அனலிடை மெழுகென மனமது உருகுதே

அனலிடை மெழுகென
மனமது உருகுதே//1
உருகிடும் காதலால்
உள்ளமும் இணையுதே //2
இணைந்திடும் இருவரால்
இன்பமும் பெருகுதே //3
பெருகிடும் அன்பினால்
பேதமையும் நீங்குதே //4
நீங்காத எண்ணங்கள்
நிழல்போல் மறையுதே//5
மறைந்திடும் நாளினில்
மகிழ்ச்சியும் பொங்குதே //6
பொங்கிடும் நினைவினில்
புன்னகையும் மலருதே //7
மலரும் பூவாக
மணமும் பரவுதே //8
பரவிடும் வாசத்தில்
பந்தமாய் நிலைத்துவாழ //9
நிலைத்து வாழந்திட
மனமது உருகுதே //10
கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (17-Nov-24, 10:47 pm)
சேர்த்தது : kavithasan
பார்வை : 3

மேலே