என் பலம்
இலையுதிர் காலத்தையும் வசந்தமாக்கி
எந்தன் வாழ்வை செம்மையாக்கியவளே
என் வருத்தங்கள் அனைத்தையும்
திருத்தங்கள் செய்தவளே !
என் சோகம் தாங்க தோள் கொடுத்தவளே !
என் கண்ணீரைத் துடைக்க கரங்களை நீட்டியவளே !
என் உயிரினுள் ஓடும் உதிரம் ஆனவளே !
உன் அன்பென்னும் வெள்ளத்தினால்
எனை அரவணைத்தவளே !