உதயகுமார் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  உதயகுமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2014
பார்த்தவர்கள்:  2043
புள்ளி:  1923

என்னைப் பற்றி...

எதையோ தேடி செல்லும் ஒரு பித்தன்

என் படைப்புகள்
உதயகுமார் செய்திகள்
உதயகுமார் - எண்ணம் (public)
15-Feb-2016 9:39 pm

உங்க எல்லாருக்கும் என்ன வேணும் உதயா செத்துட்டா  அவ்ளோ தான், உதயா தற்கொலை பண்ணிக்கிட்டான்னு நா எப்போ சொன்ன. அவன் மரணம் இயற்கையான மரணம்  போல தான்.உதயாவோட மனைவி . சாகும் போது அவங்களோட அக்காவிடம்( உதயாவின் அண்ணி ) சத்தியம் வாங்கி கொண்டார்களாம். உதயாவை நல்லா பாத்துக்கணும் என்று. அதுனால தான் . உதயா மனைவி செத்துதத்து அப்புறம் , அவங்களோட அக்கா உதயாக்கு  கால்பண்ணி ,  உதயா நான் எப்போ கால் பண்ணாலும் நீங்க  உங்க போன் ரீச் ஆகனும், நைட்  உங்க fb  on  ல இருக்கணும். நீங்க என் கூட பேசுலனா கூட பரவா இல்ல என்று சொல்லி இருந்தாங்க. அதுனால தான் , நாங்க எல்லாரும் எங்களோட சொந்த ஊருக்கு போகும் போது . உதயா போன் , வீட்டுலவே சாஜ் பொட்டுனு போன, நீங்க எல்லாரும் உதயாவை பத்தி கேப்பிங்கனு தான் , அவனோடு இருந்த எழுத்து.காம் பிரிண்ட்ஸ் unfrien  பண்ண fb  la ..    அப்படி இருந்தும் எதுமே தெரியாம எதுக்கு fb  ல வந்து . தேவை இல்லாம பேசுறிங்க .....  தயவு செய்து எல்லாரும் அவங்க வேலையைப் பாருங்க ஓகே . தேவையில்லாம  பேசிட்டு இருந்தா ... அது நல்லா இல்லைங்க . உதயாவை பத்தி வேற ஒரு எண்ணம் ... இன்று மாலை போட்டு இருந்த ..ஆனால் அதை delete  பண்ணிட மறுபடியும் எதான பிரச்சன வரும் என்று . என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .. நீங்க என்ன மேல கஷ்ட படுத்துரிங்க .. உதயா சொன்னா . எழுத்து,காம் பத்தி அதுனால தான் ... அவ maraintha எண்ணம் கூட போட்ட .. எல்லாரும் புரிஞ்சிக்கிங்க ...  நான் இதுக்கு அப்புறம் எண்ணம் பதிக்க மாட்ட ..   எல்லாரும் புரிஞ்சிக்க ட்ரை பன்னுவிங்கன்னு நெனைக்கிற 
   

