காகமே

உன் மீது எனக்கு பொறாமை
யாரிடமும் அடைக்கலம் புகாமல்
எவரும் உன்னை சிறை வைக்காமல்
கிளியும் காதல் பறவைகள் போலில்லாமல்
நீயாக வலம் வருகிறாய்.

கருமை உனக்கு ஒரு பாதுகாப்பு
ஒண்றரைக் கண் உன்னுடைய சிறப்பு
கூட்ட்டமாக வாழ்வதை உன் இனத்தின்
பலம், யாரும் உன்னை விரும்பாதது
உன்னுடைய ஆயுதம்.

அடிமைத்தனம் உன் அகராதியில் இல்லை
உன் சுதந்திரம் உனக்கு ஓர் அணிகலன்
கருமை உன்னை எடுத்துக்காட்டும்'
தன்னிகரில்லாது சுறுசுறுப்பு
உன்னுடைய அலங்காரம்.

காஃமே உன் மீது பொறாமை
ஏன் என்று புரிந்ததா!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Jan-25, 9:59 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 8

மேலே