புகழ் வாழும்

புதுமைகள் புரிந்திடும் புரட்சித் தீயில்
==புனிதமாய்க் குளித்தெழு புவியினில் நீயும்.
பதுமையாய் இருந்திட வெனவா நமக்காய்
==பத்தியம் கிடந்தது ஈன்றனள் தாயும்?
மதுவெனும் சாக்கடை மண்டுதல் விட்டு
==மனிதனாய் உருப்பட முனைகிற போது
எதுமுடி யாதென இருந்தது அதுவோ
==இலகுவில் உன்வசம் வருவது திண்ணம்

வறுமையின் நிழலது விழுகிற சூழ்நிலை
==விரட்டிடும் தைரியம் வளர்த்திட வேண்டும்
குறுகிய மனநிலை குடமதன் சுடர்தனை
==குன்றினில் வைத்தொரு ஒளிதர வேண்டும்
வெறுமையே வாழ்வென விரக்திகள் கொள்கிற
==விதிதனை உடைத்திடு. சுறுசுறுப் புள்ள
எறும்பென இயங்கட தயங்கிட வேண்டாம்
==எதிர்த்திடு புயலையும் புயங்களைக் கொண்டு

இருக்கிற சிறுதுளி அறிவினைக் கொண்டு
==இயற்கையாய் கிடைக்கிற சருகையும் வைத்து
உருப்பட வழிவகை சமைத்தவர் இந்த
==உலகினில் ஆயிரம் இருப்பதைக் கண்டு
நெருப்பது பஞ்சினில் விழுந்தது போன்று
==நித்தமும் எடுத்திடும் முயற்சியில் வீழ்ந்து
திருப்பமும் நிகழ்த்திடப் புகைந்திடு போதும்
==திருக்குறள் போலவே உன்புகழ் வாழும்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Feb-16, 2:28 am)
Tanglish : pukazh vaazhum
பார்வை : 88

மேலே