விக்னேஷ் பழனி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  விக்னேஷ் பழனி
இடம்:  பழனி
பிறந்த தேதி :  20-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jan-2016
பார்த்தவர்கள்:  401
புள்ளி:  41

என் படைப்புகள்
விக்னேஷ் பழனி செய்திகள்
விக்னேஷ் பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 9:34 pm

காதோரம் தவழ்ந்திடும் உன் சிகை அழகோ!
முத்துக்களை சிதறிடும் உன் சிரிப்பழகோ!
காதோரம் குலுங்கிடும் உன் கம்மல் அழகோ!
பொழிவுறும் உன் இரு கண்கள் அழகோ!
உன் கருவிழியில் தெரியும் நான் அழகோ!
நம் இருவரையும் இணைக்கும் நம்காதல் அழகோ!

மேலும்

விக்னேஷ் பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 8:18 pm

நீதிதேவதையே! உன் சட்டங்கள்
அறத்தின் கரத்தில் இருந்து
அதிகாரத்தின் கரங்களுக்கு சென்றதேனோ?
தவறிழைக்கும் கையவர்களை தண்டிக்க
உன் சட்டங்கள் மறுப்பதேனோ?
எனது உண்மைகள் தோற்பதேனோ?
இந்த ஊமைச்சட்டங்கள் இருப்பதேனோ?
நடுநிலை மாறிய உன்
"சட்டம் யார் கையில்"
என, நான் தேடுவதேனோ ?

மேலும்

விக்னேஷ் பழனி - விக்னேஷ் பழனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2017 8:15 pm

இலையுதிர் காலத்தையும் வசந்தமாக்கி
எந்தன் வாழ்வை செம்மையாக்கியவளே
என் வருத்தங்கள் அனைத்தையும்
திருத்தங்கள் செய்தவளே !
என் சோகம் தாங்க தோள் கொடுத்தவளே !
என் கண்ணீரைத் துடைக்க கரங்களை நீட்டியவளே !
என் உயிரினுள் ஓடும் உதிரம் ஆனவளே !
உன் அன்பென்னும் வெள்ளத்தினால்
எனை அரவணைத்தவளே !

மேலும்

நன்றி 11-Dec-2017 10:36 pm
உன் அன்பு உள்ளவரை என் சுவாசக்கடல் வற்றாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 10:33 pm
விக்னேஷ் பழனி - விக்னேஷ் பழனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2017 10:22 pm

உன்னை காணாத நாட்களில்
மழையை வேண்டும் உழவனானேன்!
நிலவைத் தேடும் அலைகள் ஆனேன்!
தேனினைத் தேடும் வண்டு ஆனேன்!
நினைவுகளைத் திருடும் கள்வன் ஆனேன்!
உன் வருகையை எண்ணி வாசலானேன் !

மேலும்

நன்றி 11-Dec-2017 10:35 pm
காத்திருப்புக்கள் ஒவ்வொன்றும் தூண்டிலுக்குள் மாட்டிக்கொண்ட மீன்கள் போல ஏக்கத்தோடு விடை பெறுகிறது 09-Dec-2017 10:41 pm
விக்னேஷ் பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 10:22 pm

உன்னை காணாத நாட்களில்
மழையை வேண்டும் உழவனானேன்!
நிலவைத் தேடும் அலைகள் ஆனேன்!
தேனினைத் தேடும் வண்டு ஆனேன்!
நினைவுகளைத் திருடும் கள்வன் ஆனேன்!
உன் வருகையை எண்ணி வாசலானேன் !

மேலும்

நன்றி 11-Dec-2017 10:35 pm
காத்திருப்புக்கள் ஒவ்வொன்றும் தூண்டிலுக்குள் மாட்டிக்கொண்ட மீன்கள் போல ஏக்கத்தோடு விடை பெறுகிறது 09-Dec-2017 10:41 pm
விக்னேஷ் பழனி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 8:15 pm

இலையுதிர் காலத்தையும் வசந்தமாக்கி
எந்தன் வாழ்வை செம்மையாக்கியவளே
என் வருத்தங்கள் அனைத்தையும்
திருத்தங்கள் செய்தவளே !
என் சோகம் தாங்க தோள் கொடுத்தவளே !
என் கண்ணீரைத் துடைக்க கரங்களை நீட்டியவளே !
என் உயிரினுள் ஓடும் உதிரம் ஆனவளே !
உன் அன்பென்னும் வெள்ளத்தினால்
எனை அரவணைத்தவளே !

