சிக்ரி சுக்ரி
ஊர் மக்கள் முன்னிலையில் பெயர்
சூட்டும் நிகழ்ச்சி. அந்த ஊர்
வழக்கப்படி ஊர் மக்கள்
அனைவருக்கும் கறிவிருந்து கொடுத்த
பின்னர் ஊர் மண்டபத்தில் அந்த ஊர்
சோதிடரும் இருப்பார். அவர்
குழந்தைகளின் பெயர் இராசிக்குத்
தக்க குறிப்பைப் பாட்டாகப் பாடி
உணர்த்துவார். அதன்படி
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டப்படும்.
சோதிடரின் பாடல் முடிந்தபின்
அவரது சீடர் அவரது குருவின் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டதைச் சுருக்கமாகச்
சொல்வார். அதன்படி
குழந்தை(களு)க்குப் பெயர் சூட்டப்படும்.
இன்று ஒரு பெற்றோருக்குப் பிறந்த
இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயர்
சூட்டப்படும் நிகழ்ச்சி. இரட்டையில்
முதல் பிறந்த குழந்தை பெண் குழந்தை.
இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை.
சோதிடரின் சீடர்:
"ஊர் மக்களுக்கு என் வணக்கம். என்
குருநாதர் மஹா ஜோதிட வித்வான்
ஞானகுரு பண்டிதர் இந்த இரட்டைக்
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட
உணர்த்திய குறிப்பு 'க்ரி'. அதாவது
குழந்தைகளின் பெயர் 'க்ரி' என்று
முடியவேண்டும். 'க்ரி' முன்பு ஒரு
எழுத்தைத் தான் சேர்க்க வேண்டும்."
அந்த ஊர் தலைவர்:
இன்றைய நாளிதழில் நான் கண்ட ஒரு
இந்திப் பெயர் என் ஞாபகத்துக்கு
வருது. அந்தப் பெயரில் இரண்டு
சொற்கள் உள்ளன. அந்தப் பெயர்
'சிக்ரி' என்று முடிகிறது. அந்தப் பெயரை
பெண் குழந்தைக்கு வைக்கலாம்.
உடனே ஊர் மக்கள் 'சிக்ரி, சிக்ரி,
சிக்ரி' என்று மூன்று தடவை
சொல்கிறார்கள்.
ஊர் தலைவர்: "ஆண் குழ்ந்தைக்கு
குழந்தைகளின் பெற்றோரான
தம்ரேஷும், விக்ராஜியும் ஜோதிடரின்
குறிப்பை மனதில் நிறுத்தி பெயர்
வைக்க வேண்டும்".
பெற்றோர் இருவரில் குழந்தைகளின்
தந்தை: "எங்கள் அழைப்பை ஏற்று
இங்கு வந்து குழுமியுள்ள ஊர்
மக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
உங்கள் அனைவரின் ஒப்புதலுடனும்
ஜோதிடர் வித்வான் பண்டிதரின்
குறிப்பின்படியும் எங்கள் பெண்
குழந்தைக்கு 'சிக்ரி' என்று பெயர்
சூட்டியுள்ளார். அவருக்கு எங்கள் நன்றி.
அவர் குறிப்பின்படி எங்கள் ஆண்
குழந்தைக்கு 'சுக்ரி' என்று பெயர்
சூட்டுகிறோம்".
உடனே ஊர் மக்கள் அனைவரும்
ஒரே குரலில் " சிக்ரி சிந்தாபாத்து. சுக்ரி
சிந்தாபாத்து" என்று கூறி
குழந்தைகளை வாழ்த்தி பரிசுப்
பொருள்களைக் கொடுத்தபின்
ஒவ்வொருவராக கலைந்து
செல்கிறார்கள்.

