நடமாடும் நதிகள் - பகுதி 4

(1)

ரயிலில் சுட்டிப்பயல்
கூடவே ஓடித் தோற்கிறது
ஜன்னலில் நிலா

****************************************
(2)

மகனிடம் பெருமையாய்
பொறியாளர் பட்டம்
அப்பாவிடம் அடகுக்கடை ரசீது

***************************************
(3)

கரும்பலகைப் பாடங்கள்
கவனமில்லாச் சிறுவன்
மைதானத்தில் தும்பிகள்

****************************************
(4)

போக்குவரத்து சமிக்ஞை
சிவப்பு விழ காத்திருப்பு
யாசிக்கும் சிறுமி

*****************************************
(5)

உருவப்படும் கையுறைகள்
திறக்கும் கண்ணாடிக்கதவு
கேட்கிறது முதல் அழுகை

******************************************
(6)

மொட்டைமாடி கோபுரம்
அலைபேசி ஆரவாரம்
வெறிச்சோடிய வானம்

********************************************
(7)

கதிரவனைக் காணும்
காலைநடையில் கரைகின்றன
காகமும் உடல் கொழுப்பும்

**********************************************
(8)

அடம் பிடித்து அழும்
ஐந்து வயது குழந்தை..
வெளியே ஆலங்கட்டி மழை

***********************************************
(9)

நடுநிசி உறக்கம்
உயரும் மேளச்சத்தம்..
நதியைக் கடக்கும் ரயில்

************************************************
(10)

ஏற ஏற
மூச்சிரைத்தது..
காலடியில் சிகரம்

*************************************************



நன்றி : தொடர் தொகுப்பாசிரியர் திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி

எழுதியவர் : ஜி ராஜன் (9-Feb-16, 6:07 am)
பார்வை : 513

மேலே