சுடும் மஞ்சத்தில் உருகுதடி

வஞ்சத்தில் அவன்
செய்த மோசம்
மஞ்சத்தில் அவன்
செய்த நாசம் - சுடும்
மஞ்சத்தில் உருகுதடி.

எத்தனையோ கனவுகள் எல்லாம்
மொத்தமாய் உருகுதிங்கே
சுத்தமான நிலவின் வரவும்
அத்தமனம் ஆனதிங்கே
சத்தமாய் பேசிய — நாவுகள்
மொத்தமாய் புரளுதிங்கே
சத்தமின்றி உந்தன் முடிவும்
ரத்தமுடன் போனதிங்கே

உனை கடித்த ஹைனாவோ
சுற்றித் திரிகிறது
அதை காக்க நரிகளோ
சட்டத்தை வளைக்கிறது
சுரண்டி திங்கும் ஓநாய்கள்
எங்கெங்கோ ஊழையிடுதே

உனக்காக நீதிகேட்டு — கூட்டம்
வீதிகளில் கூடுது
வளைக்க பார்க்கும் — சட்டம்
வளையாமல் நிக்குது
நீதியரசர் பேரவை — திடமாக
வழக்கை நோக்குது — சாயாமல்
பாக்குது நீதி வழங்க.

என்
மனதுக்குள் பதிலின்றி
பற்பல கேள்விகள்
வரிசையாக நிற்கிறது - இதோ

கூண்டை விட்டு பறந்தது தவறா?
சேவை செய்ய துடித்தது தவறா?
ஆணுக்கு நிகராய் உயர்ந்தது தவறா?
பூமியில் பெண்ணாய் பிறந்ததே தவறா? - இல்லை
நடந்து முடிந்ததை நானும் நினைப்பது தவறா?
இதற்குப் பதில் கிடைத்தால் நீயும் திரும்பி வருவாயா?



புதிதாக எழுத தொடங்கியுள்ளேன் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள்

எழுதியவர் : Golden vibes (20-Nov-24, 8:59 pm)
பார்வை : 80

மேலே