முதுமையில் வாழ்கை

முதுமையில் வாழ்கை

கண்களில் தெரிவது கருணை
காதினில் கேட்பது இனிமை
கருத்தினில் நிற்பது உண்மை
கையினில் தெரிவது திறமை
மனதினில் நிறைவது தூய்மை
உள்ளத்தில் உள்ளது மென்மை
உடலில் இருப்பது வலிமை
வாயினில் பேசுவது உண்மை
வயதினில் வருவது முதுமை
வாழ்க்கைக்கு வேண்டுவது எளிமை

எழுதியவர் : கே என் ராம் (24-Sep-25, 5:39 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : muthumayil vaazhkai
பார்வை : 26

மேலே