மேலும்

ஒருத்தன் இறந்துட்டான் என்கிற செய்தியை இவ்ளோ வன்மமா சொன்ன முதல் ஆளு நீங்க தான் ,,, நம்பமுடியவில்லை .. இவனா சொன்னான் இருக்காது நம்ப முடியவில்லை ....!!! 15-Feb-2016 10:04 pm
ஹலோ மிஸ்டர்.. என்ன என்ன கலர் கலரா உளறீட்டு இருக்கீங்க. செத்துப்போயிட்டானு ஒரு வரியில ஒழங்கா எண்ணம் போட்டுட்டு இருந்தா பிரச்சினையே இல்ல... உதயா.. ! ஓ சாரி சாரி உதயாவின் அண்ணா. நீங்க எழுத்துலயும் பேஸ்புக்கிலும் அன் ப்ரெண்ட் பண்ண என்ன அவசியம். சொல்ற காரணத்த எவனாவது காதுல பூ சுத்தி இருப்பான் அவன்கிட்ட சொல்லுங்க. சக உறுப்பினர் செத்துட்டான்னா இல்லையான்னு அவங்கங்க மனம் பதறிட்டு இருக்காங்க. உங்க எண்ணம் மற்றும் நடவடிக்கைகள் அப்படியொரு சந்தேகத்தை கிளப்பி இருக்கு. அது சரி எப்படி சார் எழுத்துல இருக்கும் நண்பர்கள் அடையாளம் பார்த்து பேஸ்புக்ல அன் ப்ரெண்ட் பண்ணிங்க. எழுத்துல இருக்கிற எல்லாரையும் உங்களுக்கு எப்படி தெரியும். தம்பியோட பாஸ்வேர்ட்ஸ் கூட அண்ணனுக்கு தெரியலாமுன்னு ஒத்துக்கலாம். விஷம் குடிக்கலையாம், தூக்கு மாட்டலையாம். ஆனா இயற்கையான மறைவாம். தம்பி செத்துபோன கவலை விட.. இங்க வந்து நிரூபிக்க வேண்டிய கவலைதான் உங்களுக்கு அதிகம்.அச்சோ பாவம்..! . என் வாழ்கையில ஒரு மரணத்துக்கு அனுதாபம் தெரிவிச்சதற்கு ரொம்ப கேவலமா இருக்கு. நாங்க போன் செய்தால் அட்டெண்ட் பண்ணி பதில் சொல் வனால உன் வீட்டு இழவு விழுந்துடுமா.. ? உணர்ச்சி வயப்பட்டு ரியாக்ட் பண்ணுவேன்னு தெரிஞ்சுதான்.. அப்படியொரு எண்ணம் போட்டேன். இப்போ.. தெளிவாயிடுச்சி.. வெரிகுட்.. இப்போ என்னோடு இரங்கல் எண்ணம் நீக்கிடுறேன். செத்துப்போயிட்டான்ல உன் தம்பி.. பின்ன சும்மா சும்மா வந்து இங்க உளறிட்டு இருக்காதே... கிளம்பு கிளம்பு...! ஒருத்தன் மரணத்தை இப்படி விளம்பரப்படுத்தி நான் பார்த்தது இல்ல. ஆவி மாதிரிலாம் திரும்ப திரும்ப வரக்கூடாது. சரியா.. பயப்படுவோம்ல.. எழுத்து நிர்வாகம் இந்த உறுப்பினரின் கணக்கை முடக்க வேண்டுகிறேன். . 15-Feb-2016 9:54 pm
உதயகுமார் - எண்ணம் (public)
12-Feb-2016 11:27 am


வணக்கம் 

நான் உதயாவின் அண்ணன்
என் தம்பியின் இறுதி கவிதை
 --------------------------------------------
சூரியனே இல்லாத வானம் 
காற்றே இல்லாத பூமி 
தாகத்தை தீர்க்காத தண்ணீர் 
இருந்தும் பயனற்றுப் போவதால் 
இன்று கானலாகிக் கொண்டிருக்கிறது 

அர்த்தமற்று வாழ்ந்து 
கடந்துவந்தக் காலங்களில் 
கடைசி ஈராண்டு காலத்தில் 
என்னை மூச்சாய் பேச்சாய் 
எடுத்துக்கொண்டு வாழ்ந்தவள் 
இன்று ஒய்ந்துவிட்டாள் 

அவள் நடமாட்டம் 
ஒடுங்கியப் பின்னும் 
அவளுள் ஓங்கி இருந்தது 
"உதய் உதய் மாமா மாமா"
என்று என்னை உச்சரிப்பது மட்டும்

என்னை அவள் 
உச்சரிக்கும் போதெல்லாம் 
அவள் தந்தையிடமிருந்து 
அடி உதைகள் அர்சனையாக 
அவளுக்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் 

