பொன்மாலையோ யார்நீ சொல்

மின்னும் விழியிரண்டும் நீலநிற ஓவியமோ
முன்னுதட்டில் முத்துக்கள் மோகனம் பாடுதோ
புன்னகை பூக்கும் புதுமையெழில் தோட்டமோ
பொன்மாலை யோயார்நீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-25, 4:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே