சின்ன இடையோ சிவந்த நூலோவியம்

புன்னகையின் தேவதை பூக்களுக்கு நீதலைவி
மின்னல் விழிவீச்சில் மேனகையும் தோற்றிடுவாள்
சின்ன இடையோ சிவந்தநூ லோவியம்
கன்னமோ காஷ்மீர்ஆப் பிள்
-----இன்னிசை
புன்னகையின் தேவதைநீ பூக்களுக்கு நீதலைவி
மின்னல் விழிவீச்சில் மேனகை -- உன்னெழில்
சின்ன இடையோ சிவந்தநூ லோவியம்
கன்னமோ காஷ்மீர்ஆப் பிள்
----நேரிசை