அன்புள்ள அம்மா பாவலர் கருமலைத்தமிழாழன் அன்புள்ள அம்மாவே அந்த படம்

அன்புள்ள அம்மா
	பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்புள்ள அம்மாவே அந்த நாளில்
	அதர்மந்தான் என்றறிந்தும் இரக்க மின்றி
என்னுடைய சுயநலத்தால் மனைவி சொல்லை
	ஏற்றுன்னைச் சேர்த்திட்டேன் முதியோர் இல்லில்
உன்னுடைய உள்ளத்தின் குமறல் தன்னை
	உன்கண்ணில் தெரிந்திட்ட  ஏக்கந் தன்னை
என்னுடைய கல்நெஞ்சால் எண்ணி டாமல்
	ஏதிலியைப் போலுன்னை விட்டு வந்தேன்!

சிற்றெறும்பு கடிக்குமுன்னே துடிது டித்து
	சிறுசினுங்கள் செய்தாலும் ஓடி வந்து
நெற்றியிலே முத்தமிட்டுப் பூவைப் போல
	நெஞ்சோடே எடுத்தனைத்துப் பாலை யூட்டி
பற்றுடனே தமிழூட்டிக் கல்வி யூட்டி
	பார்பவர்கள் பாராட்ட வளர்த்தே ஊரில்
கொற்றவன்போல் உயரவைத்த தாயே உன்னை
	கொடுங்கோலன்  போலவன்றோ சிறைய டைத்தேன்!

காலத்தின் சுழற்சியிலே மீண்டு மந்த
	காலந்தான் மகனுருவில் வந்த தின்று
கோலத்தில் மாற்றமின்றி உன்னைப் போல
	கொடுமையினை அனுபவித்தே குமுறு கின்றென்
ஆலத்தின் விழுதாகத் தாங்கி டாமல்
	அடிமரத்தைச் சாய்த்ததற்குத் தண்ட னையை
ஞாலத்தில் பெற்றின்றோ தவறு ணர்ந்தேன்
	ஞாய்உன்னை வேண்டுகின்றேன் மன்னிப் பாயா!    

அன்புள்ள அம்மா
	பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்புள்ள அம்மாவே அந்த நாளில்
	அதர்மந்தான் என்றறிந்தும் இரக்க மின்றி
என்னுடைய சுயநலத்தால் மனைவி சொல்லை
	ஏற்றுன்னைச் சேர்த்திட்டேன் முதியோர் இல்லில்
உன்னுடைய உள்ளத்தின் குமறல் தன்னை
	உன்கண்ணில் தெரிந்திட்ட  ஏக்கந் தன்னை
என்னுடைய கல்நெஞ்சால் எண்ணி டாமல்
	ஏதிலியைப் போலுன்னை விட்டு வந்தேன்!

சிற்றெறும்பு கடிக்குமுன்னே துடிது டித்து
	சிறுசினுங்கள் செய்தாலும் ஓடி வந்து
நெற்றியிலே முத்தமிட்டுப் பூவைப் போல
	நெஞ்சோடே எடுத்தனைத்துப் பாலை யூட்டி
பற்றுடனே தமிழூட்டிக் கல்வி யூட்டி
	பார்பவர்கள் பாராட்ட வளர்த்தே ஊரில்
கொற்றவன்போல் உயரவைத்த தாயே உன்னை
	கொடுங்கோலன்  போலவன்றோ சிறைய டைத்தேன்!

காலத்தின் சுழற்சியிலே மீண்டு மந்த
	காலந்தான் மகனுருவில் வந்த தின்று
கோலத்தில் மாற்றமின்றி உன்னைப் போல
	கொடுமையினை அனுபவித்தே குமுறு கின்றென்
ஆலத்தின் விழுதாகத் தாங்கி டாமல்
	அடிமரத்தைச் சாய்த்ததற்குத் தண்ட னையை
ஞாலத்தில் பெற்றின்றோ தவறு ணர்ந்தேன்
	ஞாய்உன்னை வேண்டுகின்றேன் மன்னிப் பாயா!

