அவள் கொழுசு
💃💃💃💃💃💃💃💃💃💃💃
*அது வேறென்ன*
*செய்யும்?*
படைப்பு ; *கவிதை ரசிகன்*
குமரேசன்
💃💃💃💃💃💃💃💃💃💃💃
எல்லா பெண்களும்
கொலுசு போட்டப்போது
கால் அழகாக இருந்தது.....
நீ போட்ட போது தான்
கொலுசே ! அழகா இருந்தது....!.!!
முத்து வைத்த
கொலுசு என்றாய்....
இல்லை இல்லை
அது கொடுத்து வைத்த கொலுசு....
நினைக்கும் போதெல்லாம்
முத்துக்களால்
உன் கால்களை
முத்தமிட்டு கொள்ளுமே....!
முத்து விரைவில்
விழுந்து விடும் என்று
சொல்லி கவலைப்பட்டாய்...
அப்போதுதான்
என்னில் ஏக்கம் எழுந்தது
"அந்த முத்து விழும்போது
அந்த இடத்தில்
நாம் முத்தாக மாட்டோமா" என்று....
உன் காலைச் சுற்றிக்
கொண்டிருப்பது
கொலுசு மட்டுமல்ல
என் மனசும் தான்....
நடக்கும் போது
கொலுசிலிருந்து
அதிக சத்தம் வருகிறது என்று
சலித்துக் கொண்டாய்....
நீ நடந்தால்
தூரத்திலிருக்கும்
இதயங்களே!
முணுமுணுத்துக் கொள்ளும்
உன்னைத்
தொட்டுக் கொண்டிருக்கும்
அந்த கொலுசு பாவம்
வேறு என்ன செய்யும் ?
*கவிதை ரசிகன்*
💃💃💃💃💃💃💃💃💃💃💃