ஆனால் அவளோ 
இந்த பாவியை 
இன்னும் இன்னும் 
அவள் உயிரோடும் மூச்சோடும் 
இறுக்கிக் கொண்டே வாழ்ந்தாள்

ஒவ்வொருமுறை 
தொலைபேசி அழைப்பிலும்
 " மாமா நான் உன்ன கடைசியா 
ஒரு முறை தொட்டு பாக்கணும் ..
உன் நெஞ்சில படுக்கணும் டா "
என்ற அவளின் கடைசி ஆசையை கூட 
"  அடுத்த மாசம் வரன் டி "என்று 
சமாதனம் படுத்திய 
இந்த பாவியை பார்க்காமலே 
சென்று விட்டாள்

நான் கல்லூரி முடித்துவிட்டு 
மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வரும் வரை 
" அக்கா மாமா வந்துட்டு இருப்பாரு 
போன் பண்ணு அக்கா ." என்று 
அழுது ஒரு சின்ன குழந்தைப் போல 
அவளின் அக்காவிடம்( என்அண்ணியிடம்)   
ஆர்ப்பாட்டம் செய்தவள் சென்று விட்டாள் 

இனி யார் என் அண்ணியை 
இப்படி தொல்லை செய்வார்கள் 
என் அண்ணி எப்படி 
அவளின் இழப்பை தாங்கி கொள்கிறாள்
எப்படி என்னையும் அலைபேசியில் 
சமாதனம் படுத்துகிறாள் 
எனக்கு தெரியவில்லை 

நான் வீட்டிற்கு வந்ததும் 
அலைபேசியில் அழைத்தவுடன்
" மாமா .... மாமா வந்துட்டியா மாமா ..
ஐஐஐஐஐஐஐஐஐஐஐ .........அக்கா 
என் உதய் வந்துட்டான்
டேய் உதய் சாப்டியா டா பொருக்கி
 உம்மா செல்லம் 
உம்மா குட்டி பாப்பா "  
என்று இனி யார் என்னை 
முத்தமிடுவாள் எனக்காக காத்திருப்பாள் 

நான் கடைசியாக அலைபேசியில்
பேசும் போது கூட எதற்கோ அழுதேன்
"  மாமா உன் நகம் கட் பண்ணாக் கூட 
உன் பொண்டாட்டி தாங்க மாட்ட டா 
இனிமே நீ அழுதா உன் பொண்ணாட்டி 
செத்து போயிடுவ இது உன் மேல சத்தியம் " 
என்று என்மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்த 
என் குழந்தையை என் மனைவியை 
என் கண்ணீல் காட்டாமல் கூட 
எரித்து விட்டார்களே 

" செல்லம் மாமா வர டி உன்கிட்ட 
மாமா இல்லாம நீ எப்படி தனியா இருப்ப " 

அண்ணி அண்ணி 
எனக்கு இப்பொழுது 
உங்கள் நினைத்தால் தான் 
கவலையாக உள்ளது 

எனக்கும் தெரியும் 
நீங்கள் எனக்காகவும் 
உங்கள் தங்கைக்காகவும் 
செய்த தியாகங்கள் 

என் மனைவியின் 
சடலத்தை நான் பார்க்கா
 நீங்கள் யார் யாரோ 
கால்களை பிடித்து 
எனக்காக கண்ணீர் வடித்தும்  
அனைத்தும் பயனற்றுப் போனது 

" அப்பா அம்மா 
அண்ணா தங்கச்சி "
என்னவென்றே தெரியவில்லை 
இன்று என்னுள் ஒரு நெருடல்

என் மனதிலும் இதயத்திலும் 
எதோ ஒன்று நடக்கிறது 
எனக்கு சொல்ல தெரியவில்லை 
உறக்கம் வேறு வருகிறது 

நான் நிச்சயம் தற்கொலை 
செய்துக்கொள்ள மாட்டேன் 
இருந்தாலும் ஏன் இன்று விரைவாக 
என்னுள் சோர்வு பரவுகிறது 
ஏன் என்னுள் .... 

