத்த தின்று
இலவசங்கள் சோம்பலினை உடலி லேற்றி
-----இரவாகப் பகலினையும் மாற்றிற் றின்று
இலவசங்கள் அரசியலின் கட்சி முன்பு
-----இரவலராய்க் கையேந்த வைத்த தின்று !
வரிப்பணமோ உற்பத்தி பெருக்கி நாளும்
-----வளம்பெருக்கி நாடுதனை உயர்த்த வேண்டும்
வரிப்பணத்தில் தொழிற்சாலை கட்டு வித்தால்
-----வறுமையோட்டிச் செல்வத்தைக் குவிக்கு மன்றோ
புர
இலவசம் என்னும் வசியம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
இலவசங்கள் மக்கள்தமை வசியம் செய்தே
-----இயல்பான வாழ்க்கையினை முடக்கிற் றின்று
இலவசங்கள் உழைக்கவேண்டும் என்று நெஞ்சுள்
-----இருந்திட்ட ஆர்வத்தைக் குலைத்த தின்று
இலவசங்கள் சோம்பலினை உடலி லேற்றி
-----இரவாகப் பகலினையும் மாற்றிற் றின்று
இலவசங்கள் அரசியலின் கட்சி முன்பு
-----இரவலராய்க் கையேந்த வைத்த தின்று !
வரிப்பணமோ உற்பத்தி பெருக்கி நாளும்
-----வளம்பெருக்கி நாடுதனை உயர்த்த வேண்டும்
வரிப்பணத்தில் தொழிற்சாலை கட்டு வித்தால்
-----வறுமையோட்டிச் செல்வத்தைக் குவிக்கு மன்றோ
புர
உண்மையில் சுகந்திரம் பெற்றோமா
உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்
உண்மையில் சுகந்திரம் பெற்றோமா
உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்
(11-12-2015 இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்)
பாரதிவழி ஓங்கச்செய்வோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
ஆயிரமாம் தெய்வங்கள் உண்டாம் என்போர்
அறிவிலிகள் ! அறிவொன்றே தெய்வ மென்று
பாயிரமாய் வேதங்கள் சொல்லும் சொல்லைப்
பகுத்தறிவாய் ! மாடனைக்கா டனையும் போற்றி
மாயிருளில் மதிமயங்கி வீழு வோர்கள்
மதியிலிகள் ! அவலைநினைத் துமியை மெல்லும்
வாயினைப்போல் உள்ளவர்கள் என்றே தம்மின்
வரிகளிலே மூடத்தை ஓட வைத்தோன் !
சாதிகளின் வேரறுக்கத் தன்னு டம்பின்
சதிநூலை அறுத்தெறிந்தே பூணூல் தன்னை
ஆதிதிரா விடனென்னும் கனக லிங்க
இன்று தோழர் நிலா சூரியனின் பிறந்த நாள் . அவர் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்