வேதனையைத் தகர்த்து சாதனைகள் புரிந்திடு

வேதனையைத் தகர்த்து
சாதனைகள் புரிந்திடு//1
சோதனைகள் யாவையுமே
சோர்வுன்றித் தகர்த்திடு //2
பாதைகள் வகுத்தே
பலதையும் வென்றிடு//3
தோல்வி என்பதே
வெற்றியின் முதல்படி //4
தோற்றிடும் போதிலும்
அஞ்சா நெஞ்சமுடன் //5
நம்பிக்கை கொண்டே
நலமோடு நடைபோடு//6
தீரமுடன் போராடித்
தீந்தமிழைத் காப்பாற்றி//7
நானிலம் போற்றும்
நாயகனாய் கொடியேற்று//8
வெற்றி என்பதே
நாளைய சரித்திரம் //9
காட்டிடுவோம் தமிழனின்
பெருமையை உலகிற்கு//10
கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (17-Nov-24, 10:51 pm)
சேர்த்தது : kavithasan
பார்வை : 20

மேலே