இது என் தம்பி இறுதியாக எழுதியது. இரவு உறங்கும் முன் , அவனது லேப்டாப் -  ல் எண்ணம் பகுதியில் அவனே டைப் செய்துவிட்டு உறங்கி விட்டான் ( இறந்துவிட்டான் ). எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது , அவள் எழுதும் போது பார்ப்பேன். எனக்கு அவன் எழுதுவது அவ்வளவு புரியாது.

என்னை டைப் செய்யணும் னு தெரியாமலே டைப் செய்கிறேன். உங்களுக்கு தெரியுமா என் தம்பி எவ்வளவு பெரிய பலசாலி திறமைசாலி என்று கடந்த வருடம் கூட காரில் எதோ ஒன்று புதிதாக ஒரு சிஸ்டம் கண்டுபிடித்தான்.  எவருக்கு பயப்பாடதவன் , அன்புக்கு மட்டும் கட்டுப்பட்டவன். பலரின் நலத்தை கருதுபன் 

எல்லாம் இன்று முடிந்தது . முடிந்துவிட்டது ....

உறங்குவதைப் போலவே படுத்துக் கொண்டிருக்கிறான் 
என் தம்பி.. தம்பி ...

மேலும்

தினம் தினம் தளத்தில் பிறந்த நாள் கொண்டவர்களுக்கு வாழ்த்து என தனியாக பதிவு செய்து வருவான்..நெஞ்சம் நெகிழும் இந்த சேவை கண்டு.. சத்தியமாக இப்படி நினைக்கவே இல்லை.. இருள் சூழ்ந்தது போல உணர்கிறேன். ஏதும் உண்மையாய் இருக்க கூடாது என தவியாய் தவிக்கிறது நெஞ்சம். 15-Feb-2016 7:13 pm
வாசித்திடும் போதே அழுகை வருகிறது.....நண்பர் உதயா அவர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு என்ன நிகழ்ந்தது என்பதை உறுதிபடுத்துங்களேன்....ப்ளீஸ்................. 14-Feb-2016 2:18 pm
மனம் பதற வைக்கும் செய்தி , என்னாயிற்று தோழருக்கு , அவரோடு தொலைபேசி நட்பு கொண்டவர்கள் உண்மை நிலவரம் சொல்லவும் ...நண்பர் நலமோடு இருக்க இறைவன் அருள் புரியட்டும். 13-Feb-2016 11:45 pm
உதயா அவர்களின் எண்ணத்தை படித்த போது ஏதோ மன கவலையில் இருக்கின்றார் போலும் ஆகையால் தான் அவ்வாறு எழுதியிருக்கிறார் என எண்ணினேன் அவரை பற்றி தெரியாது எனினும் இறுதிக்கவிதை என்று அவரது அண்ணா அனுப்பியதை படிக்கும் போது ஏனோ கண்கள் கலங்குகின்றது அதிர்ச்சியாகவும் உள்ளது உண்மை என்னவென்று தெரிவியுங்கள் 13-Feb-2016 11:30 pm
உதயகுமார் - எண்ணம் (public)
11-Feb-2016 1:50 pm

அனைவருக்கும் வணக்கம் 

************************************

நான் உதயா , உங்களோடு சிறு நேரம் பேச விரும்புகிறேன். நான் இந்த தளத்தில் கிட்டதட்டம் 1 வருட காலமாக உள்ளேன். நான் கவிஞனா ..? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்தவாறு இதுவரை எழுதியும் , சிலரின் கவிதையை வாசித்தும் இந்த தளத்தில் வளம் வந்துள்ளேன். 

அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் நிச்சயம் உண்டு. இந்த கவி தளத்தின் உதித்த உதயா என்கிற நான் , இன்றோடு மறைகிறேன். எனது பயணம் இன்றோடு முடிகிறது. நான் இதை உங்களுடன் சொல்லாமல் கூட செல்லலாம்  என்று தான் நினைத்தேன்.  இருந்தாலும் பிற்காலத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் , "  உதயா என்று ஒருவன் இருந்தானே " என எனக்காக உங்கள் நேரத்தை வீணடிக்கும் விவாதங்கள் இங்கு நிகழ கூடாது என்பதற்காக , நான் சொல்லிவிட்டே செல்கிறேன். 

இங்கு நிறைய கற்றுக்கொண்டேன்  என நினைக்கிறேன். ( நான் இதுவரை பிரபலங்களின் யாருடைய கவிதையையோ கதையையோ படித்தது இல்லை என்பது சத்தியமான உண்மை ), இங்கு தான் கவிதை கதை படித்தேன், கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டேன்.

இத்தளத்தில் நட்பு சிறகுகளில் நானும் ஒரு இறகு தான், ஆனால் இன்று காற்றின் சுழற்ச்சி கொஞ்சம் அதிகம் என எண்ணுகிறேன், அதனால் தான் நான் கயன்றிவிட்டேன். 

எப்படியோ  எனக்கான மாலை நேரம் வந்துவிட்டது .  நான் மறைந்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் சுழற்ச்சி. அதே போல்  நான் மீண்டும் விடிய இயலாது என்பது விதியின் சுழற்ச்சி

இந்த தளத்தில் எனக்கு நிறைய சுவாரஷ்ய அனுபவங்கள் நடந்துள்ளது. இக்கணம் நினைத்தால் கூட நெஞ்சில் பூ பூக்கிறது 

சங்கரன் ஐயா
மலர் ஐயா 
கல்பனா பாரதி ஐயா 
பனிமலர் அம்மா 
சாந்தி அம்மா 
யாழினி 
கயல் 
சந்தோஷ்குமார் 
சர்பான் 
அனு ஆனந்தி
பிரியன் 
வெள்ளூர் ராஜா 
பழனிகுமார் ஐயா 
ஆதிநாடா ஐயா 
ஜின்னா 
மணி மீ 
காளியப்பன் ஐயா 
நிலா கண்ணன்
மனோ 
கிருஷ்ணதேவ் 
ருத்ரா 
சியாமளா அம்மா 
அர்ஷத் 
அமரா 
முதல் பூ 
பாத்திமா 
கார்த்திகா 
செல்வமுத்தமிழ் 
மீனா 
கிருத்திகா ரங்கநாதன் 
சுஜய் ரகு 
ராஜன் ஐயா 
கருணா ஐயா ................

இன்னும் இந்த பட்டியல் நீளும் எனக்கு தான் இப்போது ஞாபகம் வரவில்லை . இவர்கள் அனைவரும் .. என் கவியில் கருத்திட்டோர் .... இன்னும் சிலரின் பெயர் மறந்துவிட்டது மன்னிக்க  

 அகன் ஐயாவை எப்படியாவது என் கவியில் கருத்திட வைக்க வேண்டும் என்று எண்ணி ..  ஏக்கத்தோடு கவிகளை எழுதி கொண்டேன் இருந்தேன் ...   அதுவும் ஒரு நாள் நிறைவேறியது ... நான் தனிமை பற்றி எழுதிய ஒரு கவிக்கு அவரின் கருத்து கிடைத்தது .
 
இப்படி இப்படியாக சுற்றி திரிந்த ..  உதயா என்கிற நான் .. இன்று முதல் தொலைந்து போகிறேன்  ...
 
காரணம் - என்  வாழ்வின் சுழற்ச்சிக்குள் உள்ளது .அதை இங்கு வெளிப்படையா சொல்ல எனக்கு விருப்பம் இல்லை .

நான் செல்கிறேன் தோழர்களே/தோழமைகளே .....

