குடியரசு தினம் வந்தது
குடியரசுதினம் வந்தது
மூவர்ண விளக்குகளால் நாடு ஜொலிக்க
முப்படை வீரர்கள் அணிவகுத்து நடக்க
மூத்த தலைவர்கள் யாவரும் கண்டு களிக்க
முதல் பிரஜை வணக்கங்களை ஏற்று கொள்ள
மூன்று காவல்படை தலைவர்களும் இருக்க
முக்கிய பிரமுகர்கள் பலர் அமர்ந்து ரசிக்க
மூவர்ண கொடி பெருமிதத்துடன் பறக்க
முடிவாக அலங்கரித்த வாகன அணி வந்து
மூவேந்தர் வாழ்த்த நாடு சுதந்திரத்தை கொண்டாட
முழு நாளும் மகிழ்வோடு சென்றதம்மா