புன்னகைப் பூவோ புதிதுபுதி தாய்ப் பூக்கும்

மென்மலர்கள் பூத்தபின் மண்ணில் உதிர்ந்துவிடும்
புன்னகைப் பூவோ புதிதுபுதி தாய்ப்பூக்கும்
பூக்களெல்லாம் சிந்திடும் தேனை அதுபோன்று
பூக்களை வென்றிடும் பூவிதழும் சிந்ததமிழ்ப்
பாக்களும் சிந்தாதோ தேன்

-- பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-25, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 8

மேலே