( தோழர் ஜின்னா...  என்னை மன்னிக்க என்னால் ஹைக்கூ தொடரில் பங்கு பெற இயலாது )
 
- உதயா 

மேலும்

கீதாசாரம் தன நான் உனக்கு கூறும் அறிவுரை நன்றி 13-Feb-2016 5:26 am
லூசு எங்கடா போன .சீக்கிரம் வா....அடி வாங்காம...கோவம் வந்தா தெரியும்ல எனக்கு...... 12-Feb-2016 4:09 pm
விழிகளை நீராக்குகிறாய் உன் வரவை எதிர்பார்க்கிறேன் உதயா ..... 12-Feb-2016 2:52 pm
அன்பின் உதயா உங்கள் கவிதைகள் படித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்,ஏனெனில் நீங்கள் எழுதுவது படிக்கும் எங்களுக்கு அறிவுரையும் அனுபவமும் பெற்றுத் தரும் விதத்தில் அமையும் ,அதனால் தான் நீங்கள் கவிஞன் என்றும் நினைப்பேன் ,உதயா நீங்கள் சிறு பிள்ளை தான் ஆனால் எழுத்தில் பெரியவன், ஊர் என்ன சொன்னாலும் மனம் கவலைப் பட வேண்டாம் , வாழ்த்துக்கள் உதயா 11-Feb-2016 10:13 pm
கருணாநிதி அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 21 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Feb-2016 12:21 am

முன்னுரை:

தனித்தனியாய் நடமாடும்

ஹைக்கூகளை இணைத்தால்

பிறக்கும் ஒரு கதை!

..

பயனின்றி பாயும்

நதிகளை இணைத்தல்

நாட்டின் வளத்திற்கு விதை !

..

நதிகளின் கரைகளில் சற்றே உலவிட உங்களை அன்புடன் அழைத்திடும்

- கருணா

*******************

நடமாடும் நதிகள்!

*******************

கவிகின்றது இருள் !

கூடு திரும்பும் பறவைகள் -

மரத்தில் பாம்பு !
..

கள்ளுண்ட வண்டு!

காய்ந்த மாடு - நொறுங்குகின்றன

கண்ணாடி வளையல்கள் !

..

ஆதாமின் குற்றத்திற்கு

நாட்டாமை தீர்ப்பு - கடன்

வாங்கி கல்யாணம்!

..
வறண்ட பூமியில்

விதியின் யுத்தம் - கண்ணீரில்

மேலும்

அனைத்தும் அற்புதமான வரிகள். 29-Mar-2016 10:27 am
சிந்திக்க வைக்கும் வரிகள் ! 22-Mar-2016 2:08 pm
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஐயா...! 20-Mar-2016 11:23 am
மிக்க நன்றி நண்பரே 16-Mar-2016 8:45 pm
கருணாநிதி அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 31 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Feb-2016 12:21 am

முன்னுரை:

தனித்தனியாய் நடமாடும்

ஹைக்கூகளை இணைத்தால்

பிறக்கும் ஒரு கதை!

..

பயனின்றி பாயும்

நதிகளை இணைத்தல்

நாட்டின் வளத்திற்கு விதை !

..

நதிகளின் கரைகளில் சற்றே உலவிட உங்களை அன்புடன் அழைத்திடும்

- கருணா

*******************

நடமாடும் நதிகள்!

*******************

கவிகின்றது இருள் !

கூடு திரும்பும் பறவைகள் -

மரத்தில் பாம்பு !
..

கள்ளுண்ட வண்டு!

காய்ந்த மாடு - நொறுங்குகின்றன

கண்ணாடி வளையல்கள் !

..

ஆதாமின் குற்றத்திற்கு

நாட்டாமை தீர்ப்பு - கடன்

வாங்கி கல்யாணம்!

