சரணடைந்தோம்
சரணடைந்தோம்...!
02 / 09 / 2024
சங்கத் தமிழ் பாட்டொன்று படைத்திட
அங்கம் சுருக்கி அறிவை பெருக்கி
வங்க கடல் அலையென பெருகும்
தங்கத் தமிழ் வார்த்தை பொருக்கி
சிங்கமென சீறும் சீர் தளையோடு
பங்கமொன் றும்வாரா மல் உன்
மங்கா இளமை புகழ் மாறாமல்
தூங்கா விளக்கென ஒளிச் சுடரேற்றி
சங்கே முழங்கு சங்கே முழங்கென
திங்களும் பரிதியும் முறையே நாளை
பங்கிட்டு உன்புகழ் மேதினியில் பரப்பிட
எங்கள் தாயே..! எங்கள் வாழ்வே ...!
குங்கும திலக மிட்டு வாழ்த்துவாயே..!
தங்கமென மின்னும் உன்பாதம் பிடித்து
எங்கள் சிரம் தாழ்த்தி சரணடைந்தோம்.

