நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி

பரந்த நம் தேசத்திலே
பல பேரை ஒன்றிணைத்து
பல கலைகள் கற்கவைத்து
பயன் பெறவே செய்திடுவோம்

பன்னாட்டு ஆடைகளை உடுத்தாமல்
பண்போடு கதராடை உடுத்திடுவோம்
பாசத்தோடும் பரிவோடும் பணிவோடு
பண்பாட்டை நிலை நிறுத்துவோம்

பல்கலையில் படித்துவிட்டு
பம்பரமாய் சுழன்ற நீயோ
படித்த நம்தேசம் விட்டு
பல தூரம் செல்வதேனோ..!

படித்த நாம் ஒன்றுசேர்ந்து
பாரத தேச விவசாயத்தை
பாத்தி பாத்தியாய் வளர்த்து
பார் போற்ற வைத்திடுவோம்

பாமரறும் வியக்கும் வண்ணம்
பாதையெல்லால் நம் பெயரை
பறை சாற்ற விழித்தெழுவோம்
பாரதம் போற்றுவோம் வளர்ப்போம்

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (5-Feb-15, 9:14 pm)
பார்வை : 1305

மேலே