..
வறண்ட பூமியில்

விதியின் யுத்தம் - கண்ணீரில்

மேலும்

அனைத்தும் அற்புதமான வரிகள். 29-Mar-2016 10:27 am
சிந்திக்க வைக்கும் வரிகள் ! 22-Mar-2016 2:08 pm
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஐயா...! 20-Mar-2016 11:23 am
மிக்க நன்றி நண்பரே 16-Mar-2016 8:45 pm
உதயகுமார் - உதயகுமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2016 10:21 am

இன்று .....

நம் தளத்தின் தோழமை Rahma Fathima அவர்களுக்கு பிறந்தநாள் 

வாழ்த்துவோம் அனைவரும் ...

மேலும்

உதயா.... என்னை வாழ்த்திட்டு எங்கே போய்விட்டாய்.. எல்லோரும் என்னென்னமோ சொல்றாங்க... தாங்க முடியவில்லை நண்பா... இது எல்லாம் பொய் தானே... நான் நம்பமாட்டேன்.. 15-Feb-2016 8:32 pm
உதயகுமார் - எண்ணம் (public)
10-Feb-2016 10:21 am

இன்று .....

நம் தளத்தின் தோழமை Rahma Fathima அவர்களுக்கு பிறந்தநாள் 

வாழ்த்துவோம் அனைவரும் ...

மேலும்

உதயா.... என்னை வாழ்த்திட்டு எங்கே போய்விட்டாய்.. எல்லோரும் என்னென்னமோ சொல்றாங்க... தாங்க முடியவில்லை நண்பா... இது எல்லாம் பொய் தானே... நான் நம்பமாட்டேன்.. 15-Feb-2016 8:32 pm
ஜி ராஜன் அளித்த படைப்பை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 20 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Feb-2016 6:07 am

(1)

ரயிலில் சுட்டிப்பயல்
கூடவே ஓடித் தோற்கிறது
ஜன்னலில் நிலா

****************************************
(2)

மகனிடம் பெருமையாய்
பொறியாளர் பட்டம்
அப்பாவிடம் அடகுக்கடை ரசீது

***************************************
(3)

கரும்பலகைப் பாடங்கள்
கவனமில்லாச் சிறுவன்
மைதானத்தில் தும்பிகள்

****************************************
(4)

போக்குவரத்து சமிக்ஞை
சிவப்பு விழ காத்திருப்பு
யாசிக்கும் சிறுமி

*****************************************
(5)

உருவப்படும் கையுறைகள்
திறக்கும் கண்ணாடிக்கதவு
கேட்கிறது முதல் அழுகை

*****************************************

மேலும்

அனைத்தும் அருமை குறிப்பாக மனதிற்கு இதமாக கதிரவனைக் காணும் காலைநடையில் கரைகின்றன காகமும் உடல் கொழுப்பும் ரயிலில் சுட்டிப்பயல் கூடவே ஓடித் தோற்கிறது ஜன்னலில் நிலா 31-Mar-2016 4:01 am
"ரயிலில் சுட்டிப்பயல் கூடவே ஓடித் தோற்கிறது ஜன்னலில் நிலா" ரயிலில் சுட்டிப் பயலாக உங்கள் குட்டிக் குட்டி கவிதை வரிகள் (ஹைக்கூ வரிகள்)...அருமை. 28-Mar-2016 3:21 pm
அருமை சார். மிகவும் ரசித்த வரிகள்... ஏற ஏற மூச்சிரைத்தது.. காலடியில் சிகரம் 22-Mar-2016 2:06 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! 02-Mar-2016 9:37 am
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 25 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2016 6:07 am

(1)

