கெடியாரம் நிக்குமா
நடுசாமமாகுது
நாடுமொரங்குது
நகரமுமொரங்குது
கெடியாரமொலிக்குது
நானின்க தூங்கலயே
ஒவ்வொரு நொடியுமே
நெனவுல நீயிருக்க
எதய துடிப்புல
ஒன்னத்தா ஒணருரே
என்னோட மூச்சுல
நீதானே கலக்குற
எங்க பாத்தாலு
நீதா நிக்குற
எங்க போனாலு
கூடத்தா... வாரியே
நாம்பாடுற பாட்டெல்லா
நீதானே எங்கண்ணே
எங்கோ தொலவுல
கடலல மொரயுதே
இங்க எம்மனசோ
ஓநெனவுள கலங்குதே
ஏந்தூக்கமெல்லாம் போகுதே
நீ எப்போ பாப்பியோ
எதையொந்துடிக்கிறத கேப்பியோ
எம்மூச்சுல கலப்பையோ
பூவுல தேன் இருக்குது
வண்டு வந்து குடிக்குது
என்றமனசுக்கு உன்கிட்ட மருந்திருக்கு
கொண்டு வந்து தடவியுடுனு
கேக்க மனசு துடிக்குதே
நீ யொருமொற யென்னபாத்தா
நான் ஏங்குறத புரிஞ்சுக்கிட்டா
நாம ஒன்னா சேர்ந்துருவோம்
உம்மடியில நாம்படுக்க
உம்பேச்சோ தாலாட்டு
கேட்டுக்கிட்டே தூங்குவனே
புதுவசந்தொம்பொறக்குமே
கெடியாரொ நிக்குமே
பதிலுதா சொல்லுவியோ
சொல்லாம போவியோ
மனசுங்கலஞ்சுருச்சு
தூக்கமும்போயிருச்சு
சொல்லாம நீ போனா
உசுரும் போயிடுமோ
மின்மைதானம் வருவியா?