அன்புள்ள அம்மா பாவலர் கருமலைத்தமிழாழன் அன்புள்ள அம்மாவே அந்த நாளில் அதர்மந்தான் என்றறிந்தும் இரக்க மின்றி என்னுடைய சுயநலத்தால் மனைவி சொல்லை ஏற்றுன்னைச் சேர்த்திட்டேன் முதியோர் இல்லில் உன்னுடைய உள்ளத்தின் குமறல் தன்னை உன்கண்ணில் தெரிந்திட்ட ஏக்கந் தன்னை என்னுடைய கல்நெஞ்சால் எண்ணி டாமல் ஏதிலியைப் போலுன்னை விட்டு வந்தேன்! சிற்றெறும்பு கடிக்குமுன்னே துடிது டித்து சிறுசினுங்கள் செய்தாலும் ஓடி வந்து நெற்றியிலே முத்தமிட்டுப் பூவைப் போல நெஞ்சோடே எடுத்தனைத்துப் பாலை யூட்டி பற்றுடனே தமிழூட்டிக் கல்வி யூட்டி பார்பவர்கள் பாராட்ட வளர்த்தே ஊரில் கொற்றவன்போல் உயரவைத்த தாயே உன்னை கொடுங்கோலன் போலவன்றோ சிறைய டைத்தேன்! காலத்தின் சுழற்சியிலே மீண்டு மந்த காலந்தான் மகனுருவில் வந்த தின்று கோலத்தில் மாற்றமின்றி உன்னைப் போல கொடுமையினை அனுபவித்தே குமுறு கின்றென் ஆலத்தின் விழுதாகத் தாங்கி டாமல் அடிமரத்தைச் சாய்த்ததற்குத் தண்ட னையை ஞாலத்தில் பெற்றின்றோ தவறு ணர்ந்தேன் ஞாய்உன்னை வேண்டுகின்றேன் மன்னிப் பாயா! அன்புள்ள அம்மா பாவலர் கருமலைத்தமிழாழன் அன்புள்ள அம்மாவே அந்த நாளில் அதர்மந்தான் என்றறிந்தும் இரக்க மின்றி என்னுடைய சுயநலத்தால் மனைவி சொல்லை ஏற்றுன்னைச் சேர்த்திட்டேன் முதியோர் இல்லில் உன்னுடைய உள்ளத்தின் குமறல் தன்னை உன்கண்ணில் தெரிந்திட்ட ஏக்கந் தன்னை என்னுடைய கல்நெஞ்சால் எண்ணி டாமல் ஏதிலியைப் போலுன்னை விட்டு வந்தேன்! சிற்றெறும்பு கடிக்குமுன்னே துடிது டித்து சிறுசினுங்கள் செய்தாலும் ஓடி வந்து நெற்றியிலே முத்தமிட்டுப் பூவைப் போல நெஞ்சோடே எடுத்தனைத்துப் பாலை யூட்டி பற்றுடனே தமிழூட்டிக் கல்வி யூட்டி பார்பவர்கள் பாராட்ட வளர்த்தே ஊரில் கொற்றவன்போல் உயரவைத்த தாயே உன்னை கொடுங்கோலன் போலவன்றோ சிறைய டைத்தேன்! காலத்தின் சுழற்சியிலே மீண்டு மந்த காலந்தான் மகனுருவில் வந்த தின்று கோலத்தில் மாற்றமின்றி உன்னைப் போல கொடுமையினை அனுபவித்தே குமுறு கின்றென் ஆலத்தின் விழுதாகத் தாங்கி டாமல் அடிமரத்தைச் சாய்த்ததற்குத் தண்ட னையை ஞாலத்தில் பெற்றின்றோ தவறு ணர்ந்தேன் ஞாய்உன்னை வேண்டுகின்றேன் மன்னிப் பாயா!

Close (X)


மேலே