ரயிலில் சுட்டிப்பயல்
கூடவே ஓடித் தோற்கிறது
ஜன்னலில் நிலா

****************************************
(2)

மகனிடம் பெருமையாய்
பொறியாளர் பட்டம்
அப்பாவிடம் அடகுக்கடை ரசீது

***************************************
(3)

கரும்பலகைப் பாடங்கள்
கவனமில்லாச் சிறுவன்
மைதானத்தில் தும்பிகள்

****************************************
(4)

போக்குவரத்து சமிக்ஞை
சிவப்பு விழ காத்திருப்பு
யாசிக்கும் சிறுமி

*****************************************
(5)

உருவப்படும் கையுறைகள்
திறக்கும் கண்ணாடிக்கதவு
கேட்கிறது முதல் அழுகை

*****************************************

மேலும்

அனைத்தும் அருமை குறிப்பாக மனதிற்கு இதமாக கதிரவனைக் காணும் காலைநடையில் கரைகின்றன காகமும் உடல் கொழுப்பும் ரயிலில் சுட்டிப்பயல் கூடவே ஓடித் தோற்கிறது ஜன்னலில் நிலா 31-Mar-2016 4:01 am
"ரயிலில் சுட்டிப்பயல் கூடவே ஓடித் தோற்கிறது ஜன்னலில் நிலா" ரயிலில் சுட்டிப் பயலாக உங்கள் குட்டிக் குட்டி கவிதை வரிகள் (ஹைக்கூ வரிகள்)...அருமை. 28-Mar-2016 3:21 pm
அருமை சார். மிகவும் ரசித்த வரிகள்... ஏற ஏற மூச்சிரைத்தது.. காலடியில் சிகரம் 22-Mar-2016 2:06 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! 02-Mar-2016 9:37 am
ஆனந்தி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2016 9:43 pm

எழுதுவதெல்லாம் கவிதை
அல்ல என எண்ணியிருந்தேன்
உன்னை எழுதும் வரை....
--------------------------------------------
உயிர் கரையுமா சத்தியமாய்
சாத்தியம் தான் நம்புகிறேன்
உன்னை கண்ட பிறகு.........
----------------------------------------------------
வரங்கள் சாபமாகவும்,
சாபங்கள் வரமாகவும்
முரண்படுவது இந்த காதலில்
தானோ???
பார்க்கும் போதே இமைக்கவும்
செய்கிறது - உன் கண்கள்
--------------------------------------------
என்ன விந்தை
இடியும் இசையும்
மாறி மாறி
வருவது நீ தானே......
-------------------------------------------------------
விசித்திரமான தருணம்
நீ நான்
காதல் சாத்தான்
முடிவு ச

மேலும்

எழுதுவதெல்லாம் கவிதை அல்ல என எண்ணியிருந்தேன் உன்னை எழுதும் வரை.... என்ன வார்த்தை ஜாலம் 10-May-2016 12:57 am
நன்றி மு.ரா........... 09-Feb-2016 11:36 pm
நன்றி உதய்.......... 09-Feb-2016 11:35 pm
ம்ம்ம்ம் ... மிகச் சிறப்பு ... வாழ்த்துகள் ... 09-Feb-2016 4:43 pm
கவிஜி அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 22 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Feb-2016 7:53 am

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------

நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------

அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------

மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

மேலும்

நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
அனைத்தும் அருமை...! ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி விட முடிகிறது வீட்டுப் பெண்களால் - மிக அருமை முன்னால் தூக்கிப் போட்டாய் சற்று நீளமான ஹைக்கூ ஜடையானது - அழகு வாழ்த்துக்கள் 20-Mar-2016 11:18 am
கவிஜி அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 28 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2016 7:53 am

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------

நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------

அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------

மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

மேலும்

நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
அனைத்தும் அருமை...! ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி விட முடிகிறது வீட்டுப் பெண்களால் - மிக அருமை முன்னால் தூக்கிப் போட்டாய் சற்று நீளமான ஹைக்கூ ஜடையானது - அழகு வாழ்த்துக்கள் 20-Mar-2016 11:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (269)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
வித்யா

வித்யா

சென்னை
கமலேஷ்

கமலேஷ்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (271)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (272)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே