செல்வா பாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வா பாரதி
இடம்:  விளாத்திகுளம்(பணி-சென்னை)
பிறந்த தேதி :  29-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Oct-2013
பார்த்தவர்கள்:  459
புள்ளி:  154

என்னைப் பற்றி...

என் பெயர் இ.செல்வகுமார்.பாரதி பக்தன்,அவர் வந்து கேட்கவா போகிறார் எனும் தைரியத்தில் பாரதியை பெயரில் சேர்த்துக் கொண்டேன்.ஆங்கில கலப்பு இல்லாமல் அழகு தமிழில் கவி எழுதி பழக ஆசையோடு வந்திருக்கிறேன்.பிழைகளை சுட்டிக் காட்டி திருத்திடுங்கள்.நன்றி!..

என் படைப்புகள்
செல்வா பாரதி செய்திகள்
செல்வா பாரதி - கோபி சேகுவேரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2015 9:11 pm

பாட்டியின் முகம் முழுவதும்
கோட்டோவியங்கள்
காலத்தின் சுருக்கம்.

----------

உடைந்த பிறகும்
கம்பீரமாக இருக்கிறது
புகைப்படத்தில் தாத்தாவின் மீசை.

----------

அப்பாவிற்கு தெரியாமல்
அம்மா தரும் பணம்
அன்பால் அச்சிடப்படுகிறது.

----------

எனக்கு முப்பது வயதாகியும்
இன்னும் குறையவேயில்லை
அப்பாவின் அதட்டலும் மிரட்டலும்.

----------

தீபாவளி பொங்கலன்று
புத்தாடை அணிகையில்
அதில் தாய்மாமன் வாசம்.

----------

என் பால்யத்தை நினைக்கையில்
எங்கிருந்தோ வந்து விழுகிறது
அத்தையின் தாவணி.

----------

மார்கழி மாதம்
மொட்டைமாடி நிலவை ரசிக்கமுடியவில்லை
நீயின்றி நான்.

----------

மேலும்

நன்றிகள் தோழரே.... 30-Dec-2015 4:29 pm
நன்றிகள் தோழரே.... 30-Dec-2015 4:29 pm
அப்பாவிற்கு தெரியாமல் அம்மா தரும் பணம் அன்பால் அச்சிடப்படுகிறது ரசித்தேன் ... 29-Dec-2015 2:12 pm
அழகான படைப்பு..ரசித்தேன்.. 29-Dec-2015 1:45 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 25 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2015 1:15 am

காட்சிப் பிழைகள் ......13
***************************************

மின்சாரம் அறுந்த நள்ளிரவில்
நான் நிலவுக்காக காத்திருந்தேன்
நீயோ ஒரு மின்மினிப்பூச்சியென
என் தோள்களில் அமர்ந்தாய் .

கருத்திருந்த மேகம்
உன் கார்கூந்தலை காட்டியபடி
என்னையும் மிதக்கச் செய்து
மிதந்து போனது .

காதலின் பேரலையில்
உன் காலடியில் சேர்ந்தேன்
எனை அள்ளிக்கொண்டு போகும்
பரிசல் நீ.!

வெளிச்சம் மின்னிய என் கடலில்
நிலாவென நீ மிதந்திருந்தாய்
கரை ஒதுங்கிய அலையாவும்
காதல் நுரைத்திருந்தது .

என் மதியங்கள்கூட உன்
மதிமுகம் காண ஏங்குகிறது !
இந்தச்
சூரியனை என்ன செய்வது ?

மௌனம்தான் உன்
மொழியென

மேலும்

இந்தப் பதிவினை பகிர்ந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி . 28-Jan-2016 7:32 am
மிகவும் நன்றி நண்பரே தங்களது உணர்வுபூர்வமான கருத்திற்கும புரிதலுக்கும் வாழ்த்திற்கும். ரசிப்பிற்கும் நன்றி ராம் 25-Jan-2016 2:08 pm
சற்றே வலிக்கிறது என் காதல் நினைவுகள் இந்த கவிதையால் ரசித்தும் கண்ணீர் வந்தது ஏன் என்று புரியவில்லை 25-Jan-2016 9:55 am
உங்கள் ரசிப்பிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி அமுதா அவர்களுக்கு. 18-Jan-2016 5:36 pm
மனோ ரெட் அளித்த படைப்பில் (public) krishnadev மற்றும் 24 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Dec-2015 5:53 am

சட்டையில் இருப்பது
ஓட்டைகள் அல்ல!
அவனது தலையெழுத்துகள்.

