தோத்திரமாய்ப் பாடுவேன் தோய்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிற்றன்னை அன்புள்ளஞ் சேர்ந்தென்றுங் கொண்டவளாம்
பெற்றவன்னை போலப் பிரியமுடன் - உற்றவழி
காத்திடுவாள்; காலமெலாங் கண்ணெனவே நானவளைத்
தோத்திரமாய்ப் பாடுவேன் தோய்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-25, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே