முருகனைப் போற்றுவோம்

முருகனைப் போற்றுவோம்

அருளின் அமைதியே போற்றி
ஆதிசிவனின் அங்கமே போற்றி
இன்பம் அளிப்பவனே போற்றி
ஈசனுக்கு இணையானவனே போற்றி
உண்மையின் உறைவிடமே போற்றி
ஊழ் வினையும் சூதும் நீக்குவாய் போற்றி
எந்நாளும் எனை ஆள்வாய் போற்றி
ஏற்ற தாழ்வு அற்றவனே போற்றி
ஐம்புலனின் அடக்கமே போற்றி
ஒருகை தண்டமே போற்றி
ஓம் எனும் ஒலியே போற்றி
ஔவைக்கு பழம்அருளிய ஐயனே போற்றி
சக்திவேல் உடையோனை போற்றுவோம்
போற்றி போற்றி

எழுதியவர் : கே என் ராம் (1-Aug-25, 3:01 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 15

மேலே