அவனுக்கு நம்மை
யாரென்று தெரியாது!
அவன் அழுக்குகளுக்கு
நம்மை நன்றாகவே தெரியும்!

நிலாச் சோற்றையும்
உப்பிலாச் சோற்றையும்
அவன் கேட்கவில்லை.
காக்கை விரட்டும்
எச்சில் கைகளைக் கேட்கிறான்.

யாருக்காவது கவலை இருக்கிறதா?
நம் எல்லோருக்குமே
வயிறு நிரம்பிவிட்டது.
இனி பசியைப் பங்குவைக்க
அவன் யாரிடம் செல்வான்?

எல்லாப் பசியையும்
மிச்சம் வைக்காமல்
தினமும் அவனே உண்கிறான்.
பசியின்றிப் புசிப்பவர்கள்
அவன் பசியைக் கொஞ்சம்
புடுங்கித் தின்னுங்களேன்!

வறுமை இல்லையென்ற
பெருமையைப் பிறகு பாடுவோம்!
அவனைக் கடித்து ஏமாறும்
கொசுவுக்கு ம

மேலும்

உணவில்லாத போதும் பருக்கை அளவு கோவமின்றி உம்மென்று இருக்கிறானே! கோபம் வந்தால் உணவை வீசி எறிபவர்களே அவனைப் பாருங்கள். super 26-Oct-2016 3:53 pm
// பசியின்றிப் புசிப்பவர்கள் அவன் பசியைக் கொஞ்சம் புடுங்கித் தின்னுங்களேன்! // ஒரு பானைக் கவிதைக்கு இந்த ஒரு கவிதை பதம் அருமை மனோ 24-Jan-2016 4:58 am
சமூக அவலங்களில் ஒன்றான பசியை காட்டும் வரிகள் அருமை மனோ ! 18-Jan-2016 9:53 am
நன்றி தோழி...மனம் திறந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி 28-Dec-2015 9:26 am
சுஜய் ரகு அளித்த படைப்பில் (public) krishnadev மற்றும் 23 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2015 2:23 am

என்
குடையின் ஏக்கம்
நீ மழை பொழிவதில்
அல்ல
வெயில் சிந்தாதிருப்பதில்

உன்
அழகின் அழகினூடெ
சிறை வைக்கிறாய்
இனி
மெள்ளச் சாகும்
என் காதல்

நீ காதல்
தெருக்களில்
கனவுப் பூக்கள்
விற்பவள்

----------

உன்
ஆழ்துளைப் பார்வையில்
விழுந்து
மூர்ச்சையாகின்றன
பருவக் குழந்தைகள்

பூக்கள்
அழைக்காவிடினும்
வண்டுகள்
வழி பிறழ்வதில்லை

உன் தாவணி
உனக்கு சிறகு
எனக்கு சிறை

----------

விழுவதெல்லாம்
எரிந்துபோனால்
தீ
என்ன செய்யும்

மழையின் வழியில்
மிதந்து கெட்டால்
மழை
என்ன செய்யும் ?

உன் வழியில்
நான்
பூக்கள் ஏந்தி நிற்கவில்லை
முட்கள்
பொறு

மேலும்

// உன் வழியில் நான் // பூக்கள் ஏந்தி நிற்கவில்லை முட்கள் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன் // வித்தியாசமான சிந்தனை பூக்கள் ஏந்தும் காதலர்களை விட முட்கள் பொறுக்கும் காதலர்களைத் தான் பெண்கள் விரும்புவார்கள் ஒவ்வொன்றும் அருமை சுஜய் 24-Jan-2016 2:28 am
விழுவதெல்லாம் எரிந்துபோனால் தீ என்ன செய்யும் ? ....இப்படி வார்த்தைகளால் கவிதை வசியம் செய்தால், வாசிப்பவர் மனது என்ன செய்யும் ? வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 2:15 pm
வலி பேசாத கவிதை கவிதையாவதில்லை வலி தராத காதலும் காதலாவதில்லை.... கவிதைக்கு பொய் அழகு பல நேரங்களில்... இது போன்ற உண்மையும் அழகு சேர்க்கிறது சில நேரங்களில் ! 18-Jan-2016 9:44 am
வருகையிலும் இனிய கருத்திலும் மகிழ்கிறேன் தோழரே !!! 26-Dec-2015 7:02 am
கார்த்திகா அளித்த படைப்பை (public) கபாலி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Jan-2015 2:12 am

திறந்த வானில்
தன்னை பிரசவித்துக்கொண்ட
வெண்ணிற இறகு
காற்று நடைவண்டியில்
கை தொடும் நேரம்..

துளையிடா பச்சை
குருத்து மூங்கில்களின்
உடல் கருகும் கதகதப்பில்
கூதல் காற்றை வரவேற்கும்
காடுகளின் நாயகன் ..

மெய் தீண்டிய அரவமென
நச்சு நீலம் விளைந்த
நாடோடி மனிதக் கூட்டங்கள்

பொழுதுகள் தொலைத்த
நாட்களின் பயணத்தில்
இரவும் பகலும்
வேறில்லைதான்
பித்தர்களின் ராஜ்யத்தில் ..

தொலை தூர அசைவில்
பொன் மஞ்சளில் மின்னிய
அவள் வியர்த்தாள்
உடைந்த காதல்
விலை கூறிய
அமிலத்துளிகளில் !

இறகு அதிரும்
புழுதிப் பரவலில்
ஒட்டிய துகள்களில்
மேலும் கீழுமாய்
சாதியத் திட்டுக்கள்

மேலும்

முகச் சாயம் பூசாத புதுக்கவிதை! பட்டிக்க படிக்க தானாகவே முகச்சவரம் செய்து கொள்கிறது முகம். 08-Jan-2016 6:54 am
மிக்க நன்றி நட்பே.... 06-Jun-2015 11:41 am
நேர்த்தியான கவிதை ரொம்ம நல்லாயிருக்கு 06-Jun-2015 11:07 am
மிக்க மகிழ்ச்சி நட்பே..... 22-Feb-2015 2:50 pm
செல்வா பாரதி - முரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 6:45 pm

மெல்லத் தகர்க்க நமை பிரிவினைகள்
தள்ளப் பாக்குது பள்ளத்தில் - இவை
தெள்ளத் தெளிவி னுடனே வேரில்
கிள்ளி எறிந்தே களைவோம்

உள்ளத் துறதி கொள்வோம் இளைஞர்
உந்தக் கிளம்பி எழுவோம் - இனி
எமக்கு எங்கும் இணையில்லை என
ஏற்றம் பெறவே உழைப்போம்

நாட்டின் வளம் பெறுக்குவோம் சாதி
நாற்றம் களைவோம் மேதியில் சூழ்
நல்லன வெல்லம் நம் வீதியில்
சில்லென உலாவரச் செய்வோம்

கனிவளம் நதிவளம் தாதுவளம் பல
இனி நம்வளம் செழிக்கவோ - கொள்ளை
தனி மனிதர் கொழிக்கவா தடுத்து
இனி தன்நிலை உயர்த்துவோம்

மழலையற்கு இனிதாய் ஊட்டுவோம் கலை
பலவும் ஊடே ஒற்றுமையும் தேசப்
பற்றினையும் - எவற்கும் கீழ் நாமில்லை
வெற்ற

மேலும்

நிதானத்தோடு படைக்கப்பட்ட நிதர்சனங்கள் நெஞ்சை அள்ளும் ஓசையில் நன்மையை நாடிசெல்கிறது அருமை அய்யா மிக மிக அருமை ....... 13-Feb-2015 2:29 pm
உள்ளத் துறதி கொள்வோம் இளைஞர் உந்தக் கிளம்பி எழுவோம் - இனி எமக்கு எங்கும் இணையில்லை என ஏற்றம் பெறவே உழைப்போம் இளமை எண்ணம் ...அருமை 11-Feb-2015 11:23 pm
வளமான சிந்தனை... நல்ல பொருள் வடிவத்தில் நாடு சிறக்க வழி வகுத்துக் காட்டுகிறது படைப்பு... வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழரே.. 09-Feb-2015 1:16 am
நல்ல வரிகள் ஐயா ...படைப்பை சிறப்பாய் ரசித்தேன் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் .. 08-Feb-2015 7:22 pm
செல்வா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 4:48 pm

ஓர் அகண்ட அகழியில்
முதலை படுத்திருந்தது
ஆண்களை மட்டும் விழுங்குவதற்காக!..

எதிரே
கூட்டம் கூட்டமாய் ஆண்கள்
முதுகில் பெரிய மூட்டையுடன்!.

தாவு தீர்ந்த ஒருவன்
தவறி விழுந்த போது
தெறித்து சிதறின
வண்ணம் பூசப்படாத
எண்ணங்கள்..

அடுத்த மாத வாடகை
ஆயிரம் ரூபாய் அதிகம்
வீட்டு உரிமையாளரின் உரிமை
வீட்டை விட பெரிதாய் இருந்தது!...

ஊதியத்தில்
ஐந்நூறு பிடித்தம் செய்யப்படும்
செத்தபின்பு கண்டிப்பாய் கொடுத்துவிடுவோம்
முன்னறிவிக்கப்பட்ட மரணம்!...

முன்பு
காதல் மட்டும் போதுமெனற்றவள்
இப்போது
கடைசி சொல்லை மட்டும்
மாற்றி உச்சரித்திருந்தாள்….


‘யான வாங்கிட்டு வாப்பா’
என்ற மகளுக்

மேலும்

நன்றி தோழமையே.... 07-Feb-2015 8:40 pm
மிக்க நன்றி தோழா.... 07-Feb-2015 8:37 pm
பாராட்டில் மிகவும் மகிழ்ந்தேன்..மிக்க நன்றி... 07-Feb-2015 8:37 pm
மிகவும் அருமையான படைப்பு ! 07-Feb-2015 8:02 pm
செல்வா பாரதி - ckவசீம்அன்வர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2015 3:48 am

ஏதாவது ஒன்றை
எழுதி விட வேண்டுமென்று
துடிக்கும் என் பேனா....
அதன் துடிப்பே
இந்த தொடக்கம்...

கண்டதையும்
எழுத முடியாமல்
கண்டபடி கசக்குகிறேன்
மூளையை...

அங்கும் இங்கும்
தலை திருப்பி
தவியாய் தவிக்கிறேன்...

இரவும் பகலும்
உணரக்கண்டேன்
சிந்தனையில்
மாறுபடும் செயல்திறனை..

ஒரு படைப்பு சிறக்க
பார்வைகள் வேண்டும்
பார்வைக்கும் மேலாக
கருத்துரை வேண்டும்
அதன் பின்பு
அங்கீகாரம்
கவிஞன் என்றொரு அந்தஸ்து
இவைகளை தாண்டமுடியாமல்
தவிக்குது
படகு போல் என் படைப்பு...

விரிந்த வானில்
பறக்கும் பறவைகள்
அது போல்
என் படைப்புகளும்
சிறகு விரிக்க
ஆசைகொள்கின்றேன்...

இடைவிடாத உழைப்பு
இடை

மேலும்

அருமைத் தோழரே! 24-Feb-2015 5:44 pm
சிந்தனை அழகு .... 07-Feb-2015 9:47 pm
தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றி நட்புகளே... 06-Feb-2015 8:50 pm
எல்லோர் எண்ணத்தையும் ஒத்த சிந்தனையால் சிறப்பு ! சிறகு விரித்தே வானமுழுதும் கவிபரப்பு! ஆதவன் கடலும் அடுத்தவர் பார்வைக்காக காத்திருப்பதில்லை! யார்? உறங்கி விழித்தாலும் எதிர்கொண்டு விடிவதில்லை பொழுது ! சமூக அவலத்தை சாடி படைக்கும் கவியால் பார்க்கணும் பழுது ! 06-Feb-2015 8:05 pm
செல்வா பாரதி - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2015 9:14 pm

பரந்த நம் தேசத்திலே
பல பேரை ஒன்றிணைத்து
பல கலைகள் கற்கவைத்து
பயன் பெறவே செய்திடுவோம்

பன்னாட்டு ஆடைகளை உடுத்தாமல்
பண்போடு கதராடை உடுத்திடுவோம்
பாசத்தோடும் பரிவோடும் பணிவோடு
பண்பாட்டை நிலை நிறுத்துவோம்

பல்கலையில் படித்துவிட்டு
பம்பரமாய் சுழன்ற நீயோ
படித்த நம்தேசம் விட்டு
பல தூரம் செல்வதேனோ..!

படித்த நாம் ஒன்றுசேர்ந்து
பாரத தேச விவசாயத்தை
பாத்தி பாத்தியாய் வளர்த்து
பார் போற்ற வைத்திடுவோம்

பாமரறும் வியக்கும் வண்ணம்
பாதையெல்லால் நம் பெயரை
பறை சாற்ற விழித்தெழுவோம்
பாரதம் போற்றுவோம் வளர்ப்போம்

மேலும்

தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி..! 14-Feb-2015 5:29 pm
பாரதம் போற்றும் "ப"வரிசை" பா " மிகவும் சிறப்பு தோழியே ......... 14-Feb-2015 4:56 pm
நன்றி ப்ரியா...! 10-Feb-2015 7:32 pm
மிக மிக அருமைத்தோழி.......வெற்றிப்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! 10-Feb-2015 3:57 pm
செல்வா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 1:36 pm

இன்று நான் அகதியில்லை!
பூக்கள் சிரித்துக் குலுங்கும்
நாட்கள் அழகாய் கழியும்
அழகிய தேசம் எனக்குண்டு
ஆனால் நாளை?...

உழவனின் உழைப்பை
புழுவென்று மதித்தால்
உறுதியாய் இப்படி இருக்காது.

மனதுக்குள்ளிருக்கும்
மதமும் சாதியும்
வீதியில் இறங்கி வேட்டையாடினால்
கண்டிப்பாய் இப்படி இருக்காது

எந்நாட்டுப் பொருளை
ஏளனமாய் நினைத்து
அந்நியன் பாதம் ஆராதித்தால்
நிச்சயம் இப்படி இருக்காது

மண்புழுவின் நன்றி
கொஞ்சமிருந்தாலும்
அகதியில்லை நான்
அழகிய தேசம் எனக்குண்டு!...

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 05-Feb-2015 4:00 pm
அய்யாவின் வாழ்த்தில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி அய்யா... 05-Feb-2015 4:00 pm
மிக அருமையான கருத்துக்கள் கொண்ட வரிகள் வாழ்த்துக்கள 05-Feb-2015 3:12 pm
உண்மையான வரிகள் ....நன்று தோழமையே .... 05-Feb-2015 3:09 pm
செல்வா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 3:18 pm

குழந்தைக்குப் பெயர் திரிசா -பின்
தேயாதோ தமிழும் சிறுசா?..
கானலின் மேல் மையல் கொண்டான் - அதில்
ஊனமாக்கித் தமிழைக் கொன்றான் ...

கொஞ்சம் நீரும்
குப்பைகள் நிறையவுமாய்
கூவமானது தமிழ் ...
முத்தப் போராட்டத்தில்
முதல் ஆளாய் தமிழன் ...

நிராகரிக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றாக
நிர்கதியாய் தமிழன்னை ...
மோனலிசா ஓவியத்துக்கு
முந்தானை வரைகிறான்
முத்தமிழ்ப் புலவன்...

ஈழமும் காவிரியும்
எப்பொழுதும் வேண்டும் ...
இவர்கள் தமிழரென்று
இறுமாப்பு கொள்ள...

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட தமிழரை நினைத்துவிட்டால்

மேலும்

நன்றி தோழா... 05-Feb-2015 9:24 pm
தோழரே அருமை. வாழ்த்துக்கள் 05-Feb-2015 9:04 pm
மிக்க நன்றி அய்யா... 02-Feb-2015 11:53 am
//நிராகரிக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றாக நிர்கதியாய் தமிழன்னை ... // உண்மையான வரிகள் ! நல்ல படிப்பு செல்வா பாரதி ! 02-Feb-2015 10:01 am
செல்வா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2015 4:27 pm

கண்கள் அயர்ந்த வேளையில்
இதயம் வரைந்த ஓவியம்
கனவில் மட்டும் சாத்தியப்படும்
தூர தேசம்!...

முகிலுக்கேன் நீரென்று
புவி சேர்ந்த மழையில்
வண்ணமேறிய கரிசல்
பச்சையாகிப் போக
பாதைக்காக பிடுங்கப்பட்ட களைகள்
பாவமாய்ப் பார்க்க
மீண்டும் நட்டு விட்டேன்
மேலுமோர் கனமழை!...

சாரல்கள் சங்கமித்து
ஓடிச் சென்ற ஊருணியில்
நாரைகளின் பாடலுக்கு
இசையமைக்கும் தவளை!

தண்ணீரைக் கிழித்து
பாம்பு வரைந்த ஓவியம்!

அழகிப் போட்டியில்
வென்ற மமதையில்
உயரப் பறக்கும் ராணித் தட்டான்!...

நீரின் மேல் நடந்து
குறி சொல்லும் பூச்சிகள்!

இப்படி
அழகின் ஆக்கிரமிப்பில்
அழகான பூமி அது

புகையில்லா

மேலும்

நன்றி தோழமையே... 30-Jan-2015 7:07 pm
//முகிலுக்கேன் நீரென்று புவி சேர்ந்த மழையில் வண்ணமேறிய கரிசல் பச்சையாகிப் போக பாதைக்காக பிடுங்கப்பட்ட களைகள் பாவமாய்ப் பார்க்க மீண்டும் நட்டு விட்டேன் மேலுமோர் கனமழை!... // தாலாட்டும் வரிகள் ! 30-Jan-2015 6:38 pm
மிக்க நன்றி தோழா..கருத்தால் மகிழ்ந்தேன். 30-Jan-2015 6:23 pm
அருமை.. இப்போ முழுவதும் வாசிச்சிட்டேன்... 30-Jan-2015 6:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (187)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (188)

Jegan

Jegan

திருநெல்வேலி
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (188)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே