சாலையோரம் வெய்யில் மரநிழலில்
சொய்யென்ற ஓசையிலே செய்தநெய் தோசையும்
நெய்யிலே செய்தபொன் நெல்லைநல் அல்வாவும்
அய்யர் கடையின் அடுக்குப்பூ இட்டிலியும்
கையிலே தந்திடுவான் பையன்சா லையோரம்
வெய்யில் மரநிழ லில்
----பல விகற்ப பஃறொடை வெண்பா
கையிலே யை எதுகையாகக் கொண்டாள் இது
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
அருகே அமர்ந்தொரு ஆப்பக் கிழவி
தருவாள் தனதுபொக் கைவாய்ச் சிரிப்பில்
சுருள்வெண் நிலாஇடியாப் பம்
---ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா