Meena Somasundaram - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Meena Somasundaram |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 6634 |
புள்ளி | : 783 |
சட்டென்று அடித்து பெய்யும் பேய் மழை
பட்டென்று வெடிக்கும் அணுகுண்டு வெடி
படாரென்று பேசும் கோபக்கார மனிதன்
திடுப்பென்று நடக்கும் சம்பவம்
எதிர்பாரா குறிக்கிடுகள் பலவும்
மனதை நிலை குலையச் செய்து
பதற்றமிக்க சூழ்நிலையை உண்டாக்கி
என்னை ஒரு வழியாக முடக்கி, உள்ளிழுத்து
தற்காலிகமாக செயலிழந்து நிற்கிறேன்..
வர வேண்டிய நேரத்த்தில் வரவில்லை
ஆய்ந்து ஓய்ந்து வேளையில் வரும் செல்வம்
எதற்காக என்று நினைக்கும் போது
மனம் வலிந்து உருகுகிறது.
எதுவேமே கிடைக்கும் போது தான் கிடைக்கும்
நம் நேரத்திற்கு வரும் என்று எண்ணுவது
எவ்விதத்தில் இலாபம், அமைதியாக
ஏற்றுக்கொண்டு வாழறேன்
இதைத்தான் விதி என்று சொல்வார்கள்
கால் கை சுகமாக இருக்கும் போது
வந்திருந்தாள் மகிழ்ச்சி கிட்டியிருக்கும்
தற்போது கால் இழுக்க கை வலிக்க
செல்வம் தேடி வருவது எதனால்
புரிந்து கொள்ள இயலவில்லை
சேர்த்துக் கொண்டு சோர்வுடன்
நிற்கிறேன் ஏனோ தெரியவில்லை.
கண்ணிலே நீர் எதற்கு?
காலமெல்லாம் அழுவதற்கு.
மனதினில் நினைவு எதற்கு?
என்றைக்கும் நினைப்பதற்கு.
உடலிலே தெம்பு எதற்கு?
வாழ்க்கையிலே போராடுவதற்கு .
அழுவதும் நினைப்பதும்
போராடுவதும் வாழ்வு என்றால்
வாழ வேண்டுமா என்ற எண்ணம்
மேலோங்க மேலோட்டமாக
முறுவல் அரும்பி மறைகிறது
வலி என்ற உணர்ச்சி
பெரிதளவில் தெரிய
மனது ஒரு காரணம்.
மன வேதனை
குமறலில் . புலமபலில்
கண்ணீரோடு வெளிப்பட.
உடலில் தோன்றும் வேதனை
காய்ச்சலாகவும் குடைச்சலாகவும்
என்று பலவிதமாகத் தோன்ற
மனித வாழ்வு அல்லலாகவும்
வல் விணையகவும் துயரமாகவும்
கடந்திட மனிதர்களின்
வாழ்வின் விதி எனக் கொள்ளலாம்,
பூ பூக்குது
பூக்கப் போகிறேன்
என்று சொல்லிக் கொண்டு அல்ல.
பூத்த பின்
என்னைப பார்க்க வா
என்று அது அழைப்பதில்லை.
பார்த்து மகிழும்
நமக்கு அது எப்போதும்
செலவு வைப்பதில்லை .
உறிஞ்சும் வண்டுக்கு
தேனை அள்ளி கொடுத்து
விலை கேட்பதில்லை .
எந்த ஒரு விளம்பரம் இல்லை
எந்த ஒரு விளக்கம் இல்லை
எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை .
இலக்கியமும் அவ்வாறே
அமிர்தம் அதுனுள்ளே
கண்டெடுப்பது நமக்குள்ளே.
பொருள் பொதிந்துள்ள
நயம் பொருந்தியுள்ள
கவிதைக்கு தேவை இல்லை
ஒலி பெருக்கியும்,ஒளி வெள்ளமும்.
முகம் காட்டி சிரித்த அழகு
இன்று
முகம் திருப்பி அலக்கழிக்கும் கோலம்
நினைக்கையில்
இது உண்மையா? அது நிழலா?
என்று தோன்ற,
சற்று நிதானித்து நோக்கின்
இதுவம் அல்ல,
அதுவும் அல்ல.
என்று கொண்டு
நேர்மையான எண்ணம்
மனதில் எழும்ப
சற்றும்
அசராமல் செல்கிறேன்
என் வழியிலே!
பரத முனிவரின் நாட்டிய சாத்திரம்
பல்கி பெருகி விதம் விதமாக
செழிக்க
ப என்பது முக பாவத்துக்கும்
ர இராகத்தை மேற்கோளிட
த தாளத்துக்கு நிற்க
பரத நாட்டியம்
ஒரு சுகானுபவ மாகத் திகிழ
சுருதியும் ஜதியும்
ஒன்று கூட
ஆரணங்கு ஆனந்தம்
மேலிட குவிந்து மகிழ்
அதிகாரம் காட்ட
அடித்து உந்த.
வீரம் வெளிப்பட
குதித்து ஆர்ப்பரிக்க
வெகுண்டெழுந்து
கனல் கணக்ளில் தெறிக்க
ஆடுகிறாள்.
கனவும் கண்டு
வெட்கி நாணி
உயிர்ப்பித்தெழுகிறாள்
நாட்டிய பெண்மணி.
பரவசத்தில் தன்னை
அறியாது கண்ணீர் மல்க
இறைவனை நினைத்து
கூத்தாடுகிறாள்.
என்னே ஓர் நாட்டியம்
ஓர் அற்புதம்
கண்டேன
பாமரன் பரிணமிக்கிறான்
உலகிலே
பணத்துடன், ஆளுமையுடன்
ஒரு வழியில்
வசதி மிக்க குடும்பத்தில்
பிறந்ததாலே!
.
நல்வழியில் செல்லாமல்
கோணலாகப் போகிறான்
ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும்
அவனுக்குத் தெரிந்த
தடத்திலே!
பணம் ஒன்றே குறிக்கோளாக
பண்பை என்றும்
நாடாமலே
பயணிக்கிறான் வேகமாக
விளைவறியாமலே!
அழியும் செல்வம்
எத்தனை நாளைக்கு
என்று அறியாமலே
வாழ்கிறான் ஒரு
பதராகவே!
பூ ஒன்று கண்டேன்
ஒளி வெள்ளத்தில்
பொலிவுடன் நிமிர்ந்தது
என்னைப் பார்த்து.
புன்னகையுடன் குவிந்தது
அழகாக .
நெருங்கினேன் ஒலியெழுப்பாமல்
மெதுவாக.
மருண்டது அண்மையில்
என்னைக் கண்டு.
பறித்துப் பிரித்து ஒடித்து
விடுவேனோ என்றாகி
குனிந்தது அருண்டு
சற்று நேரம்.
மனிதனின் நோக்கம்
மலருக்குப் புரிந்தும் புரியாமல்
வன்மையின் துடிப்பை
மென்மை உணர
நல்லவனும் தீயவனாகிறான்
ஒட்டு மொத்தமாகவே!
நண்பர்கள் (41)

செல்வா பாரதி
விளாத்திகுளம்(பணி-சென்னை)

மோகனா இராஜராஜேந்திரன்
TAMILNADU

svshanmu
சென்னை

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
முத்துலாபுரம் தேனிமாவட்
இவர் பின்தொடர்பவர்கள் (41)

க உதய்
Kadayanallur in NELLAI

பிரான்சிஸ் சேவியர்
கோவை