மேலும்

நன்றி 11-Dec-2017 10:36 pm
உன் அன்பு உள்ளவரை என் சுவாசக்கடல் வற்றாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 10:33 pm
விக்னேஷ் பழனி - ப தவச்செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2017 8:57 pm

இராமேஸ்வரத்தில்
ஏழையாய் பிறந்தவனே!

பல தடைகளை தாண்டி
விடைகளை தேடி
ஊன்றி நின்றவனே!

தயக்கம் கொண்ட
மாணவர்களிடம்
இயக்கத்தை ஏற்படுத்தியவனே!

தூங்கி கிடந்த மக்களிடம்
உன் வேதங்களால்
விழிக்கவைப்பவனே!

நீ விஞ்ஞான யுகத்தில்
வலிமை மிக்க வீரியவித்து!
எங்கள் பாரதத்தில்
விலைமதிக்க முடியா சொத்து!

உன் எளிமை
வியக்கதக்கது!
உன் பெருமை
போற்றத்தக்கது!

மண்ணை திருத்தியது போதாது
விண்ணை திருத்த
சென்றுவிட்டாயா!

நீ பிரியும் போது
கண்ணீர் வரவில்லை
மனதிற்கு...

நாட்டை உயர்த்த வேண்டும்
என்ற எண்ணம் தோன்றிய
மனதிற்கு...

உன் உருவில்
ஆயிரம் கலாமை காண்கிறோம்
இங்கு!

நீ சென்ற வா

மேலும்

அருமை .இறுதி பகுதியில் திருத்தும் உண்டு 13-Aug-2017 6:53 pm
விக்னேஷ் பழனி - விக்னேஷ் பழனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2017 9:40 pm

உந்தன் பார்வை காண
மனம் கிடந்தேங்குதடி நதியே!
உந்தன் பலம் நானென்று உணர்ந்தவன்
எந்தன் பலவீனம் நீயென உணர்கிறேன் இன்று!
நதிநீரை மறந்தவன் இன்று
கானல்நீருக்காக ஏங்கித் தவிக்கிறேன் !
நெடுந்தூரம் உன்னுடன் பயணித்த காலம்
சிறு நொடியென தோன்றுதே நதியே !
நொடிப்பொழுது உன்னை காணாத இந்நேரம்
ஒரு யுகமென தோன்றுதடி அன்பே !
நீ அழைக்காத என் பெயரும் கூட
வெறும் வார்த்தையென தோன்றுதடி நதியே!
எனக்குள் இருக்கும் சோகத்தை வெளிக்காட்ட
எந்தன் ஆண்மை தடுக்கிறதே
இருந்தும் வெளிப்படும் சிறுதுளிக்கண்ணீரைத் துடைக்க
உந்தன் கைகளைத் தேடுகிறேன் நதியே !

மேலும்

நன்றி அன்பர்களே 13-Aug-2017 6:49 pm
அருமை விரைவில் நதி உங்களில் சங்கமம் அடைய வாழ்த்துக்கள் 08-Aug-2017 10:06 am
உங்கள் நதி உங்களை சேரும் வாழ்த்துக்கள் ! 07-Aug-2017 10:36 pm
அவளுக்காக சிந்தும் கண்ணீர்த்துளிகள் நிலவாக மாறி நதியில் விழுகிறது வாழ்த்துக்கள் 07-Aug-2017 10:13 pm
விக்னேஷ் பழனி - விக்னேஷ் பழனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2016 1:42 pm

பேனாவின் முனை குத்தியதால்
காகிதம் இரத்தம் சிந்தியதாம்
நீல நிறத்தில் !

மேலும்

காகிதத்தை குத்தியதால் பேனா அழுகிறது நிலநிற கணிணீராய்..... 07-Jan-2016 6:52 am
வளமான சிந்தை என்றும் இது போல் கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் 05-Jan-2016 11:56 pm
தொடரட்டும் வாழ்த்துக்கள்.......... தாம் எழுத நினைத்தது ஒன்று ஆனால் வரிகளாய் வடிக்கும் பொது தடுமாரியுள்ளீர் என எண்ணுகிறேன்....... 05-Jan-2016 4:15 pm
அருமை 05-Jan-2016 2:44 pm
விக்னேஷ் பழனி - விக்னேஷ் பழனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2016 4:22 pm

அறிமுகம் இல்லாத உன்னுடன்
அறிமுகம் கொள்ள தூண்டும் என்
மனதுக்குத் தெரியாது அனுமதி இல்லாமலே
நீ என்னை திருடிச் சென்றது !

மேலும்

அது தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 12:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
வித்யா

வித்யா

சென்னை
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (17)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே